Tuesday, January 29, 2008

உடலையும், அழகையும் பாதுகாப்போம்! டாக்டர் யு. ஷேக் அலாவுதீன்

அழகு எங்கிருக்கின்றதோ அங்கே இயற்கையாகவே செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட்டுவிடும். அழகு இறைவன் ஒருவருக்கு வழங்கும் சிபாரிசு கடிதம்.இறைவன் ஒவ்வொரு மனிதனையும் மிக அழகாகவே படைத்திருக்கின்றான் (அல்குர்ஆன் 95:4).

ஆனால் மனிதன் தான் அலட்சியத்தின் காரணமாக அந்த அழகை வீணடிக்கின்றான் அல்லது மேலும் அழகாக வேண்டும் என்ற பேராசையால் இரசாயான மருந்துகளாலும் தேவையில்லாத உணவு கட்டுபாடுகளாலும் தன்னை வருத்திக்கொண்டு செய்யும் உடற்பயிற்சிகளாலும் அழிவை நோக்கி செல்கின்றான் கொழுப்பு உணவை மனிதன் எதிரியாகவே நினைக்க தொடங்கிவிட்டான். மனிதனின் தோல் அழகுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் கொழுப்பு உணவு அவசியமே. ஒருவரின் தோல் பளபளப்பாக சொரசொரப்பு இல்லாமல் இருக்கவேண்டுமெனில் அதற்கு கொழுப்பு உணவு அவசியமே.

கொழுப்பு உணவை முற்றிலும் தவிர்ப்பதது நமக்கு நாமே கேட்டை தான் உண்டாக்கிகொள்ளவே.கொழுப்பு உணவினால் இரத்த குழாய் அடைப்பு, இதய நோய்கள்,உடல் பருமன் ஏற்படுகின்றதே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் அதற்கு காரணம் கொழுப்பு அல்ல!.யாருடைய மண்ணீரலும் வயிறும் சரியாக வேலை செய்கிறதோ அவர் சராசரியான கொழுப்பை சாப்பிடுவதால் அவருக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது மாறாக, அக்கொழுப்பு உணவால் நன்மை ஏற்பட்டு உடலும் வனப்பு அடையும்.இதற்கு மாற்றமாக யாருடைய வயிறும் மண்ணீரலும் சரியாக இயங்க வில்லையோ அவர் மிக குறைவான கொழுப்புணவு சாப்பிட்டாலும் அதனால் அவருக்கு தீங்கே ஏற்படும் காரணம் வயிறும் மண்ணீரலும் ஒழுங்காக இயங்காத காரணத்தல் கொழுப்புணவு முறையாக பயன்படாமல் போகின்றது. இந்த காரணத்தால் தான் பயன்படாத கொழுப்பு நம் உடம்பில் பல தீங்குகளை உண்டாக்குகின்றது. வயிறும் மண்ணீரலும் சரியாக செயல்பட வைத்துவிட்டால் இந்த கொழுப்பின் தீங்குகளிலிருந்து நம்உடலை காப்பாற்றி நன்மைகளை பெற்று நலமாக வாழலாம். எனவே ஒவ்வொரு மனிதருக்கும் கொழுப்பு உணவு அவசியமே.

உணவு உண்ணும் முறைகளை பின்பற்றினால் அது நம் உடலில் அழகையும் ஆரோக்கியத்தையும் அதிகபடுத்தும். காலை உணவு அவசியம் சாப்பிட்டே ஆகவேண்டும் அதுவும் காலை நேரம் 7-9 மணிக்குள் சாப்பிடவேண்டும் அதுதான் வயிறு நன்றாக இயங்கும் நேரம் . காலையில் நாம் உண்ணும் உணவே அன்று முழுவதும் நம் உடல் உழைப்புக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.மதியம் உண்ணும் உணவு நடுநிலையாகவும் இரவு உணவு மிக மிக குறைவாக அல்லது சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி, இரு வேளை சாப்பிடுபவன் போகி, மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி, என்பதனை இவ்விடத்தில் நினைவு கூர்வது நல்லது.இரவு என்பது நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வளிப்பதற்காக எல்லாம்வல்ல இறைவன் நமக்களித்த அருட்கொடை. வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு படுத்தால் ஓய்வு எப்படி கிடைக்கும்? வயிறு பெருங்குடல், சிறுகுடல், பித்தப்பை என உறுப்புகள் அனதை;தும் சாப்பிட்டவுடன் இயங்கும் போது உறங்கினால் அது ஓய்வாகுமா?.இந்த உறக்கத்தினால் உடல் தீங்iயே பெறும் இதன் பிரதிபலிப்பு உடல் அழகில் உடல் சைசில் தீங்கையே ஏற்படுத்தும் சாப்பிட்டு சில மணிநேரம் கழித்து உறங்குவதே நல்லது. காரணம் இடைப்பட்ட நேரத்தில் உண்ட உணவு முறையாக ஜீரணமாகியிருக்கும்.உணவினை மிக நன்றாக மென்று நாக்கால் சுவைத்து சாப்பிடவேண்டும் அப்போதுதான் முறையான ஜீரணம் உண்டாகும் உணவின் பலனை உடல் பெறும் சாப்பிட்ட திருப்தி உண்டாகும். சாப்பிடும் அளவு குறையும்.உணவை மெல்லாமல் சுவைக்காமல் வேகமாக விழுங்கினால் சாப்பிட்ட திருப்தி ஏற்படாது அதனால் அதிகம் சாப்பிட வேண்டிவரும்

. முறையாக ஜீரணமாகாது முறையாக ஜீரணமாக காரணத்தால் நல்ல உணவு உண்டும் அதன் சத்துக்களை பெற முடியாமல் போய்விடுகின்றது இது போன்ற முறையற்ற செயல்களால் வயிறு பாதிக்கப்பட்டு அதனால் உடல் தோற்றமும் ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது. நேரத்துக்கு சாப்பி;டவேண்டும் என்ற எண்ணத்தில் பசியே இல்லாத போதும் உணவை சாப்பிடாதீர்கள் அது உங்களின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் அலசர் வரும் என்ற வாதமே அறிவுக்கு முரண்பட்ட தவறான வாதமாகும்.நேரத்திற்கு சாப்பிடாத காரணத்தினால் தான் அலசர் வருகின்றது என்றால் இன்று இந்தியாவில் வாழும் பல கோடி ஏழைகளுக்கும் வந்திருக்க வேண்டுமே! ஏன் வரவில்லை? அல்சர் வருவதற்கு காரணம் நேரத்திற்கு சாப்பிடாததல்ல, வயிறும் சிறுநீர்பைக்கும் உள்ள தொடர்பில் ஏற்படும் குறைபாடே 99 காரணம் அதை விட்டு மாத்திரைகள் மருந்துகள் சாப்பிட்டு வந்தால் அல்சர் சரியாகாது மருந்துகள் தான் சரியாகும். கையில் உள்ள பணம் தான் காலியாகும். எனவே நேரத்திற்கு சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரம் பசித்தால் மட்டுமே சாப்பிடவேண்டும்.உடலின் வடிவமைப்பு அசிங்கமாக இருப்பதை குறைப்பதற்கு பலர் இரவு பகல் உடற்பயிற்சி செய்வதை பார்க்கின்றோம் அதே நேரத்தில் உடற்பயிற்சி எதுவும் செய்யாமலே சாதாரண வேலைகளை செய்துகொண்டே ஆரோக்கியமாகவும் கச்சிதமாகமான உடலேலடும் சிலர் இருப்பதற்கு காரணம் என்ன?உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக சீராகயிருந்தால் இயங்கினால் உடல் கட்டமைப்பும் தோற்றமும் அழகாக இருக்கம்.இடுப்பும் புட்டமும் சேரும் இடத்தில் அதிக சதை போட்டால் அவரது பெருங்குடல் பிரச்சனையில் இருக்கின்றது என்று அர்த்தம்.இடுப்பின் பக்கவாட்டில் அதிக சதை மடிப்புகளுடன் ஏற்படுமானால் மண்ணீரலும் வயிறும் சரியாக இயங்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எந்த அளவுக்கு இடுப்பு பகுதியில் மடிப்பு விழுகின்றதோ அந்த அளவுக்கு வியாதி இருக்கின்றது என்று அர்த்தம். வியாதியால் உண்டாகும் மடிப்பையும் ரசிக்கும் விந்தையான உலகம் இது. மண்ணீரலினின் பாதிப்பு உடல் எடையை அதிகாரிக்கவே செய்யும். புட்டப்பகுதியிலும் தொடையின் பின் பகுதியிலும் கழுத்தின் பின் பகுதியிலும் யாருக்கு எல்லாம் சதை உண்டாகின்றதோ அவருக்கு சிறுநீர்பையில் பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.

இவர்களின் தொடையும் தொடையும் உரசிக்கொள்ளும்.அக்குள் மடிப்புகளில் மார்பு பக்கவாட்டில் சிலருக்கு சதை உண்டாகி கைவீசி நடக்கவே மிகவும் சிரமபடுவார்கள் இவர்களுக்கு சிறுகுடல் இயக்கம் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். உடம்பில் அளவுக்கதிகமாக எங்கு சதை ஏற்பட்டாலும் அது நோயின் அறிகுறியே உடல் உறுப்பு ஏதோ ஒன்றால் ஏற்படும் இயக்க குறைவே இதற்கு காரணம் அதை சரி செய்து விட்டால் அந்த சதை பகுதி சரியாகி உடல் வடிவமைப்பு சரியாகிவிடும்முகத்தின் அழகு தோற்றம் தான் ஒருவரை பற்றிய முதல் நல் அபிப்பிராயத்யத்தை வரவழைக்கும் முகத்தின் தோற்றத்திறகும் உடல் உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொண்டால் 6 வாரத்தில் ஆழகாக்குகின்றேன் என்று சொல்லும் இரசாயன முககீரீம்கலிருந்தும், பவுடர்களிலிருந்தும் இது போன்ற மற்ற பொருள்களிலிருந்தும் நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம்.சிலருக்கு உடம்பு வெள்ளையாக இருக்கும் முகம் மட்டும் கருத்து கொண்டே பொகும்.

இவர் எத்தனை கிரீம் போட்டு தேய்த்தாலும் கிர்pம்தான் தீர்ந்து போகும் ஒழிய முகத்தின் கருப்பு மாறாது காரணம் யார் ஒருவருக்கு முகம் மட்டும் கருத்துக் கொண்டே போகின்றதோ அவருக்கு சிறுநீரகம் சரியாக இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சிறுநீரக பலகீனத்தின் பிரதிபலிப்புதான் முகம் கருத்துபோவது. இதுமட்டுல்ல முகத்தில் வீக்கம், தசைகள் சுருங்கல் கழுத்தின் முன்பக்கம் சதை உண்டாகுதல், நாக்கு உலர்ந்து போவது இவையெல்லாம் சிறுநீரகத்தின் சக்தி குறைபட்டால் உருவாவதே.புருவம் இமைகளில் உள்ள முடி யாருக்கொல்லாம் கொட்டுகின்றதோ அவருக்கு நுரையீரல்களின் இயக்கம் சரியில்லை அதை சரிசெய்யும் போது இவை சரியாகும். உடம்பில் உள்ள முடி கொட்டுவது (தாடி, மீசை, புருவம், இமை, பிறப்புறுப்புகள்) நுரையீரல் சம்பந்தப்பட்டது தலையில் உள்ள முடி கொட்டுவது கிட்னி சம்பந்தப்பட்டது. கண்களில் கீழ் இமை சிலருக்கு சிறு பை போல் தொங்கும் அல்லது துடித்துக்கொண்டே இருக்கும் வயிறு சக்தியின் குறைபாடே இது.உதடு அழகாயிருக்க ஆயிரக்கணக்கில் மேக்கப் உபகரணங்கள், ஆரோக்கிய உடலுக்கு அது தேவையில்லை. உதடு பெருத்து தொங்கினால் உங்களுடைய மண்ணீரலும் வயிறும் தான் காரணம் உதடு வரண்டு போனால் அதற்கு பெருங்குடலே காரணம்.

இந்த உறுப்புகள் சரியாக இயங்கினால் உதடு இயற்கையாகவே அழகாக அமைந்துவிடும்.முகம் கருத்து போவது சிறுநீரக பலகீனத்தால் ஏற்படுவது போல் சிலருக்கு முகம் நீல கலராக மாறும் இதற்கு காரணம் கல்லீரலே அதே போல முகம் வெளுத்தல் போன்று தோன்றினாலும் அதற்கும் காரணம் கல்லீரலே இந்த உறுப்புகளின் இயக்கத்தை சரிசெய்தால் இவைகள் சரியாகிவிடும்.முகத்தில் கன்னம் மட்டும் உப்பியிருந்தால் சிறுகுடலை கவனிக்கவேண்டும் முகம் முழுவதும் உப்பியிருந்தல் வயிறு பெருங்குடலை சரிசெய்ய வேண்டும்.கண்களின் சிகப்பு, நீர்வடிதல் போன்றவற்றை சரிசெய்ய நாம் சிறுநீர்பையின் சக்தி நிலையை சரிசெய்யவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு : பார்க்க: ஒளி படைத்த கண்ணினாய் கட்டுரை- முகத்தின் தோற்றம் இத்தனை உறுப்புகள் சம்மந்தப்பட்டிருக்கும் போது இவற்றையெல்லாம சரிசெய்யாமல்மேக்கப் போட்டு சரிசெய்ய முற்படுவது நமது உடலில் தேவையில்லாத இரசாயண பொருட்களை உள் அனுப்பி தோல்வியாதிகளை விலைக்கு வாங்குவது போன்றதாகும்.சிலரின் கை கால் நகங்கள் உடைந்தும் முறிந்தும் உழுங்கில்லாத அமைப்பிலும் சொத்தை போன்றும் கலர் மாறியும் இருக்கும் இதற்கு காரணம் பித்தபை கல்லீரலும் சரியாக இயங்க வில்லை என்பதை அறிந்து அவற்றை சரிசெய்தால் இவை சரியாகிவிடும்.முகத்தின் அழகும் உடலின் அழகு தோற்றமும் நம் மனதில் நல் அபிப்பிராயத்தை உருவாக்கும் அதே நேரத்தில் சிலரிடம் நாம் நெருங்கி பேச முற்படும்போது நம்மை தூர விலகி நிற்க வைக்கும அவர் மீது வீசும் வாசம்.மனிதனின் உடலில் வீசும் வாசத்தை வைத்தே அவனுடைய பாதிக்கப்பட்ட உறுப்பை கனித்துவிடலாம் அதனால் ஏற்படும் நோய்களையும் சரிசெய்துவிடலாம்.யாருடைய உடலில் அழுகல் வாசம் வீசுகின்றதோ அவருடைய சிறுநீரகமும் சிறுநீர்பையும் சரியாக இல்லை அதனை நாம் சரிவர இயங்கவைத்துவிட்டால் அந்த வாசம் வீசுவது நின்றுவிடும்.யாருடைய உடம்பில் மாமிசவாசம் வீசுகின்றதோ அவருடைய நுரையீரல், பெருங்குடல் பிரச்சனை என்பதை நாம் அறிந்துகொண்டு அந்த உறுப்புகளை நாம் சரிசெய்ய வேண்டும் அதன் மூலம் இந்த வாசத்pலிருந்து விடபடலாம்.

தீய்ந்த வாசம் யார் மீது வீசுகின்றதோ அவருடைய இதயம் மற்றும் மூவெப்ப மண்டலத்தில் இயக்கம் சரியில்லை என்று அர்த்தம் அவற்றை அறிந்து இயக்கத்தை சரிசெய்வதன் மூலம் இந்த வாசத்திலிருந்து விடுபடலவாம்.கல்லீரலும் பித்தபையும் சரியில்லை என்றால் அவருடைய உடம்பில் ஊசிபோன வாசம் வீசும் கல்லீரல் பித்தப்பை இயக்கத்தை சரிசெய்து இந்த வாசத்திலிருந்து விடுபடலாம்.யாருடைய உடம்பில் சுகந்தமான இனிமையான வாசம் வீசுகின்றதோ அருடைய உடம்பில் அனைத்து உறுப்புகளும் இயக்கம் சரியாக இருக்கிறது குறிப்பாக வயிறும் மண்ணீரலும் நன்றான இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.பார்க்க அழகாக இருபார்கள் சிலர் ஆனால் வாய் திறந்து பேசினால் நம்மால் அருகில் நிற்க முடியாது அந்த அளவுக்கு வாசம் வீசும்.பித்தப்பை சரியாக இயங்காவிட்டால் அவர்கள் நாக்கில் வெண்மை படியும் வாயும் வாசம் வீசும், இவர்கள் தினமும் காலையில் பல்துலக்கிவிட்டு நாக்கை டங்கிளீனர் பிரஸ் பட்டையைகொண்டு வழித்துக்கொண்டிருப்பார்கள்.

இவர்கள் வாழ்நாள் முழுவதும் இப்படிசெய்தாலும் இவர்களின் பிரச்சனை தீராது, இதனால் நாக்கின் சுவை உணர்வு மொட்டுக்கள் பாழடைந்து நாக்கின் சுவை உணரும் தன்மை இழந்து போகும். இதற்கு ஒரே வழி பித்தப்பையின் இயக்கத்தை சரிசெய்ய வேண்டும், வாய் வாசனை சரியாகும், வெண்மை படிதல் நிற்கும்.சிறுகுடல் பாதி;க்கப்படின் வாயின் உட்பகுதியிலும் நாவிலும் புண்கள் ஏற்படும் இதுவும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும், இதனை சரிசெய்ய சிறுகுடல் இயக்கத்தினை சரிசெய்தால் போதும்.நாக்கு மிகவும் சிகப்பாக இருந்தால் உடன் நாம் இதயத்தை கவனிக்கவேண்டும். நாக்கு மஞ்சளாக இருந்தால் வயிற்று பகுதியில் பிரச்சனை என்று அறிந்து அவைகளை சரிசெய்ய வேண்டும். சில நேரங்களில் இவைகளாலும் வாய் வாசனை ஏற்படுவதுண்டு.குளிக்காமல் பல் துலக்காமல் இருந்து வீசும் வாசத்திற்கு உடல் உறுப்புகள் பொருப்பல்ல அவைகள் அப்பாவிகள் தினமும் குளித்து வாசனை திரவியங்கள் பூசாமல் வீசும் இயற்கையான வாசத்திற்கே உடல் உறுப்புகள் பொறுப்பாகும்.உடல் உறுப்புகளின் இயக்கத்தினை நாம் சரியாக வைத்துக்கொண்டால் உடல் அழகைப்பற்றி நாம் கவலைபட தேவையில்லை. அழகே வா அருகே வா என்று அழைக்க வேண்டிய அவசியமுமில்லை அவை நம்முடனே தங்கி கொள்ளும் நம்முடைய தோற்றம் சொல், செயல் அனைத்தும் அழகாவே அமையும் இன்ஷாஅல்லாஹ்.மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீய செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசம்) குழப்பமும் தோன்றின தீமைகளிலிருந்து அவர்கள் திரும்பி விடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றi (இவ்வுலகில்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கின்றான் (அல்குர்ஆன் 30:41).இயற்கையான அழகை பெற்று வாழ முயற்சிப்போம். இரசாயண பொருட்களின் தீங்குகளிலிருந்து நம்மை காத்துக்கொள்வோம், அதற்காக பிராத்திப்போம்.

Saturday, January 26, 2008

இந்திய மக்கள் பெட்ரோல் விசயத்தில் ஏமாற்றப்படுகிறார்களா?;

Petrol in Pakistan Rs17 per litr Malaysia Rs 18 per litrIn India it's 48 per litr
Why this difference in Asia itself? World Market CRUDE Oil is not the reason for this. It's all Gain for private owners? As we are thegeneral public, or Common Man as R.K.Laxman wud hv said, we have toraise our voice, let's raise thru Emails.Forward this to all Indians who care. IT HAS BEEN CALCULATED THAT IF EVERYONE DID NOT PURCHASE A DROP OFPETROL FOR ONE DAY AND ALL AT THE SAME TIME, THE OIL COMPANIES WOULD CHOKE ON THEIR STOCKPILES.AT THE SAME TIME IT WOULD HIT THE ENTIRE INDUSTRY WITH A NET LOSS OVER 4.6 BILLION DOLLARS WHICH AFFECTS THE BOTTOM LINES OF THE OILCOMPANIES.THEREFORE "TU E SDAY Jan 22ndây HAS BEEN DECLARED STICK IT UP THEIR BEHIND DAY AND THE PEOPLE OF THIS NATION SHOULD NOT BUY A SINGLE DROP OF PETROL THAT DAY. THE ONLY WAY THIS CAN BE DONE IS IF YOU FORWARD THIS E-MAIL TO ASMANY PEOPLE AS YOU CAN AND AS QUICKLY AS YOU CAN TO GET THE WORD OUT. WAITING ON THE GOVERNMENT TO STEP IN AND CONTROL THE PRICES IS NOT GOING TO HAPPEN. WHAT HAPPENED TO THE REDUCTION AND CONTROL IN PRICES THAT THE ARAB NATIONS PROMISED TWO WEEKS AGO?REMEMBER ONE THING, NOT ONLY IS THE PRICE OF PETROL GOING UP BUT AT THE SAME TIME AIRLINES ARE FORCED TO RAISE THEIR PRICES, TRUCKING COMPANIES ARE FORCED TO RAISE THEIR PRICES WHICH AFFECTS PRICES ON EVERYTHING THAT IS SHIPPED. THINGS LIKE FOOD, CLOTHING,BUILDING SUPPLIES MEDICAL SUPPLIES ETC. WHO PAYS IN THE END? WE DO!WE CAN MAKE A DIFFERENCE.IF THEY DON'T GET THE MESSAGE AFTER ONE DAY, WE WILL DO IT AGAIN AND AGAIN. SO DO YOUR PART AND SPREAD THE
WORD. FORWARD THIS EMAIL TO EVERYONE YOU KNOW. MARK YOURCALENDARS AND MAKE Jan 22nd A DAY THAT THE CITIZENS SAY "ENOUGH IS ENOUGH"We forward so many junk email to many of our friends, now let us do it for some useful cause to cut down the price of the petrol .. .

எது புதுமை

எது புதுமை
பரபரப்பான இந்த உலக சூழ்நலை மனிதன் நாகரீகத்தின் அதி உச்சியில் இருப்பதாக நினைத்து அதற்கு ஏற்றார்போல் தன்னை வெளிநாடுகளை பாருங்கள் எவ்வளவு சுத்தமாக சுகாதாரமாக இருக்கிறது நமது நாட்டையும் பாருங்கள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று கூறுபவர்கள் அதுப்போல் நாமும் நம்நாட்டிலேயும் ஆக்க வேணடும் இருக்க வேண்டும் என்று அதை செயலாக்க முனைவதில்லை. கோட்டு சூட்டுடன் கண்ணில் பெரிய மனிதர் தோரனையுடன் மோட்டார் சைக்கிளில் ஏரி செல்லும்போது அந்த கம்பீரம் எல்லாம் சரிதான் ஆனால் வாகன பயணத்தின் போது சாலையில் வேறு யாரும் வருவார்கள் என்று அறிந்தும் எச்சிலை துப்பும்போது பின்னால் வருபவர்கள் மீது அது பட்டு அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமே என்ற சிறு விசயங்களில் கூட இன்னும் மனிதன் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியாத நிலை.
இன்னும், இன்று உலகில் தகவல் தொடர்பு மற்றும் இதர துறையில் அசாதரன வளர்ச்சி இந்த வளர்ச்சியைக்கொண்டு மனிதன் தன் நிலையை உயர்த்திக்கொள்ள பல வழிகள் இருந்தும் அதை விட்டு விட்டு செல்போனில் படம் எடுக்க முடியும் என்ற நுட்பத்தைக்கொண்டு அந்நிய பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே படம் எடுத்து வக்கிர ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் இழிவான வேலையை தான் நாகரீகம் என்ற பெயரில் பலரும் செய்து வருகிறார்கள். மேலும், உலகை கை விரல் நுனியில் வைத்து இருக்கும் நுட்பமாகிய இன்டர்நெட் வசதியை வைத்து இன்றியமையாத பல தகவல்களை சேகரிப்பதை விட்டு விட்டு செக்ஸ் தளத்தில் மணிக்கணக்கில் செலவிட்டு மனதளவிலும் உடலளவிலும் வீனாய் போபவர்கள் தான் இன்று அதிகமாக இருக்கிறார்கள். இன்னும், தனக்கு பிடிக்காதவர்கள் மீது வேண்டுமென்றே அவதூறுகளை சுமத்தி அதை பரப்பி அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னாமாக்கும் பழிவாங்கும் விசயங்களும் இந்த வழியில் தான் நடந்தேறுகிறது.
இதற்கெல்லாம் மூல காரணம், என்னதான் மனிதன் நாகரீகத்தின், விஞ்சானத்தின் உச்சத்தை அடைந்து விட்டாலும் மனிதன் இன்னும் மனங்களில் மேன்மை அடையவில்லை. இன்னும் மனிதனின் மனச்சிந்தனை பழிவாங்குவதிலும், வக்கிர எண்ணங்களிலும் அலை மோதிக்கொண்டிருந்தால் மனிதாபிமான மற்றும் புதுமையான சிந்தனை மலர வாய்ப்பேது?. இவற்றையும் மீறி நல்ல மனங்களையும் நற்சிந்தனைகளையும் சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்துபவர்களை குழம்பில் கருவேப்பிலையாகத்தான் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது.கருவேப்பிலைகளின் எண்ணிக்கை கூடினால் தான் எண்ணங்களில் புதுமை வரும். மேலும், எப்போது ஒரு விசயம் தவறு என்று மனதிற்கு படுகிறதோ அப்போதே அதிலிருந்து நாம் விடுபட்டாக வேண்டும். இச்சிந்தனை நம் மனதுக்குள் வந்து விட்டாலே நமக்குள் நல்ல ஒரு மாற்றம் ஏற்படும் இன்சாஅல்லாஹ்.

சிந்தனை மடல்: சீரழிவின் பக்கம் செல்லாதீர்கள்!

இன்றைக்கு சின்னத்திரை என்றழைக்கப்படும் தொலைக்காட்சி சாதனம் இல்லாத வீடுகள் இல்லை என்றளவுக்கு அது எங்கும் நிறைந்துள்ளது. அதனை அடுத்த நிலையில் இன்றைக்கு வீடுகளில் கம்ப்யுட்டர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கஃபேக்களுக்குச் சென்று இணையத் தளங்களைப் பார்த்து ரசித்து மகிழ்ந்த நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற ஆரம்பித்திருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் கம்ப்யுட்டர் இல்லாத அதுவும் இணையத் தள இணைப்பு இல்லாத வீடுகள் இல்லை என்றளவுக்கு நிலைமை மாறி விடக் கூடிய சூழலில் இன்றைய இந்திய சமூகம் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதனால் ஏற்படும் சாதகம் மற்றும் பாதகங்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கின்றது. தொலைக்காட்சியைப் பொறுத்தவரை.., தொடர்களில் இருந்து நம் முஸ்லிம் சமூக ஆண்களும், பெண்களும் விலகிச் செல்ல முடியாத அளவுக்கு கட்டிப் போடப்பட்டிருக்கும் நிலையில்.., இன்றைய இளைய தலைமுறைகளை வீட்டிற்குள்ளேயே கட்டிப் போட்டு விட இணையத் தள உபயோகம் மாறி விடும் காலம் தலைகாட்டிக் கொண்டிருக்கின்றது. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க விளையும் எவரும் இந்த இரு சாதனங்களின் பயன்பாடுகளை ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஆனாலும், அவற்றை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தாத விடத்து, அதனால் ஏற்படும் தீமைகள் நிரந்தரமான அழிவுக்கு மனிதனை இட்டுச் சென்று விடும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைக்கு ஒலி ஒளி பரப்பப்படும் தொடர்களில் குறிப்பாக ஒரு சமுதாயத்தை மட்டுமே உன்னதமான சமுதாயமாக சித்தரித்துக் காட்டப்படுகின்றது. அந்த சமுதாயத்தைச் சுற்றியே கதைகள் பின்னப்படுகின்றன. சுpறிது காலமுன்; வெளிவந்த திரைப்படமான 'அந்நியன்' ல் 'மனு' வின் சாதிக்கொரு நீதி சரியானது தான்.., தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்பதை விட அந்தத் தண்டனை ஒவ்வொரு சாதிக்கும் வித்தியாசப்பட வேண்டியது அவசியம் தான் என்று வலியுறுத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இன்னும் அந்த சமூகத்தில் நிலவும் தோஷ பரிகாரங்கள்.., கணபதி ஹோமம், என்பனவற்றில் பலன்கள் உண்டு என்பதாக சித்தரித்துக் காட்டப்படுகின்றது. இதன் காரணமாக முஸ்லிம் சமூகத்தவர்களும் அந்த கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் போன்றதொரு பிரச்னைகளைச் சந்திக்கும் பொழுது, தாங்களும் ஏன் தோஷ பரிகாரங்கள் செய்யக் கூடாது.., கணபதி ஹோமம் செய்யக் கூடாது என்று இஸ்லாத்திற்கு முரணான காரியங்களில்.., எதனை அல்லாஹ் மன்னிக்க மாட்டானோ அத்தகைய இணைவைப்புகளில் இறங்கி விடுவதனைக் காண்கின்றோம். சமீபத்தில் சென்னையில் ஒரு முஸ்லிம் பெண்மணி தனது கணவனது உயிருக்கு ஆபத்து என்று கருதி தோஷ பரிகாரமாகவும்.., அதனை நீக்குவதற்கு ஒரு மந்திரவாதியிடம் 25 லட்சம் கொடுத்து ஏமாந்த நிகழ்வினை தமிழகம் சந்தித்தது நினைவிருக்கலாம். இன்னும் இன்றைய தொலைக்காட்சிகளில் கிறிஸ்தவப் பிரச்சாரங்கள் முன்னைக் காட்டிலும் கடுமையாக இருக்கின்றன. அதில் குருடர்கள் பார்க்க வைக்கப்படுவதாகவும், நோயாளிகள் பிணிகள் தீர்ந்து சுகமடைவதாகவும் காட்டப்படுகின்றது. இதனைப் பார்க்கும் நமது பலவீனமான ஆண்களும், பெண்களும் நாமும் ஏன் அந்த வழியில் நமது பிரச்னைகளைத் தீர்த்து விடக் கூடாது என்று களத்தில் இறங்கி விடுகின்றன. சமீபத்தில் ஒரு காது கேளாதவர்களை கேட்க வைக்கின்றேன் என்று கூறி ஒரு 'சித்தர்' - மருத்துவர் தொலைக் காட்சிகளில் விளம்பரம் செய்து வருகின்றார். அதில் ஒரு முஸ்லிம் வாலிபர் அந்த மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் செல்கின்றார். அந்த மருத்துவர் சொல்லித் தரும் மந்திரங்களை அந்த நோயாளியான முஸ்லிம் திருப்பிச் சொல்ல வேண்டும் என்பது அந்த சிகிச்சைகளில் ஒன்று. அந்த மருத்துவர் கூறும் மந்திரங்களில் இணைவைப்பின் சாயல்கள் இருக்கின்றன. இந்த சிகிச்சை முறைகள் ஒரு முஸ்லிமினுடைய இறைநம்பிக்கையில் பலவீனத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அந்த முஸ்லிமானவர் அறியவில்லை. இறைவனே வாழ்வையும் அதனைத் தொடர்ந்த மரணத்தையும் படைத்துள்ளான். அவனே நோய்களுக்கான சிகிச்சையையும், மருந்துகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளான். நோய்களுக்கான முறையான சிகிச்சைகளைச் செய்து கொள்ள வேண்டுமே தவிர இஸ்லாத்திற்கு முரணான வகையில் நோய்களுக்கான நிவாரணத்தைத் தேடுவது இறைநம்பிக்கையை இழக்க வைத்து விடும். பொய்களைப் பரப்புவது, கண்கட்டி வித்தைகளை நம்புவது, செய்வினை செய்வதும், அதனை எடுக்க முற்படுவதும், சூதாட்டம், குறி கேட்பது மற்றும் ஜோஸியம் பார்ப்பது என்ற அனைத்தும் இன்றைய தொலைக்காட்சிகள் வழியே ஒலி ஒளி பரப்பப்படுவதை நாம் பார்க்கின்றோம். இவற்றைப் பார்ப்பதும், அவற்றை உண்மை என்று நம்புவதும், அவர்களை கண்ணியப்படுத்துவதும் உங்களது இறைநம்பிக்கையில் ஊணத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை அறிந்து கொள்ளவேண்டும். இறைவன் மீதும் அவனது வல்லமையின் மீதும் அவை உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்க. தொலைக்காட்சிகளில் காட்டப்படும் நிகழ்ச்சிகளில் மனிதர்கள் மனிதர்கள் மீது சத்தியம் செய்வார்கள். அதனைப் போன்று நாமும் முற்படுவோமானால் இறைவனுக்கு இணைவைத்த பாவத்தில் வீழ்ந்தவர்களாவோம் என்பதையும் நினைவில் கொள்க. மனிதர்கள் தங்களது சத்தியங்களை இறைவனது பெயரிலேயே செய்து கொள்ள வேண்டும்.நாடகங்களில் வரும் கதாபாத்திரங்கள் மனிதர்களின் வாழ்வில் ஏகப்பட்ட மாற்றங்களை விளைவிக்கின்றன. அவர்களின் கலாச்சாரங்களைக் காப்பியடிக்கும் பழக்கம் நம்மில் கொஞ்சம் கொஞ்சமாக படிய ஆரம்பிக்கின்றன. இத்தகைய மனநிலை மாற்றங்கள் நாளடைவில் இஸ்லாமிய கலாச்சாரங்களை தூக்கி எறியும் அல்லது வெறுக்கும் மனநிலையை உருவாக்கி விடும் என்பதிலும் கவனம் தேவை. கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் கதாநாயக மற்றும் கதாநாயகிகள் போன்று தாமும் ஏன் வாழக் கூடாது என்று அவர்களது பழக்க வழக்கங்களை காப்பி அடிக்கும் போக்கு இன்றைய இளைஞர்கள் மற்றும் இளைஞிகளிடம் காணப்படுவதை நாம் காண முடிகின்றது.சின்னத் திரைகள் மூலமாக குற்றங்களும், வன்முறைகளும், கொலைகளும், பெண்களை மானபங்கப்படுத்தும் காட்சிகளும், கற்பழிப்புக் காட்சிகளும் தாரளமாகக் காட்டப்படுகின்றன. இவை பார்ப்பவர்களின் மனங்களின் வக்கிர எண்ணங்களை உருவாக்குகின்றன. கூட்டாகச் சேர்ந்து குற்றங்களில் ஈடுபடுவது, ஏமாற்றுதல், மோசடி செய்வது, லஞ்சம் வாங்குவது இன்னும் இது போன்ற காட்சிகளும் மக்கள் மனதில் குற்றம் செய்யும் உணர்வுக்கு அடித்தளமிடுகின்றன.எல்லாம் வல்ல அல்லாஹ் இதுபோன்ற தீங்குகளை தூண்டும் கலாச்சார சீரழிவை விட்டும் நம்மை பாதுகாப்பானாக!

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் - அறிமுகம்!

அன்புடையீர்! அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்... இம்மடல் தங்கள் அனைவரையும் பூரண உடல் நலத்துடனும் சீரிய இஸ்லாமிய சிந்தனையுடனும் சந்திக்கட்டுமாக! இன்ஷாஅல்லாஹ்....
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மக்களிடையே பிரச்சாரத்தின் மூலமாகவும், பிரசுரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் வாயிலாகவும் கொண்டுசெல்லவும்., தனிப்பட்ட ஒழுக்ககேடுகள், வட்டி, வரதட்சனை, விபச்சாரம், மது, ஆபாசம் போன்ற சீர்கேடுகளை சமுதாயத்தில் முடிந்தவரை இல்லாது ஆக்கவும். ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களான கல்வி உதவி, மருத்துவ உதவி, வட்டியில்லா கடன், இரத்த தான உதவி, திருமண தகவல் மைய்யம,; நூலகங்கள் உருவாக்குதல் போன்ற சமுதாய சேவைபளையும் இயன்ற வரை செய்திடவும், அரசு உதவிகளை உரிய மக்களுக்கு பெற்று தந்திடவும். சமுதாய மக்களுக்கும், நலிந்த மக்களுக்கும் உண்டான உரிமைகளுக்காக போராடவும், அனைத்து மக்களிடையே நல்லினக்கத்தை ஏற்படுத்திடவும் கடலூர் மாவட்டத்தில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில பல்வேறு ஊர்களில் இதன் கிளை அமைப்புகளும் துவங்கப்பட்டுள்ளது. இன்ஷhஅல்லாஹ்,; கிளைகள் இல்லா ஊர்களில் விரைவில் துவங்கப்படவுள்ளது. ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க பிரச்சாரங்களுக்கும், சமுதாய சீர்கேடுகளைகலைவதற்;குண்டான அனைத்து முயற்சிகளுக்கும், சமுதாய சேவைகளுக்கும், உரிமை மற்றும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கும் சமுதாய மக்கள் அனைவரும் தங்களின் நல்லாதரவை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.நன்றி! வஸ்ஸலாம்.
- அன்புடன்.... ஐக்கிய தவ்ஹீத்