Friday, February 29, 2008

கடையநல்லூரரில் முஸ்லிம்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் தடி அடி நடத்தி தாக்குதல் நடத்தியதை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது!

கடையநல்லூரரில் முஸ்லிம்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் தடி அடி நடத்தி தாக்குதல் நடத்தியதை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது. சம்மந்தப்பட்ட போலீசார் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கின்றது.

Thursday, February 28, 2008

குர்ஆனில் கருவளர்ச்சி! -1-

கருவளர்ச்சியில் காணப்படும் படிநிலைகளில் கரு எவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்து மனித உருவைப் பெறுகிறது என்பதற்கு குர்ஆனில் ஆதாரமில்லை என முன்வைக்கப்படும் வாதத்தையும். விலங்கிலிருந்து மனிதன் தொன்றினான் என்ற கருவியல் சான்றிதழையும் குர்அன் முற்றாகமறுத்து நாத்திக வாதத்திற்கு சாவு மணி அடிக்கிறது அல்குர்ஆன்.
நாத்திகச் சிந்தனையில் வெளிப்படும் ஐயத்தைப் போக்கி விலங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை எனும் தன்னுடைய கூற்றை நிறுவிக் காட்ட கருவியல் குறித்த தன்னுடைய ஆழ்ந்த ஞானத்தை கீழ்க்காணும் வசனங்களில் ஓங்கி ஒலிக்கிறது திருமறைக் குர்ஆன்!.
அருள்மறை குர்ஆன் கூறுகிறது:
'பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம், பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டம் ஆக்கினோம், பின்னர் அத்தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம், பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம், பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன:; (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.'(அத்தியாயம் 23 ஸுரத்துல் முஃமினூன் - 12 முதல் 14 வரையிலான வசனங்கள்.)
கருவியலில் காணப்படும் படிநிலைகள் என்னவென்றும், அந்தப் படிநிலைகளில் கரு எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்றும் திருமறைக்குத் தெரியவில்லை என்பதால் அதன் கூற்றைப் பொருட்படுத்த வேண்டிய தில்லை என இதற்கு மேலும் யாரேனும் எண்ணம் கொள்ளலாமா? அப்படி யாரேனும் எண்ணிக் கொண்டால் அவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்று நம்மால்தான் ஏற்க இயலுமா? என்ன கூறுகிறது இந்த வசனங்கள்?.
நூற்றுக் கணக்காண வருடங்கள் பற்பல விஞ்ஞானிகளின் இடைவிடாத உழைப்பால் ஆய்வுக் கூடங்களில் கருவுற்று நுண்ணோக்கியால் பிரசவம் பார்த்து நவீனஅறிவியல் உலகால் மட்டுமே ஈன்றெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிநவீன கருவியல் கண்டுபிடிப்பையல்லவா இம்மாமறைக் குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி நிற்கிறது! இதற்கீடாகவா மற்றொரு அற்புதம் இப்பேரண்டத்தில் காணப்போகிறது. (வரும்....)

Monday, February 25, 2008

நெல்லிக்குப்பத்தில தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இனைந்து நிதி உதவி

சமீபத்தில் நெல்லிக்குப்பத்தில் அவுலியா நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு வீடுகள் முற்றிலும் நாசமாகி பலத்த சேதமடைந்தன. லட்சக்கணக்காண உடமைகளை இழந்து மக்கள் பரிதவித்து நின்றனர். இச் செய்தி கிடைத்ததும் நெல்லிக்குப்பம் நகர ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் களத்திற்கு விரைந்து நிவாரண பணிகளிளும் நிவாரண உதவிகளிளும் ஈடுப்பட்டனர், தொடர்ந்து ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இனைந்து பாதிக்கப்பட்டவரகளுக்கு கடந்த 24.02.2008 அன்று நெல்லிக்குப்பம் அர்ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து பாதிக்கபப்பட்ட 12 குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 8000 வீதம் வழங்கப்பட்டது. மேலும் பொருள்கள் மட்டும் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 5500 வீதம் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இந்த நிதி உதவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல பலனை தர ஏக இறைவனிடம் நாம் இறைஞ்சுவோமாக!.

Friday, February 22, 2008

Health - Important


Reduce the amount of TEA you consume Do not eat bread which has only JUST been toasted Keep your distance from hand phone CHARGERS Drink more WATER in the morning, less at night Do not drink coffee TWICE a day Reduce the amount of OILY food you consumeBest sleeping time is from 10pm at night to 6am in the morning Do not have HUGE meals after 5pm Do not take alcohol Do not take pills with COOL water Do not lie down immediately after taking medicine before sleeping Getting LESS than 8 hours of sleep affects your health People used to napping will not get old easily When battery is down to the LAST grid/bar, do not answer the phone The radiation is 1000 times Answer the phone by LEFT ear It'll spoil your brain directly by using right ear Do not use headphones/earphone for LONG period of time Rest your ear awhile after 1 hour Forward this to friends whom you CARE about

ஐக்கிய தவஹீத் ஜமாஅத்தின் ஆம்புலன்ஸ் புவனகிரியில்!

ஐக்கிய தவஹீத் ஜமாஅத்தின் ஆம்புலன்ஸ் தற்போது கடலூர் மாவட்டம் புவனகிரியில் இருக்கிறது. அவசர தேவைக்கு தொடர்புக்கொள்ளவும்.
செல்: 9443402576, 9994796665, 9443986713

Tuesday, February 19, 2008

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பரங்கிப்பேட்டையில் மார்க்க விளக்க தெரு முனை பிரச்சாரம்!

கடந்த 16.06.2008 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பரங்கிப்பேட்டை டில்லி சாஹிப் தர்கா வளாகத்தில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகமார்க்க விளக்க தெரு முனை பிரச்சாரம் நடைப்பெற்றது. கூட்டத்தில் மவ்லவி. அப்துல் காதிர்;;;; மதனி சமூக தீமைகள் என்ற தலைப்பிலும், ஆலிமா ஹமீதுன்னிசா ஸபர் மாதம் ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் திரளாக பெண்களும் ஆண்களும் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். இதற்கு முன் கடந்த 14.02.2008 வியாழக்கிழமை காலையில் மதரஸா மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை நகர துனைத்தலைவர் ஐ. ஹபீப் முஹம்மது பரிசளித்து சிறப்புரையாற்றினார்.





Sunday, February 17, 2008

நெல்லிக்குப்பத்தில் பயங்கர தீ விபத்து! 17வீடுகள் நாசம்!! 15 வீடுகள் பலத்த சேதம்!

வரியோர்கள் அதிகம் வாழும் பகுதியான குடிசைப் பகுதிகளில் அடிக்கடி ஏதோ ஒரு காரணத்தால் தீ விபத்துக்கள் ஏற்படுவதும் ஏழைகள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. அதேப்போன்று சமீபத்தில் நெல்லிக்குப்பத்தில் அவுலியா நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 17 வீடுகள் முற்றிலும் நாசமாகி 15 வீடுகள் பலத்த சேதமடைந்தன லட்சக்கணக்காண உடமைகளை இழந்து மக்கள் பரிதவித்து நிர்கின்றனர். இச் செய்தி கிடைத்ததும் நெல்லிக்குப்பம் நகர ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்களத்திற்கு விரைந்து நிவாரண பணிகளிளும் நிவாரண உதவிகளிளும் ஈடுப்பட்டனர், தொடர்நது ஈடுப்பட்டும் வருகின்றனர்;. ஏதிர்காலத்தில் இதுப்போன்ற தீ விபத்துக்கள் ஏற்படா வண்ணம் வீடுகளை அமைத்து தர ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முடிந்த உதவிகளை செய்ய முயற்சிகளை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சொந்தங்களின் உதவிக்கரங்களை எதிர்நோக்குகின்றது. தொடர்பிற்கு : இசட். சாஹுல் ஹமீது, ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மாவட்ட பொருளாளர்: 9894897890,முஹம்மது யூசுப், நிர்வாகி, அர்ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசல், நெல்லிக்குப்பம். 9894234848