Friday, March 7, 2008

பரங்கிப்பேட்டடையில் ஐ.டி.ஜே மதரஸா மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது!

பரங்கிப்பேட்டடையில் 08.03.2008 அன்று ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மதரஸா மாணவ மாணவிகளுக்கு மாதாந்திர பரிசுகளை சவுதி அரேபியா ஜிந்தா முன்னாள் பி.எம்.எ தலைவர் ஜி.அப்துல் சமது வழங்கினார். மதரஸா மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இறுதியாக நகர ஐ.டி.ஜே செயலாளர் பி.எம்.அப்துல் ஹமீதுஅவர்கள் நன்றியுரை கூறினார்.

வேண்டாமே மௌலீது பாத்திஹா!




Thursday, March 6, 2008

இயற்கையும் செயற்கையும்

இயற்கையில் நானறிந்தது இரு வகை
ஒன்று தானாகவே அமைந்த இயற்கை
மற்றது மனிதன் கற்பனையில் உருவாக்கிய இயற்கை
எதிர்மறை குணம் கண்டுபிடித்த செயற்கையான இயற்கை

பூனை குறுக்கே செல்வது இயற்கை – அதனால்
வீணே காரியம் நிறுத்துவது செயற்கை
வீட்டில் பூனை குறுக்கிடும் ஆயிரம் முறை
ரோட்டில் ஒருமுறை குறுக்கிட்டாலே அது சறுக்கலாம்

எங்கே செல்கிறீர் என கேட்பது இயற்கை – சாவின்
சங்கே ஊதியது போல் அஞ்சுவது செயற்கை
மனதில் வெள்ளையை போற்றும் மனிதன்
உடையில் வெள்ளையை தரித்திரம் என்கிறான்

கல்லில் கால் தடுப்பது இயற்கை
முள்ளைபோல் உதறாமல் அல்லாடுவது செயற்கை
புல்லுருவிகள் கோள் சொல்வது இயற்கை
புல்லைபோல் எறியாமல் தோள்சுமப்பது செயற்கை

காக்கை கரைவது இயற்கை
விருந்தை எண்ணி கருமி கரைவது செயற்கை
மூக்குக் கண்ணாடி உடைவது இயற்கை
மூக்கே உடைந்தது போல் அலறுவது செயற்கை

தலையில் பல்லி விழுந்தால் இயற்கை
தலையே போனதுபோல் அழுதால் செயற்கை
ஒன்றிலிருந்து ஒன்பதுவரை எண்கள் – இயற்கை
அதில் சில அதிர்ஷ்டம் என்பது செயற்கை

செவ்வாய் தோஷம் - எதிர்காலத்தின் மோசம்
தோஷக்காரர்களின் வாழ்வே நாசம்
அறிவுக்கே ஒவ்வா ஒரு கோஷம்
ஆயுள் ரேகை கட்டை – அது இயற்கை
வாழ்வு குட்டை – இது செயற்கை

விமானத்தில் பிணமானவர்களைக் கேட்டேன்
புயலில் சுயம் இழந்தவர்களை படித்தேன்
கடல் நீரில் உடல் போனவர்களை வாசித்தேன்
சுனாமியில் சின்னாபின்னமானவர்களைக் கண்டேன்

அனைவரின் ஆயுள் ரேகை குட்டையுமில்லை
செவ்வாய் தோஷமுமில்லை
அதிர்ஷ்ட எண்களும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை

இயற்கை அளித்தது சிம்மாசன இருக்கை
மாற்றவில்லை மனிதன் தன் சிந்தனை போக்கை

- ஜாஃபர் சாதிக்

Monday, March 3, 2008

முஸ்லிம் இளைஞர்களுக்காகச் சட்ட உதவிக் குழு உதயம்!

புதன், 27 பெப்ரவரி 2008
புதுதில்லி: தீவிரவாதத் தொடர்பு படுத்திக் கைது செய்து கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்டரீதியாக உதவி செய்ய உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்து களம் இறங்குகின்றன. நாடு முழுவதும் முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதத்தின் பெயர் கூறி கைது செய்யப்படுவதும் தொடர்ந்து அதே காரணம் கூறி அவர்களுக்குச் சட்ட உதவிகள் கிடைப்பது தடை செய்யப்படுவதும் பரவலாக நடைபெற ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வரும் வழக்கறிஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம் என்ற பொருள்படும் ஆதங்க்வாத் விரோதி ஆந்தோலன் (AVA) என்ற அமைப்பின் கீழ் அவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்ட உதவி கிடைக்கும் வகையில் ஒரு சட்ட உதவிக் குழு உருவாக்கப்பட்டது."சந்தேகத்தின் பெயரில் கொடூரமாகக் கொடுமைபடுத்தப்படுபவர்களுக்கு சட்டரீதியாக நியாயம் கிடைக்க வழிவகை செய்வதே எங்கள் நோக்கம்" என உருவாக்கப்ப்பட்டச் சட்ட உதவி குழுவின் பொறுப்பாளர் சஃபர்பாய் ஜீலானி அறிவித்தார். ஃபைஸாபாத், வாரணாசி, லக்னோ போன்ற பகுதிகளிலுள்ள நீதிமன்ற வளாங்கங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பின்னர் தீவிர்வாதம் தொடர்பான வழக்குகளை எடுப்பதில்லை என வழக்கறிஞர் அமைப்புகள் (Bar Associations) தீர்மானம் செய்திருந்தன. இத்தகையச் சூழலில் முஸ்லிம் இளைஞர்களின் மீது தீவிரவாதத் தொடர்புக் குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்குகளில் சிக்க வைக்கும் செயல் நாடுமுழுவதும் அதிகரித்ததைக் கணக்கில் எடுத்தே உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்யும் விதத்தில் சட்ட உதவிக்குழு அமைக்க முடிவு செய்தன."Bar Association வழக்கறிஞர் அமைப்புகளைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களுடன் இணைந்தே சட்ட உதவி குழு செயல்பட முயற்சிகளை மேற்கொள்ளும்" என சட்ட உதவிகுழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்தச் சட்ட உதவிகுழு செயல்படும் அமைப்பான AVA-க்கு 12 நிர்வாக உறுப்பினர்கள் அடங்கிய ஓர் குழுவும் 35 செயல்பாட்டு உறுப்பினர்கள் அடங்கிய ஓர் குழுவும் செயல்படும். இதில் 6 உறுப்பினர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள பிரபலமான வழக்கறிஞர்களாவர். அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத் தலைவர் ராபிஹ் நத்வி, துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் குரைஷி, ஜமாஅத்தே இஸ்லாமி அகில இந்திய அமீர் ஜலாலுதீன் உமரி, தாருல் உலூம் முதல்வர் ஸலீம் காஸி, அகில இந்திய மில்லி கவுன்ஸில் பொதுச் செயலாளர் டாக்டர் மன்ஸூர் ஆலம் போன்றோரின் முயற்சியில் இந்தச் சட்ட உதவி குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாதத்தின் பெயரில் முஸ்லிம் இளைஞர் சமுதாயம் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வரும் தற்போதையச் சூழலில் இது போன்றச் சட்ட உதவி குழுக்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டியது சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மிக அத்தியாவசியமானதாகும். அதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் சமுதாய நல அமைப்புகளும் இது போன்ற ஒரு சட்ட உதவி குழு அமைக்க ஒருங்கிணைந்துத் தீர்மானத்திற்கு வர வேண்டும் எனத் தமிழ் முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்க்கின்றது.

Friday, February 29, 2008

கடையநல்லூரரில் முஸ்லிம்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் தடி அடி நடத்தி தாக்குதல் நடத்தியதை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது!

கடையநல்லூரரில் முஸ்லிம்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் தடி அடி நடத்தி தாக்குதல் நடத்தியதை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது. சம்மந்தப்பட்ட போலீசார் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கின்றது.

Thursday, February 28, 2008

குர்ஆனில் கருவளர்ச்சி! -1-

கருவளர்ச்சியில் காணப்படும் படிநிலைகளில் கரு எவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்து மனித உருவைப் பெறுகிறது என்பதற்கு குர்ஆனில் ஆதாரமில்லை என முன்வைக்கப்படும் வாதத்தையும். விலங்கிலிருந்து மனிதன் தொன்றினான் என்ற கருவியல் சான்றிதழையும் குர்அன் முற்றாகமறுத்து நாத்திக வாதத்திற்கு சாவு மணி அடிக்கிறது அல்குர்ஆன்.
நாத்திகச் சிந்தனையில் வெளிப்படும் ஐயத்தைப் போக்கி விலங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை எனும் தன்னுடைய கூற்றை நிறுவிக் காட்ட கருவியல் குறித்த தன்னுடைய ஆழ்ந்த ஞானத்தை கீழ்க்காணும் வசனங்களில் ஓங்கி ஒலிக்கிறது திருமறைக் குர்ஆன்!.
அருள்மறை குர்ஆன் கூறுகிறது:
'பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம், பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டம் ஆக்கினோம், பின்னர் அத்தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம், பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம், பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன:; (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.'(அத்தியாயம் 23 ஸுரத்துல் முஃமினூன் - 12 முதல் 14 வரையிலான வசனங்கள்.)
கருவியலில் காணப்படும் படிநிலைகள் என்னவென்றும், அந்தப் படிநிலைகளில் கரு எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்றும் திருமறைக்குத் தெரியவில்லை என்பதால் அதன் கூற்றைப் பொருட்படுத்த வேண்டிய தில்லை என இதற்கு மேலும் யாரேனும் எண்ணம் கொள்ளலாமா? அப்படி யாரேனும் எண்ணிக் கொண்டால் அவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்று நம்மால்தான் ஏற்க இயலுமா? என்ன கூறுகிறது இந்த வசனங்கள்?.
நூற்றுக் கணக்காண வருடங்கள் பற்பல விஞ்ஞானிகளின் இடைவிடாத உழைப்பால் ஆய்வுக் கூடங்களில் கருவுற்று நுண்ணோக்கியால் பிரசவம் பார்த்து நவீனஅறிவியல் உலகால் மட்டுமே ஈன்றெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிநவீன கருவியல் கண்டுபிடிப்பையல்லவா இம்மாமறைக் குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி நிற்கிறது! இதற்கீடாகவா மற்றொரு அற்புதம் இப்பேரண்டத்தில் காணப்போகிறது. (வரும்....)

Monday, February 25, 2008

நெல்லிக்குப்பத்தில தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இனைந்து நிதி உதவி

சமீபத்தில் நெல்லிக்குப்பத்தில் அவுலியா நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு வீடுகள் முற்றிலும் நாசமாகி பலத்த சேதமடைந்தன. லட்சக்கணக்காண உடமைகளை இழந்து மக்கள் பரிதவித்து நின்றனர். இச் செய்தி கிடைத்ததும் நெல்லிக்குப்பம் நகர ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் களத்திற்கு விரைந்து நிவாரண பணிகளிளும் நிவாரண உதவிகளிளும் ஈடுப்பட்டனர், தொடர்ந்து ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இனைந்து பாதிக்கப்பட்டவரகளுக்கு கடந்த 24.02.2008 அன்று நெல்லிக்குப்பம் அர்ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து பாதிக்கபப்பட்ட 12 குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 8000 வீதம் வழங்கப்பட்டது. மேலும் பொருள்கள் மட்டும் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 5500 வீதம் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இந்த நிதி உதவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல பலனை தர ஏக இறைவனிடம் நாம் இறைஞ்சுவோமாக!.