



ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் ITJ சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி ITJ நகர செயலாளர் P.M.அப்துல்ஹமீது தலைமையில் S.M.J. அப்பார்ட்மண்ட் வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைகழகம் பேராசிரியர் DR. S. அஜ்மல் கான் அவர்கள் கலந்துக்கொண்டு இலவச நோட்டு புத்தகம் வழங்கினார். மற்றும் ஆலீமா ஹமீதுன்னிசா அவர்கள் சமூக தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் A.கலீமுல்லாஹ், நகரத்தலைவர் I . ஹபீப் முஹம்மது மற்றும் கிளை நிர்வாகிகள், பொது அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர். இறுதியாக அப்துல் அலீம் நன்றியுறையாற்றினார்.