Sunday, February 10, 2008

ஸபர் மாதம் - பீடை மாதமா?

மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.அறியாமை காலத்து அரபியர்களின் வழக்கம் போன்று இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாமலும் மற்றவர்களையும் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்?
அப்படி அந்த நாள், அந்த மாதம் பீடை மாதம் என்றிருக்குமேயானால் யாருக்கும் எந்த நலனும் நடைபெறாமல் இருக்க வேண்டுமே? அப்படி இருப்பதில்லை! திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாது நிறுத்தும் அந்த முஸ்லிம்களின் குடும்பத்தில் குறிப்பிட்ட அந்த மாதத்தில் குழந்தை பிறப்பை தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது தள்ளித்தான் போட முடியுமா? அப்படியே பிறந்து விட்டால் அந்த குழந்தை பீடை மாதத்தில் பிறந்துள்ளது என்பதற்காக நிராகரித்து விடுவார்களா? அல்லது ஓரந்தான் கட்டுவார்களா?
இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாடு செல்வதற்கு விசா வந்துவிட்டால், விசாவை நிராகரிப்பார்களா? அல்லது வெளிநாடு செல்வதையே நிராகரிப்பார்களா? இப்படி செய்ய துணிவு இல்லாத இவர்களும் இவர்களை சுற்றியுள்ளவர்களும் மற்ற நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பதற்கு எந்தவித ஆதாரமும் குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்பதை நடு நிலையோடு சிந்தித்துப் பார்த்தால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மூடநம்பிக்கையே என்பது தெரியும்.
இவர்களின் கருத்துப்படி ஸபர் மாதம் ஒரு பீடை மாதம் என்று வைத்துக் கொண்டால்(?) எல்லோருக்கும் கேடுகள் வரும் நாளாக இருக்க வேண்டும், அதே போன்று நல்ல நாள் என்று ஒன்று இருக்குமேயானால் அந்த நாள் உலகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நன்மையானதாகவே இருக்கவேண்டும். எந்தவொரு நாளாக இருந்தாலும் அவற்றில் நல்லவைகளும், கெட்டவைகளும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றது. உலகிலுள்ள அனைவருக்கும் நல்லது நடக்கும் நாளாகவோ அல்லது எல்லோருக்கும் தீயவை நடக்கும் நாளாகவோ யாரும் ஒரு நாளைக் காட்ட முடியாது. இந்த அடிப்படை யதார்த்த உண்மையைக்கூட அறிந்து செயல்பட முடியாமல் பிற்காலத்தில் ஏற்பட்ட செயல்களின் காரணமாக மூளைச் சலவை செய்யப்பட்டு சுயமாக சிந்தித்து நல்லது, கெட்டது எது என பிரித்தறிய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நினைக்கும்பொழுது மார்க்க பிடிப்பற்ற அறிஞர்கள் உண்மையான இஸ்லாத்தினை எடுத்து சொல்லாததும், தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத முஸ்லிம்களும் ஆவர் என்று அறிய முடிகிறது.
பீடை நாட்கள் என்றோ மாதமென்றோ ஒதுக்கி தள்ளிவிட்டு ஸபர் மாதமல்லாத மற்ற நாட்களில், மாதங்களில் நல்ல நாட்கள் என தாங்களாகவே தீர்மானித்து செய்யப்படுகின்ற பல நிகழ்ச்சிகளில் தோல்வி மற்றும் நஷ்டம் ஏற்படுவது இல்லையா? விவாகரத்து பெறுவதும், குழந்தை பாக்கியமில்லாமல் இருப்பதும், தொழில் துறையில் நஷ்டமடைவதும், செல்வ நிலையிலுள்ளவர்கள் வறுமை நிலையை அடைவதும், பலவகை இயற்கையின் சீற்றத்தால் விவசாய பொருட்கள் அழிந்து போவதும் எதனால்? பீடை ஸபர் அல்லாத மற்ற மாதங்களில் செய்யப்படுகின்ற அனைத்து செயல்களிலும், நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் அல்லவா? அப்படி வெற்றியை மாத்திரம் அடைந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் இல்லவே இல்லையே!.
ஆக யதார்த்த வாழ்க்கையில் ஒருவர் சந்தோஷப்படுவது மற்றொருவர் துக்கப்படுவதென்பது நாள்தோறும் நிகழும் நிகழ்வுகளாகும். இது அல்லாஹ்வின் விதியின் அடிப்படையில் ஏற்படுகிறது. ஒருபக்கம் ஸபர் மாதம் பீடை என்று ஒதுக்கி தள்ளக்கூடியவர்கள் மற்றொரு பக்கம் ஸபர் மாத இறுதியில் செய்யக்கூடிய அனாச்சாரங்களை பற்றிப் பார்ப்போம்.
ஸபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதன் என்றழைக்கப்படுகின்ற ஸபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று தமிழகத்தில் பரவலாக ஒரு சில அரபி வார்த்தைகளை மா இலைகளிலும் தட்டுகளிலும் மை கொண்டு எழுதி, அப்படி எழுதிய வாசகங்களை தண்ணீரில் கரைத்து குடித்து, வீடுகளில் தெளித்து, தலையில் தெளித்து குளித்தால் முஸீபத்துகள் நீங்கும் என்று செய்து வருகிறார்கள் (பொதுவாக நம்மில் யாருக்கேனும் காய்ச்சல், இருமல் வந்தால் மருத்துவரிடம் காண்பித்து நோய் எதிர்ப்பு மருந்து வாங்கி சாப்பிடுவோம் அல்லவா அதேபோல் ஸபர் மாத பீடையை தடுக்க நோய் எதிர்ப்பு மருந்துதான் மா இலையின் தண்ணீர்?) இப்படி செய்ய மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா என்றால் கியாமத் நாள் வரையிலும் அவர்களால் ஆதாரங்களை கொண்டுவர முடியாது என்பதே உண்மை. (அந்த அரபி வார்த்தை என்னவென்று எழுதியவருக்கும் தெரியாது, குடிப்பவருக்கும் தெரியாது, காரணம் எழுதக்கூடியவர்களில் பெரும்பாலானோர் குர்ஆன் வசனங்களை படிக்க-கற்றுக்கொள்வதற்காக மதரஸா சென்ற அந்தந்த ஊர் சிறுவர் சிறுமிகளே என்பது குறிப்பிடத்தக்கது)
அடுத்ததாக ஸபர் மாத கடைசி புதனன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து (அன்றைய தினத்தில்தான் சுத்தம் செய்ய வேண்டுமா? எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியவர்கள் ஒடுக்கத்து புதனுக்காக மட்டும் சுத்தம் செய்வது மூடநம்பிக்கையையே), கறி-சோறு சமைத்து, அரிசி ரொட்டியும் சுட்டு (சமைத்து), ஆக சமைத்த சாப்பாட்டையும், ரொட்டியையும் வீட்டில் சாப்பிடுவார்களா என்றால் இல்லை மாறாக, ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து கடற்கரைக்கோ, ஆற்றாங்கரைக்கோ, புல்வெளிக்கோ, தர்ஹாக்களுக்கோ சென்று நீராடிவிட்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு வந்தால் முஸீபத்துகள் நீங்கும் என்பது இவர்களுக்கு இஸ்லாம் பற்றி அறியாமையினால் ஏற்பட்ட நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு அன்றைய தினத்தில் இவர்களில் ஒரு சிலர் தொடரக்கூடிய பயணம் சினிமா தியேட்டர், பிறகுதான் வீடு இப்படி செய்யக்கூடிய இவர்களுக்கு முஸீபத்துகள் நீங்குமா அல்லது தொடருமா? நன்றாக சிந்திக்கவும். இவர்களில் அதிகமானோருக்கு அன்றைய தொழுகை இருக்காது.இன்னும் ஒருசில பகுதிகளில் கணவன்-மனைவி குறிப்பிட்ட ஒடுக்கத்துபுதன் அன்று புல்வெளி பிரதேசம் சென்று சிறிது நேரத்திற்கு புல்வெளியில் காலை வைத்துவிட்டு நேராக செல்வதும் தியேட்டர்தான். இதுதான் இவர்களுக்கு முஸீபத்துகளை நீக்கும் முறை.
மேற்கண்ட நிகழ்ச்சிகள் தொடராக ஒவ்வொரு வருடமும் படுவிமர்சியாக உண்டுகளிக்கவும், கண்டுகளிக்கவும் மேற்கோள் இடுகின்ற சம்பவம் இதுதான் அதாவது, நபி (ஸல்) அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக சில முஸ்லிம்களிடம் உள்ளது. மேலும் அந்த ஸபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் குணமடைந்து நீராடினார்களாம், அதனால் நாமும் ஒடுக்கத்துபுதனில் குளித்து நமது முஸீபத்தை நீக்க வேண்டுமாம். இந்த சம்பவம் முழுக்க முழுக்க ஆதாரமற்றது.
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி (ரலி) ஆதாரம் : அபூதாவூத், நஸாயீ)
அறியாமை காலத்தவர்களின் அரபியர்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாக கருதி வந்தனர், அன்றைய அரபியர் ஷவ்வால் மாதத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தாது தடுத்து வந்தனர், இந்த மூடநம்பிக்கையை தீயிலிட்டு கொளுத்தும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடிக்கப்பெற்றேன், ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்க்கையை துவங்கினேன், நபி (ஸல்) அவர்களுக்கு என்னைவிட விருப்பமுள்ள மனைவியாக இருந்தது யார்? என்று கூறினார்கள.; (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), ஆதாராம் : முஸ்லிம், அஹ்மத்)
பீடை மாதம் என்று ஒன்று இல்லை என்பதை நிரூபித்து நிலைநிறுத்திக் காட்டிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை போல் இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் ஸபர் பீடையில்லை என்று நாமும் நிரூபித்துக் காட்ட முயற்சி செய்வோமேயானால் இதனை முழுமையாக ஒழித்துவிடலாம் இன்ஷா அல்லாஹ்.
அன்புள்ள சகோதர-சகோதரிகளே இது ஒரு தீர்க்கமான 'பித்அத்' என்பதை விளங்கி நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையிலிருந்து தவிர்ந்து கொள்ள கீழ்கண்ட நபிமொழியே போதுமானது.வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது பித்அத்கள், பித்அத்துக்கள் (நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாதவைகள்) அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத், ஜாபிர் (ரலி) அவர்கள் ஆதாரம் : புகாரி, முஸ்லிம் மற்றும் நஸாயீ.
மாற்று மதத்தவர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றியே இந்த 'பித்அத்'தான செயல்கள் இஸ்லாத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றது.
மாற்று மத சகோதரர்களின் நம்பிக்கைபடி ஆடி மாதம் பீடை மாதம் என்றும், புதிதாக திருமணம் முடித்த புதுமண தம்பதிகளைகூட பிரித்துவைத்து விடுவதும் அவர்களின் பழக்கம். இந்த நம்பிக்கையை கடைபிடிக்கும் நமது முஸ்லிம்களும் ஸபர் மாதத்தை பீடை என்றும் புதுமண தம்பதிகளை பிரித்துவைத்து விடுவதும் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.
பொழுது போக்கிற்காக ஏதோ ஒரு சின்ன விழா-பண்டிகை என்ற பெயரில் ஆண்களும், பெண்களுமாக வீட்டைவிட்டு வெளியேறி மேற்சொன்ன நிகழ்வுகளை அரங்கேற்றுவது.ஒரு நிகழ்ச்சி இஸ்லாத்தில் முஸ்லிம்களால் நடைமுறைப் படுத்தபடுகின்றது என்றால் அது குர்ஆன், ஹதீஸின் நிழலில்தான் செய்யப்படவேண்டும். ஆக இந்த ஸபர் மாதத்தை பீடை என்பதற்கு குர்ஆன்-ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை விளங்கி இது போன்ற மார்க்கம் அனுமதிக்காத செயல்களை விட்டொதுக்க வேண்டும்.
இதுபோன்ற சமூக அவலங்களை முஸ்லிம்களை விட்டும் களைவதற்கு கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் முன் வரவேண்டும். சமூக விழிப்புணர்வு என்ற பெயரில் பற்பல மேடை சொற்பொழிவுகளையும் வாராந்தோறும் நடைபெறுகின்ற ஜும்ஆ பிரசங்கத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முஸ்லிம்களைவிட்டும் அகற்றிடப் பாடுபட்டால் இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒழிந்துவிடும். அல்லாஹ் போதுமானவன்.
Islam Kalvi

ஆயுளை‌க் குறை‌க்கு‌ம் உட‌ல் பரும‌ன்!

நீ‌ங்க‌ள் ‌தி‌ன்ப‌ண்ட‌ங்களு‌க்கு அடிமையானவரா? உ‌ங்க‌ளி‌ன் உட‌ல் எடை அ‌திக‌ரி‌த்தா‌ல் ஆயு‌ளு‌ம் 10 ஆ‌ண்டுகளு‌க்கு மே‌ல் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்வு ஒ‌ன்று தெ‌ரி‌வி‌க்‌கிறது. ‌பி‌ரி‌ட்டனை‌ச் சே‌ர்‌‌ந்த ஆ‌ய்வாள‌ர்க‌ள் அ‌திக உட‌ல் பருமனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புக‌ள் கு‌றி‌‌த்து ஆ‌ய்வு நட‌‌த்‌தின‌ர். அ‌தி‌ல், உட‌ல் பரும‌ன் எ‌ன்பது புகை‌பிடி‌த்தலை ‌விட அ‌திக பா‌தி‌ப்பை‌த் தரு‌கிறது. அதாவது ஆயு‌ளி‌‌ல் சுமா‌ர் 13 ஆ‌ண்டுகளை‌க் குறை‌த்து ‌விடு‌கிறது எ‌ன்று க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளன‌ர். ''நமது சோ‌ம்பே‌‌‌றி‌த் தன‌த்‌தினாலு‌ம், அவசர‌த்‌தினாலு‌‌ம் து‌ரித உணவுகளை‌த் தேடு‌கிறோ‌ம். ப‌ற்றா‌க்குறை‌க்கு ‌தி‌‌ன்ப‌ண்ட‌ங்களை‌ச் சா‌‌ப்பிடு‌கிறா‌ம்.
ந‌ம்மை‌ச் சு‌ற்‌றியு‌ள்ள நுக‌ர்வோ‌ர் சமூக‌ம், ந‌ம்மை‌ச் சா‌ப்‌பிட‌த் தூ‌ண்டு‌கிறது. அதையே நமது வா‌ழ்‌க்கை முறையாக மா‌ற்‌றி‌க் கொ‌ள்‌கிறோ‌ம்'' எ‌ன்று ஆ‌ய்வு‌க் குழு‌வி‌ன் தலைமை‌ப் பேரா‌சி‌ரிய‌ர் டே‌வி‌ட்‌ கி‌ங் கூ‌றியு‌ள்ளா‌ர். இவ‌ர் ‌பி‌ரி‌ட்டி‌ஷ் அர‌சி‌ன் முத‌ன்மை அ‌றி‌விய‌ல் ஆலோசக‌ர் ஆவா‌ர். இவ‌ரி‌ன் குழு‌வி‌‌ல் உ‌ள்ள 250 இள‌ம் அ‌றி‌வியலாள‌ர்க‌ள் இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் ப‌ங்கே‌ற்றன‌ர். உட‌லி‌ன் உயர‌த்‌தி‌ற்கு‌த் தகு‌ந்த எடை உ‌ள்ளதா என அ‌றிய‌ப் பய‌ன்படு‌ம் BMI (body mass index) அ‌ட்டவணை‌ப்படி 30 ‌கிலோ அ‌திகமாக இரு‌ந்தா‌ல் ஆயு‌ளி‌ல் 10 ஆ‌ண்டு குறையு‌ம். 40 ‌கிலோ அ‌திகமாக இரு‌ந்தா‌ல் ஆயு‌ளி‌ல் 13 ஆ‌ண்டுகளு‌க்கு மே‌ல் குறையு‌ம். மேலு‌ம், இதய நோ‌ய்க‌ள், ‌நீ‌ரி‌ழிவு ம‌ட்டும‌ல்லாம‌ல் பு‌ற்றுநோ‌‌ய்‌க்கு‌கூட உட‌ல் பரும‌ன் காரண‌மாக இரு‌க்க‌லா‌ம் எ‌ன்று ஆ‌ய்வு முடிவு தெ‌ரி‌வி‌க்‌கிறது. ‌நிறைய நகர‌ங்க‌ளி‌ல் கா‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌கி‌ன்றன. அவ‌ற்றை‌ப் பய‌ன்படு‌த்துபவ‌ர்க‌ள் ‌சி‌றிது யோ‌சி‌க்க வே‌ண்டு‌ம். நட‌க்க முடி‌ந்த இட‌ங்களு‌‌க்கு நட‌ந்து செ‌ல்வதே ந‌ல்லது. ஏனெ‌னி‌ல் அது ஒரு ந‌ல்ல உட‌ல்ப‌யி‌ற்‌சியாகு‌ம் எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளன‌ர்.

''இது ‌மிக‌ப்பெ‌ரிய கலா‌ச்சார மா‌ற்ற‌த் தேவை‌க்கு இ‌ட்டு‌ச் செ‌ன்று‌ள்ளது. உட‌ல் பரும‌ன் ‌சி‌க்க‌ல் ஆ‌ண்டி‌ற்கு ஆ‌ண்டு அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. நா‌ம் உடனடியாக‌ச் செய‌ல்பட வே‌ண்டு‌ம்'' எ‌ன்று பேரா‌சி‌ரிய‌ர் ‌கி‌ங் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்!

நமது உடலிற்குத் தேவையான சத்துக்களை குறைந்த அளவிற்கே அளிக்கும் உணவு வகைகளையு‌ம், பான‌ங்களையு‌ம் சா‌ப்‌பிடுவத‌ன் மூல‌ம் உட‌ல் பருமனை‌க் குறை‌க்க முடியு‌ம் எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.பெ‌ல்‌ஸ்‌லி, ஆத‌ம் ட்ரூவோ‌ன்‌ஸ்‌கி ஆ‌கியோ‌ர் தலைமை‌யிலான ஆ‌ய்வு‌க் குழு‌வின‌ர் குறை‌ந்த கலோ‌ரி அளவு கொண்ட இ‌னி‌ப்பு‌ச் ச‌த்துக‌ள், ச‌‌க்‌தி‌யி‌ன் அட‌ர்‌த்‌தி த‌ன்மை, ‌திரு‌ப்‌தி‌த் த‌ன்மை ஆ‌கியவை‌த் தொட‌ர்பாக நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் நா‌ம் சா‌ப்‌பிடு‌ம் உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ல் இனிப்பு அளவைக் குறை‌த்து‌க் கொ‌ண்டாலே உட‌ல் பருமனை‌க் க‌ட்டு‌ப்படு‌த்துவது எ‌ளிது எ‌ன்பதை‌க் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர்.
குறை‌ந்த கலோ‌ரி ‌‌கொ‌ண்ட இ‌‌‌‌‌னி‌ப்பு உணவுகள் பெரு‌ம்பாலான பான‌ங்க‌ளி‌ன் கலோ‌ரி அளவை பூ‌ஜ்ய‌ம் அளவு‌க்கு குறை‌த்து ‌விடு‌ம். அதே‌ப்போ‌ன்று நா‌ம் சா‌ப்‌பிடு‌ம் உண‌வி‌ன் கலோ‌ரி ச‌த்‌தி‌ன் அட‌ர்‌த்‌தி‌யி‌ன் அளவைய‌ம் குறை‌க்‌கி‌ன்றன. வே‌தி‌ப் பொரு‌ள் கல‌ந்த பான‌ங்களையு‌ம், குறை‌ந்த கலோ‌ரி ச‌த்து உ‌ள்ள உணவு வகைகளை அ‌திகமாக சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌ற்போதைய உணவு சா‌ப்‌பிடு‌ம் நெ‌றிமுறையாக இ‌ப்போது உ‌ள்ளது எனவு‌ம் ஆத‌ம் ட்ரூவோ‌ன்‌ஸ்‌கி கூ‌றியு‌ள்ளா‌ர்.இத‌ற்கு மு‌ந்தைய ஆ‌ய்வுக‌ளி‌லு‌ம் குறை‌ந்த இ‌னி‌ப்பு ச‌த்து‌க்கொ‌ண்ட உணவு வகைக‌ள் உட‌ல் எடையை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த உதவு‌ம் மு‌க்‌கியமான வ‌ழியாக க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது. மரு‌த்துவ‌ர் ஜா‌ர்‌ஜ் ‌ப்ளா‌க்பே‌ன் நட‌த்‌திய சோதனை‌யி‌ல், குறை‌ந்த கலோ‌ரி கொ‌ண்ட ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் எ‌ன்ற இ‌னி‌ப்பு‌ச் ச‌த்தை உண‌வி‌ல் கல‌ந்து சா‌ப்‌பி‌ட்டவ‌ர்க‌ளி‌ன் உட‌ல் எடையை க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம் தெ‌ரி‌ந்ததாகவு‌ம், கு‌ண்டான பெ‌ண்க‌‌ளி‌ன் உட‌ல் எடையை‌க் ‌நீ‌ண்ட கால அடி‌ப்படை‌யி‌ல் க‌ட்டு‌ப்படு‌த்தவு‌ம் ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் உத‌வியது தெ‌ரிய வ‌ந்ததாக அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் 20 முத‌ல் 60 வயது ‌நிர‌ம்‌பிய 168 கு‌ண்டு‌ப் பெ‌ண்க‌ள் இர‌ண்டு ஆ‌ண்டு கால‌ம் ஈடுபடு‌த்த‌ப் ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த 168 பெ‌ண்களுமே குறை‌ந்த கலோ‌ரி ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் இ‌னி‌ப்பு‌ச் ச‌த்து‌ப் பொரு‌ள் கல‌ந்த உணவு, பான‌ங்க‌ள் த‌ங்க‌ள் உட‌ல் எடை குறை‌ப்‌பி‌லு‌ம், ‌நீ‌ண்ட கால அள‌வி‌ல் உட‌‌ல் எடையை க‌ட்டு‌க்கு‌ள் வை‌த்‌திரு‌க்கவு‌ம் உதவவுதாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். ம‌ற்றொரு ஆ‌ய்‌வி‌ல் ச‌‌க்ராலோ‌ஸ் எ‌ன்ற குறை‌ந்த கலோ‌ரி ச‌த்து இ‌னி‌ப்பூ‌ட்டு‌ம் பொரு‌ட்க‌ள் கல‌ந்த உணவை சா‌ப்‌பி‌ட்ட குழு‌ந்தைக‌‌ளி‌ன் நடவடி‌க்கைக‌ள் போதுமான அளவ‌ி‌ற்கு அ‌திக‌ரி‌க்க உத‌வியது‌ட‌ன், குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் எடை கு‌றி‌யீடு குறைவத‌ற்கு‌ம் காரணமாக இரு‌ப்பது க‌ண்ட‌றிய‌ப் ப‌‌ட்டு‌ள்ளது.அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கு‌ண்டானவ‌ர்க‌ளி‌ன் ‌வி‌கித‌த்‌தி‌ற்கு‌ம், த‌ற்போது உண‌வி‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ள இ‌னி‌ப்பு‌த் த‌ன்மை‌க்கு‌ம், உண‌வி‌ல் ‌நீ‌க்க‌ப்பட வே‌ண்டிய அளவு இ‌னி‌ப்பு‌ச் ச‌த்‌தி‌ன் அளவு‌க்கு‌ம் தொட‌ர்பு இரு‌ப்பதாக அவ‌ர் தெ‌ரி‌வி‌த்த‌ள்ளா‌ர். வாடி‌க்கையாள‌ர்களு‌க்கு யா‌ர் சொ‌ல்வதை ந‌ம்புவது எ‌ன்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌கி‌ன்றது. சா‌ப்‌பிடு‌ம் அள‌வி‌ல் கலோ‌ரி க‌த்தை குறை‌ப்பது, நா‌ம் தே‌ர்‌ந்தெடு‌க்கு‌ம் உணவு வகைக‌ளி‌ல் கலோ‌ரி ச‌த்து குறைவானவ‌ற்றை‌த் தே‌ர்வு செ‌ய்வது, உட‌ற் ப‌யி‌ற்‌சியை அ‌திக‌ரி‌ப்பது ஆ‌‌கிய மூ‌ன்‌று‌ம் உட‌ல் எடையை‌க் குறை‌க்க உதவு‌ம் எ‌ன்று சுகாதார வ‌ல்லுந‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். __._,_.___

Wednesday, February 6, 2008

அமெரிக்கா நடத்துவது இஸ்லாத்திற்கு எதிரான போர்: முன்னாள் US அட்டர்னி ஜெனரல்


ராம்சே கிளார்க்’ அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்) ஆவார். அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க். சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்….

சர்வதேச சமூகம்" என சமகால அரசியலில் பரவலாக பயன் படுத்தப் படுகின்ற சொற்றொடர், அமெரிக்காவின் "புதிய உலக நியதி"யை பரப்பவும், அதன் நலனை மேம்படுத்தவும் பயன் படுத்தப்படும் மாற்றுப் பெயர் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?
பரவலான உலகமயமாக்கலையும், பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதையும் நோக்கமாக கொண்டு, செயல்படக் கூடியவர்கள், உலகம் உளரீதியாக ஒருங்கிணைந்த சமூகமாக உணர்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் அது அவர்களது செயல் திட்டத்தை எளிதாக்கி விடுகிறது.

படு வேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கலும் அதனோடு வலுவாகப் பிணைக்கப்பட்டுள்ள அமெரிக்க ரீதியிலான முதலாளித்துவம், உலகம் நெடுக புதிய ஏற்றத்தாழ்வுகளைப் பல்கிப் பெருக வைத்துள்ளன. இந்தச் சூழல் குறித்து தங்கள் கருத்து…?

இதனை உலக நாகரீகத்திற்கும், மனிதத்துவத்திற்கும் எதிரான மிகப் பயங்கரமான அபாயமாக நான் கருதுகிறேன். இந்த அபாயம் அரசியல் ரீதியானது மட்டுமல்ல, பொருளாதார ரீதியானதும் கூட என்பது வெளிப்படை. இவற்றையெல்லாம் விட அடிப்படையாக சாதாரண மட்டத்தில் சொல்லப்போனால், ஒரே விதமான தொழில்நுட்பம், ஒரே விதமான பொழுது போக்கு தனித்துவம் கொண்ட ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் பேராபத்தாகும். தனது பொருளாதார சக்தியின் மூலம் உலகில் மூலை முடுக்குகளிலெல்லாம் அமெரிக்கா சித்தாந்த ஊடுருவல் செய்கிறது. "வியாபாரமயமாக்கல்" மற்றும் 'பொருள் முதல் வாதம்' முதலியவை மிகப் பெரும் சக்திகளாக உருப்பெற்றுள்ளன. இதற்கு பலிகடாவாக ஆக்கப்படுவது சாதாரண மக்களது வாழ்வின் அம்சங்களான வலி, துயரம், அவர்களது வரலாறு மற்றும் அவர்களது கூட்டு கற்பனையின் வடிவமாகத் திகழும் 'கலாச்சாரம்' ஆகியவைதான்.

ஆனால் வளர்ச்சியின் பெயரால் உலகில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் அமெரிக்க திட்டத்துக்கு எதிராக மாற்று வளர்ச்சித் திட்டங்கள் உலகின் பல பாகங்களில் உருக்கொள்கின்றனவே…..

'உலகமயமாக்கலின்' தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே வேகமாக அதிகரித்து வருவதை நான் காண்கிறேன், உலகமயமாக்கலின் வீச்சு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக, உலகமயமாக்கலின் உண்மையான முகம் குறித்த அறிவு, அதனால் தனிப்பட்ட சமூகங்களுக்கு விளையக் கூடிய தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு ஆகியவை இத்தகைய மாற்றங்களுக்கு வித்திடும் எனக் கருதுகிறேன்.

புதிய காலனித்துவத்தின் மற்றொரு வடிவாக உலகமயமாக்கல் பலராலும் கருதப்படுகிறது. இதனை நீங்கள் ஒத்து கொள்கிறீர்களா?

பழைய ஏகாத்தியபத்தியத்திற்கும் நவீன உலகமயமாக்கலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இந்தியச் சூழலில் தெளிவாக காண முடியும். இந்த தேசம் அன்னிய ஆதிக்கத்தின் கொடூரங்களையும், சுரண்டல்களையும், அதனால் விளைந்த வறுமையையும் கண்டிருக்கிறது, ஆனால் படுவேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கல் வாழ்வின் எல்லா அம்சங்களையும் ஊடுருவி வரும் புதிய மேலாதிக்கமாக உருக் கொண்டுள்ளது.

உதாரணமாக, இந்தியத் திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால், முன்பெல்லாம் திரைப்படங்களின் தோற்றத்தில் இந்தியத் தன்மை எடுப்பாகத் தெரிவதைப் பார்க்க முடியும். இப்பொழுதோ நகைச்சுவை, குணச்சித்திரம், இசை என எல்லாமே உலகமயமாக்கலுக்கு ஏற்ப மாறி வருகின்றன. இந்தப் போக்கு வியாபாரமயமாக்கலையும், பொருள் முதல் வாதத்தையும் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை விட பயங்கரமானதாக ஆக்கி விட்டது என்றே சொல்லவேண்டும்.

பழைய காலனித்துவத்தில், குறைந்தபட்சம் நமது எதிரி யார் என்பது குறித்த தெளிவு இருந்தது. முதுகுக்குப் பின்னால் பதிக்கப்பட்டிருந்த கத்தி நம்மை உறுத்திக் கொண்டே இருந்தது. நமது வாழ்வை சீராக்கி என்ன செய்யவேண்டும் என்ற அறிவு நமக்கு இருந்தது. புதிய வியாபாரமயமான உலகில் நாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆனால் அதைக் குறித்த உணர்வு நமக்கு முற்றுமாக இல்லை. அடிமைப்படுத்தப்பட்டிருப்பவனுக்கு, தன்னைப் பிணைத்திருக்கும் விலங்கு குறித்த உணர்வே இல்லையென்றால் விடியலுக்கான நம்பிக்கை எது? உலகமயமாக்கலின் தற்கால போக்கைப் பார்த்தால் மனிதனின் ஆசைகளும் கற்பனைகளும் உலகமயமாக்கலுக்கு அடிமையாகி உள்ளன, இது மிகப் பெரும் அபாயமாகும்.

இராக் மீதான அமெரிக்காவின் “அத்து மீறிய ஆக்கிரமிப்பை’ நீங்கள் பல அரங்குகளில் வலுவாக எதிர்த்துவருகிறீர்கள...கடந்த சிலமாதங்களில் இராக் குறித்த அமெரிக்காவின் அணுகு முறையில் ஏதேனும் மாற்றத்தைக் காண்கிறீர்களா?

இராக் மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பில், அமெரிக்கா எண்ணிப் பார்த்திராத அளவிற்கு உயிரிழப்பையும், பொருளிழப்பையும் சந்தித்துள்ளது. மிக வலுவான ஆயுதமேந்திய எதிர்ப்பினையும் அமெரிக்கா அன்றாடம் நேரிட வேண்டியுள்ளது. இதனால் உலக அரங்கில் அமெரிக்கா பெரும் அவமதிப்பை எதிர்கொள்ள வேண்டியாகி விட்டது…

எப்பொழுது பார்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் புரிந்து வருவதாக அமெரிக்கா சொல்கிறதே! அந்த ‘பயங்கரவாதம்’ அமெரிக்காவின் சுய உருவாக்கமா?

பயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகப் பறைசாற்றிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் இஸ்லாத்தின் தாக்கத்தைக் கண்டிராத அளவிற்கு இஸ்லாத்தை முற்றுமாக துடைத்தெறிந்து விடுவதே அவர்களது உண்மையான நோக்கமாகும்.

இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். பனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்; இப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம என்று சொல்கிறீர்களா?

இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில் மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்.

உலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. 'மார்க் குவைன்' என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் 'தேவையில்லாத தேவைகள்' பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.

இந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.

அமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக் கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.

அதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.

இராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ‘அணு ஆயுதம்’ உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்’ எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கைஅயும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

நன்றி: சமரசம் 1-15 பிப்ரவரி 2008 இதழ்

தனியார்மயமாக்கப்படும் போர்கள்!

உலகமயமாக்கல் காலத்தில் மிக அதிகமாக தனியார் மயமாக்கப்படுவது வங்கிகளோ, நிறுவனங்களோ அல்ல, போர்கள்தாம். இதற்கு ஈராக் நல்ல உதாரணம். அங்குதானே இப்போதும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஓர் அமெரிக்க ஆய்வை ஆதாரமாகக் கொண்டு ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகார்வபூர்வ கணக்கின்படி ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சமாகும். இவர்களைத் தவிர அமெரிக்காவிலிருந்தம் வேறு பல நாடுகளிலிருந்தும் வந்த ஒரு இலட்சத்து முப்பதாயிரம் வீரர்களும் அங்கு உள்ளனர். அரசின் கணக்கில் இவர்கள் வீரர்கள் அல்லர். பல்வேறு நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்த, பயற்சி பெற்ற படையாளிகள். அதாவது கூலிப்படையினர்.
தற்போது நடைபெறுகின்ற போர்களைக் கட்டுப்படுத்துவது இத்தகைய கூலிப்படையினரின் கைகளின்தான் உள்ளது. இப்படிக் கூலிப்படையகளை அனுப்புகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் களத்தில் உள்ளன. அந்த நிறுவனங்களின் பட்ஜெட் சில நாடுகளின் பட்ஜெட்களைவிட அதிகம். ஒரு கணக்கின்படி அவற்றின் பட்ஜெட் தொகை 200 பில்லியன் டாலரைத் தாண்டும். ஈராக்கில் பல கொடூரங்களுக்குத் தலைமை தாங்கியது பிளாக் வாட்டர் எனும் கூலிப்படையினரே.

கலாச்சார, இராணுவ ரீதியிலான இந்தப் புதுவகை ஆக்கிரமிப்பு முறை குறித்து குவைத்திலிருந்து வெளிவருகின்ற அல்முஜ்தமா வார இதழ் முகப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தது. இது குறித்து ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக முஹம்மத் ஜமால் அரஃபா எழுதியுள்ள 'புதிய கூலிப்படைகளும் போர்களின் தனியார் மயமாக்களும்' (அல்முர்தஸிகத்துல் ஜூதத் வகஸ்கஸதுல் ஹூரூப்) எனும் அரபி நூலில் ஆங்கிலப் புத்தகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல விசயங்களை வெளிக்கொணர்ந்துள்ளார். இது ஒரு கூலிப்படையினரின் பிரச்னை மட்டுமல்ல என்கிறார் ஜமால் அரஃபா. கூலிப்படையின் மறைவில் சிலுவைப் போராளிகளின் பாரம்பர்யம் என உரிமை கொண்டாடுகின்ற 'மால்ட்டா போராளிகள்' போன்ற ஏராளமான தீவிரவாதக் குழுக்கள் முஸ்லிம் நாடுகளில் ஊடுருவியுள்ளன். தாஃபூரிலும் சோமாலியாவிலும் நடைபெறுகின்ற குழப்பங்களின் பிண்னணியில் இவர்கள் உள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

எதற்காக கூலிப்படை என்ற கேள்வியையும் நூலாசிரியர் எழுப்புகின்றார். ஈராக்கில் செய்தது போல், சொற்களால் வர்ணிக்க முடியாத கொடூரங்களைச் செய்யவே இந்தக் கூலிப் படையினர்! இப்படிச் செய்தால் அரசும் அதிகாரப்பூர்வ இராணுவமும் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாகத் தப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கையை மட்டுமே அரசு வெளியிடும். கூலிப்படையினர் எத்தனைப்பேர் இறந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பிரச்னையே அல்ல. இறந்த வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிக்கவும் மக்களின் கோபத்தை ஓரளவுக்குக் குறைக்கவும் அரசுகளால் இயலுகின்றன.

கூலிப்படையினராக வருகின்றவர்கள் அமெரிக்காவின் குடிமக்களாக இருக்கமாட்டார்கள். கிரீக் கார்டு மட்டுமே பெற்றிருப்பர். அவர்களுக்கு என்ன ஆனாலும் யாருக்கு இழப்பு?
நன்றி: சமரசம் இதழ்

Tuesday, February 5, 2008

தென்காசி குண்டு வெடிப்பு - குமார் பாண்டியன் அண்ணன் உள்பட 3 பேர் கைது

தென்காசி: தென்காசி குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட குமார் பாண்டியன் அண்ணன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் கடந்த 24ம் தேதி இரவு அடுதடுத்து குண்டுகள் வெடித்தன. பஸ் நிலைய குண்டு வெடிப்பில் வெற்றிலை வியாபாரி உள்பட இருவர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக தென்காசியில் முன்பு படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவிப்பாண்டியன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து தென்மண்டல ஐ.ஜீ.சஞ்சீவ் குமார் டிஐஜி கண்ணப்பன், எஸ்பி ஸ்ரீதர் ஆகியோர் நேற்று மாலை தென்காசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.அவர்கள் கூறுகையில், தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி குண்டு வெடித்தது. இது தொடர்பாக தென்காசி மலையான்தெருவை சேர்ந்த சமீபத்தில் கொலையுண்ட குமார்பாண்டியனின் அண்ணன் ரவிபாண்டியன், செண்பகவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுடலையாண்டி மகன் குமார் என்ற கேடிசி குமார், செங்கோட்டை கிருஷண்ன் கோவில் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் நாராயண சர்மா ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம்.அவர்களிடமிருந்து வெடிக்காத ஒரு குண்டு, சர்க்கியூட், டெட்டனேட்டர்கள் டைம் செட் செய்யும் கருவி, பேட்டரி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவர்கள் தயாரித்த 3 குண்டுகள் தான் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் வெடித்தன. இவை தவிர மேலும் 3 குண்டுகளை கைப்பற்ற வேண்டியது உள்ளது.பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்களை கைது செய்தோம். ரவிபாண்டியனிடம் விசாரித்தபோது தனது வீட்டில் 4 பேர் பலியான போதும் இந்துகளிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. இப்படி ஓரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தால் அவர்கள் ஒன்றாக சேர்வார்கள் என்ற நோக்கத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தார்.அவருக்கு சொந்தமான கேபிள் டிவி அறையில் வைத்து குண்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 14 குண்டுகளை தயாரித்து அவைகளை இரண்டு இரண்டாக சேர்த்து 7 குண்டுகளாக மாற்றி உள்ளனர். இந்த குண்டுகளால் விளையும் சேதம் மிகவும் குறைவாக இருக்கும்.கடந்த ஜூலை மாதத்திலிருந்தே குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகுதான் 6 பேர் கொலை நடந்துள்ளது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிந்துள்ளது. இவர்கள் மூன்று பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பலர் கைதாவார்கள்.ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு முன்பாக பியூஸ் கேரியரை உருவி மின்தடையை ஏற்படுத்தியுள்ளனர். சுவிட்ச் ஆன் செய்த 20 அல்லது 30 செகண்டுக்குள் வெடிக்கும் வகையில் குண்டுகளை செட் செய்துள்ளனர். அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தி குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தமிழகத்தில் வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை.வீண் பதற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கம். தென்காசியில் 98 சதவீகித மக்கள் அமைதியை விரும்புகின்றனர். வெறும் 2 சதவீகிதத்தினர் மட்டுமே தங்களது சுயலாபத்திற்காக அமைதிக் கூடாது என்று நினைக்கின்றனர்.பொதுமக்கள் ஓத்துழைப்பு கொடுத்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம் என்றார் அவர்.இந்து முன்னணியைச் சேர்ந்த குமார் பாண்டியனின் அண்ணனே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசிய சம்பவம் தென்காசியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Source: THATS TAMIL
http://thatstamil.oneindia.in/news/2008/02/05/tn-3-including-kumar-pandian-brother-arrested.html

Monday, February 4, 2008

இது கட்டுகதை அல்ல பரிசோதிக்கப்பட்ட உண்மை

Vander Hoven, a psychologist from Netherlands, announced his new discovery about the effect of reading the Qur'aan and repeating the word ALLAH both on patients and on normal persons. The Dutch professor confirms his discovery with studies and research applied on many patients over a period of three years. Some of his patients were non-Muslims, others do not speak Arabic and were trained to pronounce the word 'ALLAH' clearly; the result was great, particularly on those who suffer from dejection and tension. Al Watan, a Saudi daily reported that the psychologist was quoted to say that Muslims who can read Arabic and who read the Quran regularly could protect themselves from psychological diseases.
The psychologist explained how each letter in the word 'ALLAH' affects healing of psychological diseases. He pointed out in his research that pronouncing the first letter in the word 'ALLAH' which is the letter (A), released from the respiratory system, controls breathing. He added that pronouncing the velar consonant (L) in the Arabic way, with the tongue touching slightly the upper part of the jaw producing a short pause and then repeating the same pause constantly, relaxes the aspiration.
Also, pronouncing the last letter which is the letter (H) makes a contact between the lungs and the heart and in turn this contact controls the heartbeat. What is exciting in the study is that this psychologist is a non-Muslim, but interested in Islamic sciences and searching for the secrets of the HolYQuran Allah, The Great and Glorious, says, We will show them Our signs in the universe and in their ownselves, until it becomes manifest to (remember me in ur Dua) ALLAHU AKBAR Allah is great Allah keeps me going day and night. Without Allah, I am no one. But with Allah, I can do everything.
Allah is my strength.' This is a simple test. If you love Allah and you are not ashamed of all the great things that he has done for you, send this to everyone you know, May Allah help u to succeed...Ameen During the next 60 seconds, stop whatever you are doing, and take this opportunity. (Literally it is only 1 minute) All you have to do is the following: You simply say 'A prayer' for the person that sent you this message. Allah said, 'If you are ashamed of me, I will be ashamed of you.' If you are not ashamed, send this message...only if you believe. 'Yes, I love Allah. Allah is my fountain of Life and My Savior.





Jazaaq'Allah