Thursday, April 24, 2008

தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள்

بسم الله الرحمن الرحيم
புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரித்தானது. அல்லாஹ்வின் அருளும்இ சாந்தியும்இ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும்இ அவர்களின் குடும்பத்தினர்கள்இ தோழர்கள்இ தோழியர்கள்இ அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!
முதலாவது அம்சம்:-
இறையச்சத்தை ஏற்படுத்திஇ அதனை வலுப்படுத்தக் கூடியவைகள்.
1-தொழுகைக்காக தயாராகுதலும்இ அதற்கான ஆயத்தங்கள் செய்வதும்.
இது பல அம்சங்களைக் கொண்டதாகும். அவைகளில்:- முஅத்தின் கூறும் பாங்கைப் போன்று பதில் பாங்கு கூறுதல்இ அதானுக்கும்இ இகாமத்திற்கு இடையில் பிரார்த்தித்தல்இ பிஸ்மில்லாஹ் கூறி உழூவை ஆரம்பம் செய்தல்இ அதன் பின்னர் திக்ர்இ பிரார்த்தனைகள் செய்தல்இ மிஸ்வாக் செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுதல்இ தூய்மையான அழகிய ஆடைகள் அணிந்துஇ அடக்கத் தோடும்இ பணிவோடும் பள்ளிக்குச் சென்று தொழுகையை எதிர் பார்த்திருத்தல்இ தொழுகையின் (ஸஃப்-ஐ) வரிசையை சரி செய்வதுடன் அதில் நெருக்கமாக நிற்றல் போன்ற காரியங்கள் உள்ளடங்கி இருக்கும்.
2-தொழுகையில் அமைதி பேணுதல்.
நபி (ஸல்) அவர்கள் தனது எலும்புகளின் இடுக்குகள் அதனதன் இடத்தில் மீண்டு நிலை பெறுகின்ற வரை தொழுகையில் அமைதி பேணுபவர்களாக இருந்தார்கள்.
3-தொழுகையில் மரணத்தை நினைவு கூறுதல்.
(உனது தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவீராக! ஏனெனில் ஒரு மனிதன் தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவதால் அவனது தொழுகையை அழகாக தொழுவதற்கு வாய்ப்புக்கிட்டும். மேலும் இதன் பின்னரும் தொழுகை கிடைத்திடாது என எண்ணித் தொழும் மனிதனின் தொழுகை போன்று தொழுவாயாக! என ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
4-ஓதப்படும் திருமறை வசனங்களையும்இ திக்ருகளையும் சிந்தனைக்கு எடுத்துஇ அவைகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்துதல்.
இதில் உள்ளம் கனிந்துஇ தாக்கம் ஏற்பட்டுஇ கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட வேண்டுமானால் ஓதப்படும் வசனங்கள்இ திக்ருகள் ஆகியவற்றின் கருத்துக்களின் ஆழத்தை அறிந்த ஒருவருக்கே இது சாத்தியமாகும். இது பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற போது: (இன்னும் அவர்களுடைய இரட்சகனின் வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் குருடர்களையும்இ செவிடர்களையும் போல் அதில் விழமாட்டார்கள். சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்-26:73) எனக் குறிப்பிடுகின்றது.
'தஸ்பீஹ் உடைய வசனங்கள் இடம் பெறுகின்ற போது தஸ்பீஹ் செய்வது கொண்டும்இ (இஸ்திஆதா) பாதுகாப்பு வசனங்கள் வருகின்ற போது பாதுகாவல் தேடுவது கொண்டும் செயல்படுவதுடன்இ வசனங்களுடன் மனம் விரிந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது சிந்திப்பதற்கு துணையாக அமையும். மேலும் ஃபாதிஹா அத்தியாயம் ஒதப்பட்டதும் அதற்குப் பதிலளித்து ஆமீன் கூறுவதால் மகத்தான கூலியும் கிடைக்கின்றது. (இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள் ஏனெனில் மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர். எவர் ஆமீன் கூறுவது மலக்குகளின் ஆமீனுடன் நேர்படுகின்றதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). அதே போன்று இமாம் 'ஸமி அல்லா ஹு லிமன் ஹமிதா' எனக் கூறினால் அதற்குப் பதிலளித்து ' றப்பனா லகல் ஹம்து' எனக் கூறுவது மகத்தான கூலியைப் பெற்றுத்தரும்.
5-ஓதலை தனித்தனி வசனமாக ஓதுதல்.
இது வசனத்தை விளங்கவதற்கும்இ சிந்திப்பதற்கும் பிரதான காரணியாகவும்இ நபியின் சுன்னத்தாகவும் விழங்குகின்றது. நபி (ஸல்) அவர்களின் ஓதல் அமைப்பு ஒவ்வொரு எழுத்தையும் தெளிவாக்கிக் காட்டக்கூடியதாக இருந்தது.
6-அல் குர்ஆனை அதன் முறையைப் பேணியும்இ அழகிய ஓசை நயத்துடனும் ஓதுதல். அல்லாஹ் அல்குர்ஆனில்: 'மேலும் குர்ஆனை (தெளிவாக வும்)இ அதன் முறையைப் பேணியும் ஓதவீராக எனக் குறிப்பிடுகின்றான். 'உங்களது ஓசை நயத்தைக் கொண்டு அல் குர்ஆனை அலங்கரியுங்கள். ஏனெனில் அழகிய ஓசை நயம் குர்ஆனுக்கு இன்னும் அழகை அதிகரிக்கின்றது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹாகிம்).
7-அல்லாஹ் தொழுகையில் பதில் தருகின்றான் என்பதை அறிந்து தொழுதல். அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகை என்ற ''ஃபாத்திஹா' அத்தியாயத்தை எனக்கும் எனது அடியானுக்கும் இடையில் இரு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளேன்இ எனது அடியான் வேண்டுவதெல்லாம் அவனுக்கு (என்னால்) வழங்கப்படும்இ அடியான் 'அல்ஹம்து லில்லாஹ் றப்பில் ஆலமீன்' எனக் கூறினால் அல்லாஹ் எனது அடியான் என்னை புகழ்ந்துள்ளான் எனக் கூறுகின்றான்இ (அடியான்) 'அர்ரஹ் மானிர் ரஹீம்' எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் 'எனது அடியான் என்னை துதித்துள்ளான்' எனக் கூறுகின்றான்இ (அடியான்) 'மாலிகி யவ்மித்தீன்' எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் 'எனது அடியான் என்னை மேன்மைப்படுத்தி விட்டான்' என பெருமிதம் கொள்கின்றான்இ 'அடியான் இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்' எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் 'இது எனக்கும் எனது அடியானுக்கும் இடையிலுள்ளதா (சமாச்சாரமா)கும்இ எனது அடியான் வேண்டுவதை எல்லாம் அவனுக்கு உண்டு. (நான்வழங்குவேன்) (அடியான்) ' இஹ்தி நஸ்ஸிராதல் முஸ்தகீம் ஸிரா தல்லதீன் அன்அம்த அலைஹிம் கைரில் மஃக்லூபி அலைஹிம் வலல்லால்லீன்'; எனக் கூறினால் இது எனது அடியானுடன் தொடர்புடயதாகும்இ எனது வேண்டுவதை அவனுக்குண்டு) வழங்குவேன். என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறிக் காட்டினார்கள்.
8-தொழுகையில் (சுத்ரா)தடுப்பை வைத்துஇ அதன் பக்கமாக நெருங்கித் தொழுதல். இவ்வாறு தொழுவதால் உள்ளச்சத்துடனும்இ பார்வையை சிதறிவிடாமலும்இ அதனைக் கடக்க எத்தணிப் போரை தடுத்தும்இ நிம்மதியாக தொழுவதற்குத் துணையாகவும் அமைவதுடன்இ தொழுகையை ஊடறுத்துச் சென்று அதனை பாழடித்திடும் ஷைத்தான்களின் நடவடிக்கைகளிகலிருந்தும் தற்காத்துக் கொள்ள உதவும். (உங்களில் தொழும் ஒருவர் ஷைத்தான் அவரது தொழுகையை முறித்திடாதவாறு (சுத்ரா) தடுப்பிற்கு நெக்கமாக நின்று தொழுது கொள்ளட்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூதாவுத்).
9-வலது கையை இடது கையின் மீது ஆக்கி நெஞ்சின் மீது வைத்து தக்பீர் கட்டுதல்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தயாரானால் அவர்களது வலது கையை இடது கையின் மீதாக்கிஇ நெஞ்சின் மீது வைப்பார்கள. இந்த அமைப்பு பணிந்து யாசிப்பவன் நிலை போன்றதாகும். மேலும் அது வீண் சேட்டைகளிலிருந்து தடுப்பதுடன்இ இறை அச்சத் திற்கு மிகவும் நெருக்கமாகவும் அமைகின்றது.
10-பார்வையை சுஜூத் செய்யும் இடத்தின் பக்கமாக நோக்குதல்.
நபி (ஸல்) அவர்கள் தொழுவார்களாயின் தனது தலையை தாழ்த்தி தனது பார்வையை பூமியின் பக்கமாக செலுத்துபவர்களாக இருந்தார் கள். 'தஷஹ்ஹுத்' ஓதுவதற்காக அமர்ந்தால் தனது பார்வையை ஆட்காட்டி விரலின் பக்கம் நோக்கியவர்களாக ஆக்கிஇ அதனை (விரலை) அசைப்பவர்களாக இருந்தார்கள். என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
11-ஆட்காட்டி விரலை அசைத்தல்.
இது இரும்பால் அடிப்பதை விட ஷைத்தானுக்கு மிகவும் கடிமான ஒரு கடிமானதாகும் என(முஸ்னத் அஹ்மத்) எனும் கிரந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அடியான் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதும்இ வணக்கத்தில் மனத்தூய்மையும் பொதிந்துள்ளது. இது ஷைத்தான் மிகவும் வெறுக்கின்ற ஒரு காரியமாகும்.
12- தொழுகையில் அத்தியாயங்கள்இ வசனங்கள்இ திக்ர்(இறை நினைவு)கள்இ பிரார்த்தனைகள் ஆகியவற்றை பலதரப்படுத்தி ஓதுதல்.
இந்நிலை தொழுகையாளிக்கு புதிய பல கருத்துக்கள்இ திக்ருகள் ஆகியவற்றை உணர்த்தும். இந்த நடைமுறை சுன்னாவாகவும்இ உள்ளச்சத்தில் பூரண நிலையை தேடித்தரக் கூடியதாகவும் இருக்கின்றது.
13-சுஜூதின் வசனங்கள் குறிக்கிடும் போது சுஜுத் செய்தல்.
இன்னும் அழுதவர்களாக முகம் குப்புற விழுவார்கள் இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும். என 18:109 வனத்திலும்இ அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்கள் மீது ஓதிக் காட்டப்பட்டால் அவர்கள் அழுதவர்களாகவும்இ சுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள். என்று 19:58 வசனத்திலும் அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான். 'ஆதமின் மகன் சுஜ்தா வசனத்தை ஓதி சுஜுதும் செய்தால் ஷைத்தான் ஒரு ஓரமாக ஒதுங்கிஇ அழுது கொண்டுஇ எனக் கேற்பட்ட கேடே! சுஜூது செய்யுமாறு பணிக்கப் பட்ட ஆதமின் மகன் அதனை நிறை வேற்றினான். ஆகவே அவனுக்கு சுவனம் உண்டு. நானும்; சுஜுது செய்யும்படி ஏவப்பட்டிருந்தேன். ஆனால் (அதனை நிறை வேற்றாது) மறுத்தேன். ஆகையால் எனக்கு நரகம் உண்டு எனக் கூறிஇ கூறி கதறுவான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
14-அல்லாஹ்விடம் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாவல் கோரல்.
ஷைத்தான் எமது விரோதியாவான். தொழுகையாளி ஒருவரின் உள்ளச்சம் போகும் வரை அவனது தொழுகையை குழப்பிஇ அவனில் ஊசலாட்டங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது அவனது விரோத செயற்பாடுகளில் உள்ளதாகும். இதனால்தான் அடியான் அல்லாஹ்விடம் நெருங்கிச் செல்லும் போதெல்லாம் அவனை வழிப்பறிக் கொள்ளைக்காரன் போன்று தடுத்து நிறுத்துகின்றான். இறை விசுவாசி இவைகளுக்கு முன்னால் உறுதியாக இருப்பதும்இ சகிப்புடனும் இருந்து அதிலிருந்து விடுதலை பெறத் தேவையான திக்ருகள்இ தொழுகைகள் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடித்து (அரண் அமைப்பதால்) அவன் அதிலிருந்து விலகிவிடுகின்றான். ஏனெனில் 'ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாகும் என அல்லாஹ் அல்குர்ஆனில் 3:76-ல் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.
15-முன்னோர்களின் தொழுகையிலுள்ள உயிரோட்டத்தை சிந்தித்தல்.
அலி (ரலி) அவர்கள் தொழுகை நேரம் வந்து விட்டால் நடுக்கம் பிடித்துஇ அவர்களின் முகம் சிவந்து விடும். அது பற்றி அவர்களிடம் வினவப்பட்ட போது 'அல்லாஹ்வின் மீதாணையாக! வானங்கள்இ பூமிஇ மலைகள் ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்ட இந்தப் பொறுப்பை அவைகள் ஏற்காதுஇ ஒதுங்கிக் கொண்டன. ஆனால் நான் அதனை சுமந்து கொண்ட நேரம் வந்து விட்டது. எனக் கூறுவார்கள். எனவும்இ அறிவிக்கப்படுகிறன்றது. ஸயீத் அத்தன்னூகி என்ற அறிஞர் தொழ ஆரம்பித்தால் அதை முடிக்கின்ற வரை அவரது கன்னங்களிலிருந்து கண்ணீர் கசிந்த வண்ணமாகவே இருக்கும் எனக் கூறுகின்றனர்.
16- தொழுகையில் இறையச்சத்துடன் இருப்பது பற்றிய சிறப்பம்சத்தை உணர்தல்.
கடமையான தொழுகை சமூகம் தரும் எந்த முஸ்லிமும் அதன் உழூவையும்இ அதன் ருகூவையும்இ அதன் உள்ளச்சத்தையும் அழகு படுத்திக் கொள்வாரானால் அவரது பெரும்பாவமில்லாத எந்தப்பாவத்திற்கும் அது பரிகாரமாக அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்).
17-தொழுகை பிரார்த்தனை செய்ய வேண்டிய இடங்களில் -குறிப்பாக- சுஜூதின் நிலையில் அதிகம் ஈடுபாடு காட்டுதல்.
உங்கள் இரட்சகனை பணிவாகவும்இ இரகசியமாகவும் பிரார்த்தியுங்கள். (7:55). அடியான் தனது இரட்சகனுக்கு சுஜூதின் நிலையில் மிகவும் நெருக்கமாக இருக்கின்றான். ஆகவே அதில் பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள். (முஸ்லிம்).
18-தொழுகைக்குப்பின் ஓத வேண்டிய அவ்ராதுகளை ஓதுதல்.
இது இதயத்தில் இறை அச்சத்தின் தாக்கத்தை உண்டு பண்ணுவதோடுஇ தொழுகையில் பெறப்படும் பரகத் (அபிவிருத்தி) களை இஸ்திரப்படுத்தியும் வைக்கின்றது.
இரண்டாவது அம்சம் :-
இறையச்சத்தை திசை திருப்பிஇ அதன் தூய்மையை கெடுக்கின்ற சகல விதமான தடைகளையும்இ அம்சங்களையும் தவிர்த்தல்.
19-தொழுமிடத்தில் தொழுகையாளியை பராக்காக்குகின்றவைகளை அகற்றுதல்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் -அன்னை- ஆயிஷா (ரலி) அவர்களிடம் பல வர்ணங்கள் தீட்டப்பட்ட ஆடை ஒன்றிருந்தது. அதனைக் கொண்டு அவர்கள் தனது வீட்டின் ஒரு பகுதியை திரையிட்டுக் கொள்பவர்களாக இருந்தார்கள். இதனை அவதானித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எம்மை விட்டும் இந்த வருணத்திரையை அகற்றி விடும்! அதன் உருவங்கள் எனது தொழுகையில் என் கவனத்தை திசை திருப்பிக் கொண்டே இருந்ததது' எனக் கூறினார்கள். (புகாரி).
20-தொழுபவரின் தொழுகையை பாராமுகமாக்கும் வர்ணங்கள்இ எழுத்துக்கள்இ அல்லது உருவங்கள் ஆகியவைகளை தாங்கிய ஆடையுடன் தொழாதிருத்தல்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் நாட்சதுர வரி இடப்பட்ட ஒரு ஆடை இருந்தது. அதன் வர்ணங்களில் (தொழு கையில்) ஒரு போது அவர்கள் பார்வை பட்டுவிட்டது. அவர்களின் தொழுகை முடிந்ததும் 'இதனை அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா என்பரிடம் கொடுத்துவிட்டுஇ அதற்குப் பதிலாக எந்தவிதமான வரிகளும்இ வர்ணங்களும் அற்ற ஒரு ஆடையை மாற்றி கொண்டு வாருங்கள். ஏனெனில் அது எனது தொழுகையில் எனது கவனத்தை திசை திருப்பி விட்டது. எனக் நபி (ஸல்) அவர்கள் அன்னையாரிடம் கூறினார்கள். (முஸ்லிம்).
21- மனம் விரும்பும் உணவுப் பதார்த்தங்கள் தயார் நிலையில் இருக்கும் போது தொழாதிருத்தல்.
இது தொழுகையில் உள்ளச்சத்திற்கு ஊறு விளைவிக்கும் காரணத்தால் 'உணவு தயார் நிலையில் இருக்கின்ற போது தொழுகை இல்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்).
22- மலஇ ஜலங்களை அடக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தொழாதிருத்தல்.
மல ஜலங்களை அடக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் தொழுகையில் ஈடுபடுவதால் அவரது தொழுகயில் ஏற்படும் அச்சத்தை அது குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள்: மல ஜலங்களை அடக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தொழுகை கிடையாது எனக் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்). இவ்வாறு அடக்கிக் கொள்வது சந்தேகமின்றி இறையச்சத்தைப் போக்கிவிடும். இந்த சட்டம் வாயுக்களை அடக்கிக் கொள்வதற்கும் பொருந்தும்.
23- சிறு தூக்கம் மேலாடும் நிலையில் தொழாதிருத்தல்.
தொழுகையில் உங்களில் ஒருவரை சிறு தூக்கம் மிகைத்தால் அவர் என்னதான் பேசுகின்றார் என்பதை உணர்வுபூர்மாக அறிகின்றவரை உறங்கட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிகார்கள்.(புகாரி)
24- பேசிக் கொண்டிருப்பவருக்கும்இ தூங்குபவருக்கும் பின்னால் இருந்து தொழாதிருத்தல்.
'தூங்கபவருக்கும்இ பேசிக் கொண்டிருப்பவருக்கும் பின்னால் தொழ வேண்டாம்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்) பேசிக் கொண்டிருப்பவன் தனது பேச்சினால் கவனம் செலுத்திஇ அதனால் தொழுகையாளியை அவனது தொழுகையிலிருந்து திசை திருருப்பவான். இன்னும் தொழுகையாளியின் கவனத்தை திசை திருப்புகின்ற ஏதாவது ஒன்று உறக்கத்திலிருப்பவனிடமிருந்து வெளியாகும் சாத்தியம் தென்படும் என்பதை கவனித்தில் கொண்டே இவ்வாறு தடை செய்திருக்க முடியும். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)
25- சிறு கற்களை அகற்றுவதில் கவனத்தை செலுத்தாதிருத்தல்.
(சுஜுதின் போது) கற்களை அகற்றிக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம்: 'நீ அப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் இருப்பின் ஒரு தடவை செய்யலாம்'. என நபிகள் நாயகம் (ஸல்) சுட்டிக்காட்டினார்கள். (புகாரி) தொழுகையில் பேணப்பட வேண்டிய இறையச்சத்தைப் பாதுகாத்தல்இ தொழுகையில் அதிகப்படியான சேட்டைகளை செய்யாதிருத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தடுத்திருக்க முடியும். ஒருவர் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற அவசியம் ஏற்படின் அவர் தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன்னர்இ சுஜூத் செய்யும் இடத்தை விட்டும் கற்களை அகற்றி விட்டுஇ தொழுகையில் ஈடுபடுவதே மிகவும் சிறிந்த வழி முறையாகும்.
26- ஓதலால் பிறரை குழப்பத்தில் ஆழ்த்தாதிருத்தல்.
கவனியுங்கள்! நீங்கள் ஒவ்வொரு வரும் அவரது இரட்சகனுடன்தான் உரையாடுகின்றனர். எனவே உங்களில் ஒருவரை மற்றவர் இம்சிக்காமலும்இ ஒருவர் மற்றவரை விட ஓதலில் (அல்லது தொழுகையில்) சப்தத்தை உயர்த்தாமலும் இருக்கட்டும். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).
27- தொழுகையில் திரும்பிப்பார்ப்பதை விட்டு விடுதல்.
ஒரு அடியான் தொழுகையில் திரும்பிப் பார்க்காத வரை அல்லாஹ் அவனின் பக்கம் முன்னோக்கியவனாக இருக்கின்றான்இ அவன் எப்பொழுது திரும்பிப்பார்க்கின்றானோ அப்போது அவனை விட்டும் அல்லாஹ் திரும்பிக் கொள்கின்றான். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் அல்கிபாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்: ஒரு மனிதன் தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி வினவப்பட்டபோது 'அது ஒரு அடியானின் தொழுகையில் இருந்து ஷைத்தான் இராஞ்சிச் செல்லும் ஒரு இராஞ்சலாகும்' எனப் பதிலளித்தார்கள். (புகாரி).
28- பார்வையை வானின் பக்கம் உயர்த்தாதிருத்தல்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி மிக வண்மையாக கண்டித்திருப்பதுடன்இ அந்தச் செயலை: 'உங்களில் ஒருவர் தொழுகையில் இருந்தால் அவரது பார்வையை உயர்த்த வேண்டாம்' (அஹ்மத்). என்றும் 'தொழுகையில் தமது பார்வைகளை உயர்த்தும் ஒரு கூட்டத்தினர் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்! இல்லையேல் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுவிடும்' என்றும் தனது சொல்லால் எச்சரித்தும் இருக்கின்றார்கள். (புகாரி).
29- தொழுகையாளி தொழுகையில் தனக்கு முன்னால் துப்பாதிருத்தல்.
ஏனெனில் அது தொழுகையில் பேணப்பட வேண்டிய உள்ளச்சத்தையும்இ அல்லாஹ்வுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு முறையையும் சிதைத்து விடுகின்றது. 'உங்களில் ஒருவர் தொழுகையில் இருந்து கொண்டிருந்தால் அவருக்கு முன்னால் துப்புவதைத் தவிர்த்துக்; கொள்ளவும். ஏனெனில் அவர் தொழுகின்ற போது அவருக்கு முன்னால் அல்லாஹ் இருக்கின்றான். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
30- கொட்டாவியை முடிந்த அளவு அடக்கிக் கொள்ளுதல்.
'உங்களில் ஒருவர் தொழுகையில் இருக்கின்ற போது கொட்டாவி வந்தால் அவர் அதனை முடியுமான அளவு அடக்கிக் கொள்ளவும். ஏனெனில் (அதனூடாக) ஷைத்தான் நுழைகின்றான்'. என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
31- தொழுகையில் இடுப்பில் கை கட்டுவதை தவிர்த்தல்.
'தொழுகையில் இடுப்பில் கையை குத்தி நிற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
32- தொழுகையில் ஆடையை பூமியில் அழுந்தும் படி அணிதல்.
தொழுகையில் ஒருவர் ஆடையை பூமியில் அழுந்தும் படியாக விட்டு விடுவதையும்இ தனது வாயை மூடிக்கொள்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.(அபூதாவுத்)
33- மிகங்களுக்கு ஒப்பாகுவதை விட்டொழித்தல். காகம் போல் கொத்துதல்இ மிருகங்கள் போன்று அகட்டிப் படுக்கைஇ ஒட்டகம் போன்று ஒரு தளம் அமைத்துக் கொள்ளுவதல் ஆகிய மூன்று காரியங்களையும் தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். குறிப்பு:- இது சஊதி அரேபியாவின் பிரபல அழைப்பாளர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய அஷ்ஷேக்: முஹம்மத் பின் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் அவர்களின் 'தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் 33 வழி காரணிகள்' எனும் விரிவான நூலிலிருந்து அல்வத்தன் வெளியீட்டகத்தார் சுருக்கித் தந்த மடக்கையின் மொழி பெயர்ப்பாகும். விரிவை வேண்டுவோர் ஆசிரியரின் மூல நூலைப் பார்வையிடவும்). வெளியீடு:-அல் வதன் வெளியீட்டகம்அரபு மூலம்: அஷ்ஷைக்: முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்.தமிழில்: எம்.ஜே.எம். ரிஸ்வான் நன்றி:-அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்தபால் பெட்டி இலக்கம்: 1580அல்ஜுபைல் 31951இ சவூதி அரேபியா.தொலைபேசி 362 5500

Wednesday, April 23, 2008

மக்கா நேரத்தை உலக மைய நேரமாக்கக் கோரிக்கை

புனித மக்காபுவியின் உண்மையான மையமாக முஸ்லிம்களின் புனித நகரான, சவுதி அரேபியாவின் மக்கா நகரம் திகழ்வதாகக் கூறுகின்ற, சில முஸ்லிம் விஞ்ஞானிகளும், மதகுருமாரும், கிரீன்விச்சை மையமாகக் கொண்ட உலக நேரத்துக்குப் பதிலாக, மக்கா நேரம் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
கட்டாரில் நடந்த மாநாடு ஒன்றில் வாதிட்ட புவியியல் நிபுணர் ஒருவர், ஏனைய அனைத்து தீர்க்க ரேகைகளைப் போலல்லாது, மக்கா வட காந்தப் புலத்துடன் பொருந்திவருகிறது என்று கூறினார்கள்.
பிரிட்டிஷ்காரர்கள் உலகின் காலனித்துவ சக்தியாகத் திகழ்ந்த போதே, கிரீன்விச்சை மையமாகக் கொண்ட ஜி எம் டி நேரம் அறிமுகப்படுத்தத்கப்பட்டது என்று கூறிய அவர், அத்துடன் மாற்றங்கள் நடப்பதற்கான காலம் இதுவென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்து முஸ்லிம்களும் தாம் தொழுகின்ற போது மக்கா இருக்கும் திசையை நோக்கியே தொழுவார்கள்.

Thursday, April 17, 2008

ஹஜ்2008! 1,57,000 பேருக்கு அனுமதி! கூடுதலாய் 15,000 பேருக்கு வாய்ப்பு!! அமைச்சர் இ.அஹமத் அறிவிப்பு!

ஜெத்தா-ஏப்ரல்16, இவ்வாண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் சௌதி ஹஜ் அமைச்சர் டாக்டர்.ஃபுவாத் அல்ஃபார்சியுடன் கையெழுத்தான பின் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமத் அவர்கள் இன்று செய்தியாளரைச் சந்தித்து விளக்கினார்
இவ்வாண்டு 1,57,000 யாத்திரிகர்கள் ஹஜ் செய்வதற்காக சௌதிஅரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், கூடுதலாக 15,000 யாத்திரிகர்களுக்காக அனுமதி கோரியிருப்பதாகவும் அதற்கு அநேகமாக ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்திருக்கும் 1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்திரிகர் வருவர் என்றும் மீதிஇடங்கள் தனியார் முகவர் மூலம் வருபவர்க்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெக்காவின் புனிதப்பள்ளி விரிவாக்கப் பணியின் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்திரிகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்கள் இவ்வாண்டு மூன்று வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. புனிதப்பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் 'பச்சை' வகைப் பகுதி என்றும், 1 முதல் 6கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் 'வெள்ளை' வகைப் பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி 'அசிசியா' பகுதி என்றும் குறிப்பிடப்படும்.

இதில் பச்சைவகைப் பகுதிக்கு யாத்திரிகரிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளைவகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்கும். கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகள் முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது சௌதிக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும், சார்தூதர் டாக்டர்.அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர்.

Wednesday, April 16, 2008

கல்வி உதவித் தொகை!

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்கள்.
உயர்நிலை பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலை பள்ளிப் படிப்பு (+2), பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் கல்வி, மார்க்கக் கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழின் (xerox) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்தப் படிப்பு படிக்க இருக்கிறார்கள்? அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு? ஆகியவைகளையும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதி குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்தப் படிவத்தை முடிந்தவரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக்கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள். இறையருள் பெறுங்கள்!
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
TAMAM
P.O.BOX 1263
MUTTRAH-114
SULTANATE OF OMAN
விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 30-05-2008
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Tuesday, April 15, 2008

நலம் பெற இறைவனிடம் துஆ செய்வோம்

ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (ஜாக்) அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளரும், பரங்கிப்பேட்டை அல்ஹஸனாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான ஜனாப் எஸ்.ஐ.அப்துல் காதிர் மதனி அவர்கள் எதிர்பாரா விதமாக ஒரு சிறு விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மதனி அவர்களின் உடல்நலம் மிக விரைவில் சீர்பெற்று, இஸ்லாமிய மார்க்கப்பணிகள முன்போல் தொடர அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Monday, April 14, 2008

நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 1)

“(ஆங்கிலேயரின் வருகைக்கு முந்தைய) மத்தியக் கால இந்திய வரலாறு, இந்து குடிமக்கள் மீது முஸ்லிம் ஆட்சியாளர்கள் நிகழ்த்திய அட்டூழியங்கள் நிறைந்ததாக இருந்தது; இஸ்லாமிய ஆட்சியில் இந்துக்கள் பெரும் அவமதிப்பிற்கு உள்ளானார்கள். (இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில்) சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் பொதுவான அம்சங்கள் எதுவுமே இல்லை.” - இத்தகையப் பொய்களும் புனைந்துரைகளும் ஆங்கிலேயர்களால் இந்திய வரலாற்றுப் பாட நூற்களில் திட்டமிட்டு வலிந்து திணிக்கப் பட்டன. - பேராசிரியர் பி.என். பாண்டே பாராளுமன்ற மேல்சபையில் 29 ஜூலை 1977-ல் ஆற்றிய உரையிலிருந்து…

பேராசிரியர் டாக்டர் பி.என்.பாண்டே தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்; 1983-லிருந்து 1988 வரை ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநர் பதவி வகித்தவர்; பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணி புரிந்தவர்; சிறந்த வரலாற்று ஆய்வாளர்; ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமாக சுமார் 45 புத்தகங்கள் எழுதியிருப்பவர்.
1927-28-ல் பேரா. பாண்டே, அலகாபாத்தில் திப்பு சுல்தான் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். ஒருநாள், ஆங்கிலோ பெங்காலி கல்லூரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் அக்”கல்லூரியின் வரலாற்றுச் சங்கத்தை துவக்கி வைக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு அவரைச் சந்திக்க வந்திருந்தனர். கல்லுரியிலிருந்து நேராக வந்திருந்த அவர்களின் கைகளில் அவர்களின் வரலாற்றுப் பாட புத்தகங்கள் சில இருந்தன.
அந்தப் புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் புரட்டிய பாண்டேவின் கண்கள் ஒரு பக்கத்தில் நிலைகுத்தி நின்றன. ‘திப்பு முஸ்லிமாக மாறச் சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்‘ என்ற அந்த வரிகள், திப்புவைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த திரு. பாண்டேவுக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது.
அந்தப் புத்தகத்தை எழுதியவர் கல்கத்தா பல்கலைக் கழக சமஸ்கிருதப் பிரிவின் தலைவரான டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்பவர். திரு. பாண்டே உடனே டாக்டர் சாஸ்திரியைத் தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரத்தைத் தரும்படி கோரினார். பல நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பிய பிறகு, அது மைசூர் கெசட்டில் இருப்பதாக அவர் பதில் எழுதினார். மைசூர் கெசட்டின் பிரதி அலகாபாத்திலோ கல்கத்தா இம்பீரியல் நூலகத்திலோ இல்லாததால் திரு. பாண்டே மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு டாக்டர் சாஸ்திரியின் கூற்றை உறுதிப் படுத்தும்படி கேட்டார். துணை வேந்தரின் சார்பில், அச்சமயம் மைசூர் கெசட்டின் புதிய பதிப்பைத் தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரிகந்தையா திரு. பாண்டேவுக்கு பதில் எழுதினார். ‘3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை’, என்று தெளிவு படுத்தியது அவரது பதில்!
அக்காலத்தில், டாக்டர் சாஸ்திரியின் இந்தப் புத்தகம் வங்காளம், அஸ்ஸாம், பீஹார், ஒரிஸ்ஸா, உ.பி, ம.பி, மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரலாற்று பாடப் புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டு கல்லூரி பாடங்களில் இணைக்கப்பட்டிருந்தது. திரு. பாண்டே கல்கத்தா பல்கலைக் கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்த ஆதாரங்கள் அனைத்தையும் தந்து, அந்தத் தவறான தகவலைப் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கிவிடக் கோரினார். அவற்றை ஆய்ந்து உண்மையை அறிந்த துணை வேந்தர் அந்தப் புத்தகத்தையே பாடப் புத்தங்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டதாக பதில் எழுதினார்.
திரு. பாண்டே அவர்கள் அன்று இந்த மகத்தான செயலைச் செய்திருக்கவில்லை எனில், ஒருவேளை இன்று “இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம்” என்ற இஸ்லாமிய எதிரிகளின் ஆயிரம் டன் பொய்யினை இந்தியாவில் நிறுவுவதற்கான முக்கிய ஆதாரமாக சாகாக்களில் இது எடுத்தாளப்பட்டிருக்கும்.
சென்ற மாதம் (மார்ச் 2008) சென்னையில் இந்துத்துவ அமைப்புகளின் ஆதரவோடு முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் பற்றிய ஓவியக்கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஔரங்கசீப்பின் உத்தரவின்படி இந்துக் கோவில்களை இடித்துப் பள்ளிவாசல்கள் கட்டப்படுவது போன்ற ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தனர். மதத் துவேஷத்தைப் பரப்பும் இக்கண்காட்சிக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால் உடனே அது மூடப்பட்டது.
இந்துக்களின் விரோதி என்றே இந்திய வரலாற்றுப் பாட நூல்களில் சித்தரிக்கப் பட்டிருப்பவர் ஔரங்கசீப். இவர் மீது சுமத்தப்படும் பிரபலமான குற்றச்சாட்டுகளுள் ஒன்று, இவர் காசி விஸ்வநாதர் கோவிலை இடித்தார் என்பதாகும். இக்குற்றச்சாட்டையும் பேராசிரியர் பாண்டே ஆதாரங்களுடன் மறுக்கிறார்.
ஔரங்கசீப்பின் படை வங்காளத்தை நோக்கிச் செல்லும் வழியில் வாரணாசி வந்தடைந்தது. அவரது படையில் இடம் பெற்றிருந்த இந்து மன்னர்கள், “வாரணாசியில் ஒருநாள் தங்கிச் சென்றால் தங்கள் ராணிகள் கங்கையில் முழுகி விஸ்வநாதரைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என ஔரங்கசீப்பிடம் விருப்பம் தெரிவித்தனர். அவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார்.
ராணிகள் கங்கை நதியில் முழுகி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் அவர்களுடன் சென்ற கட்ச் மகாராணி மட்டும் திரும்பவில்லை. தகவல் அறிந்து கோபமடைந்த ஔரங்கசீப் ராணியைத் தேடிக் கண்டுபிடிக்க தனது அதிகாரிகளை அனுப்பி வைத்தார். இறுதியில் அவர்கள் விஸ்வநாதர் கோவில் சுவற்றில் இருந்த ஒரு சிலை நகரும் வகையில் அமைக்கப் பட்டிருந்ததைக் கண்டனர். அச்சிலையை நகர்த்தியபோது அதன் கீழே பாதாள அறை ஒன்றிற்குச் செல்லும் படிக்கட்டுகள் இருந்தன. கட்ச் ராணி அந்த அறையில்தான் மானபங்கம் செய்யப்பட்டு அழுது கொண்டிருந்தார். அந்த அறை விஸ்வநாதர் சிலை இருந்த இடத்திற்கு நேர் கீழே இருந்தது.
அதிர்ச்சி அடைந்த இந்து மன்னர்கள் இக்குற்றச் செயலுக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரினர். கற்பக்கிருகத்தின் நேர் கீழே இது நடந்ததால் கோவிலின் புனிதம் கெட்டு விட்டதாகவும் கருதப்பட்டது. அதனால் விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படவும், அந்தக் கோவில் இடிக்கப்படவும், குற்றவாளியான கோவில் பூசாரி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவும் ஔரங்கசீப் உத்தரவு பிறப்பித்தார்.
டாக்டர் பட்டாபி சீதாராமையா, டாக்டர் பி.எல்.குப்தா ஆகியோர் இச்சம்பவத்தை ஆதாரங்களுடன் தங்கள் புத்தகங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.
ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில், கோவில் இடிக்கப்படக் காரணமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு, அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்த ஔரங்கசீப் குற்றவாளியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.
இந்திய வரலாறு எந்த அளவிற்கு பாரபட்சமான முறையில் திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இச்சம்பவங்கள் மிகச்சிறிய உதாரணங்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

உயிரை குடிக்கும் உணவுக்கலப்படம். மஞ்சள் கூட விசமாகும். பகீர் ரிப்போர்ட்.

அண்ணாச்சி ஒரு ரூபாய்க்கு மிளகு சீரகம் கொடுங்க! உள்ளங்கை வியர்வையுடன் அந்த ஒரு ரூபாய் நாணயத்தைக் கடைக்காரரிடம் நீட்டினாள் சிறுமி.கூலி வேலை பார்க்கும் வீட்டுப் பெண்ணாக இருக்க வேண்டும். வறுமை, சோகம், சோர்வு என அனைத்தையும் தோற்றத்தில் அப்பிக் கொண்டு நின்ற அந்தச் சிறுமியை அண்ணாச்சியோ திரும்பிக்கூடப் பார்க்கவில்லை!‘‘லூஸ்ல இல்லம்மா!’’ என்று கட்டையாய் சொல்லிவிட்டு, ‘‘கிலோ மிளகு இருநூறு ரூபாய் விக்குது! இதுல ஒரு ரூபாய்க்கு எண்ணியா குடுக்க முடியும்!’’ என்று தன் இயலாமையை சம்பந்தமே இல்லாமல் நம்மிடம் வெளிப்படுத்தியவர், ‘‘இத மாதிரி ஏழ பாளைங்களெல்லாம் எதையாவது கலப்படத்தத் தின்னுகிட்டு காய்ச்சல், வாந்தி பேதின்னு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டியதுதான்!’’ என்று தன் ஆதங்கத்தையும் நம்மிடம் கொட்டினார்...‘‘இது உண்மைதான்... இன்று ஃபுட் பாய்ஸனால் உடனடி வியாதிகள் மட்டுமின்றி நீண்டகால நோய்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தக் கொடுமையின் உச்சம் மங்களகரமான மஞ்சளில்தான் ஆரம்பமாகிறது என்பது நமது சென்டிமெண்ட்டை மட்டுமல்ல இந்த சமூகத்தின் மீதான நம்பிக்கையையே தகர்க்கிற விஷயம்...நல்லது கெட்டது எதுவென்றாலும் மளிகை லிஸ்ட் எழுதும் பொழுது மஞ்சளில்தான் ஆரம்பிப்போம். கலப்படமும் அதுபோல் மஞ்சளில்தான் ஆரம்பிக்கிறது... மஞ்சள் பொடியுடன் கலப்படம் செய்ய லெட் க்ரோமேட் என்கிற கெமிக்கலைப் பயன்படுத்துகிறார்கள்... இது என்றாவது ஒரு நாள் கிட்னியை செயலிழக்கச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை...
எந்த மஞ்சள் பொடியில் இது கலந்துள்ளது என்பதெல்லாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒன்று... முழு மஞ்சளைவிட, மஞ்சள் பொடிதான் சமையலுக்கு எளிது என்று நாமும் எளிதாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறோம்.’’ _ கலப்படத்தின் அபாயத்திற்கான அலாரத்தை அடித்தார் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஃபேகல்டி, ஃபுட் கன்சல்டண்ட் எஸ்.சந்தர்...மரணத்தின் பிள்ளையார்சுழி மஞ்சள்தூளிலேயே ஆரம்பிக்கிறதென்றால் மற்ற பொருட்களின் நிலை எப்படி? மாநிலம் முழுக்க நம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தபோது அடுத்தடுத்து பல பகீர் தகவல்கள்... ‘‘பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தயாரிப்பில் கடைசியாகக் கிடைக்கக் கூடிய தாது எண்ணெய்தான் மினரல் ஆயில். இந்த மினரல் ஆயிலுக்கு நிறமும் கிடையாது. மணமும் கிடையாது. இதை அனைத்து வகையான எண்ணெயிலும் கலக்கலாம்.
ஒரு மாற்றத்தையும் காட்டாது. ஆனால் சாப்பிட்டபின் முழுவதும் ஜீரணம் ஆகாமல் அப்படியே நம் குடல்களில் தங்கி குறிப்பிட்ட காலத்திற்குப்பின் புற்றுநோயை உண்டாக்கிவிடும்... இதற்கு முக்கியக் காரணம், அந்த எண்ணெயின் அதிகப்படியான அடர்த்தி.... காசுக்காக கலப்படம் செய்பவர்கள் அதன் இரசாயன குணம் தெரியாது கலந்துவிடுகிறார்கள்.ஆனால், ஐந்து ரூபாய்க்கும் பத்துரூபாய்க்கும் எண்ணெய் வாங்கும் ஏழைகள் இந்த அபாயத்தை அறியாமல் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்!’’ என்கிறார் நெல்லை மாநகராட்சியின் சுகாதார உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம்.கொஞ்சம் மிளகுத் தண்ணீரில் நிறைய பப்பாளி விதைகளை ஊறவைத்து, பின் அதை நன்றாகக் காயவைத்து மிளகுடன் கலந்து மிளகு ரசத்தை பப்பாளி விதை ரசமாக மாற்றிவிடுகிறார்கள்.இலவம் பிஞ்சு, மஞ்சநத்தி இலையைக் காயவைத்து வறுத்து அரைத்து டீத்தூளுடன் கலக்கிறார்கள். ஏதோ உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, உணவு என்ற பெயரில் ஏழைகள் உதட்டில் வைக்கும் ஒவ்வொன்றையும் இப்படி விஷமாக மாற்றிவிடுகின்றனர் கலப்படக்காரர்கள்.
கொஞ்சம் மனசாட்சியுள்ளவர்கள் மிளகுத் தூளுடன் பொட்டுக்கடலைத் தூளைக் கலப்பது; சர்க்கரையையும் வெள்ளை ரவையையும் கலப்பது; கடலைப் பருப்புடன் வடைபருப்பைக் கலப்பது என எடையை மட்டும் கூட்ட, விலை கூடுதலான பொருட்களுடன் விலை குறைந்த ஆபத்தில்லாத பொருட்களை கலக்கின்றனர்.துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் இரண்டு அயிட்டம் உண்டு. ஒன்றுக்குப் பெயர் ‘சில்கி’, இன்னொன்று ‘செகண்ட்ஸ்’. இந்த ‘சில்கி’ தான் ஒரிஜினல். எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் கெடாது.ஆனால் இந்த செகண்ட்ஸ் பதப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருக்கும் குடோன்களில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் பத்துப் பதினைந்து நாட்களில் பூச்சியரித்து, புழுபூத்து, பவுடராகக் கொட்டும்.
கல்யாணவீட்டுச் சமையல், ஓட்டல் என உடனடி பயன்பாட்டுக்கு இந்த ‘செகண்ட்ஸை’தான் விலை குறைவு என்பதால் சரக்கு மாஸ்டர்கள், சமையல்காரர்கள் வாங்குவதுண்டு... காசு கொடுத்து ஓட்டலுக்குச் சென்றாலும், அழைப்புக்காக கல்யாண விருந்துக்குச் சென்றாலும் கலப்பட ஆபத்து இப்படியரு ரூபத்தில் அங்கே காத்துக் கொண்டிருக்கும்!சரி, இந்தக் கலப்படங்களையெல்லாம் கட்டுப்படுத்த சரியான சட்டமில்லையா?‘‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006_ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தச் சட்டமெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் கிடக்கிறது!

வெளிநாடுகளில் அப்படியல்ல. லண்டனில் உள்ள ‘நுகர்வோர் அகிலம்’ என்கிற அமைப்பு உலகெங்கும் மக்கள் சாப்பிடக் கூடிய மோசமான ஐந்து உணவு வகைகளைக் கண்டுபிடித்து ‘மோசமான உணவுக்கான விருது!’ என்ற ஒன்றையே வழங்கி மக்களை எச்சரிக்கிறது... அந்த வகையில் அண்மையில் அப்படி ஒரு விருது பெற்ற உணவு இந்தியாவில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது... அதிலும் குறிப்பாக, ‘பாலில் அப்படியே ஊறவைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்’ என சிபாரிசு வேறு! கலப்படத்தால் ஏழைகள் மட்டும்தான் சாக வேண்டுமா? வசதிபடைத்தவர்களும் கொஞ்சம் பாதிக்கட்டும் என்ற தார்மீக நியாயமோ என்னவோ?’’ என்று அரசின் மெத்தனப் போக்கை மெலிதாகச் சாடுகிறார், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மார்ட்டின்.பொதுவாகவே இந்தக் கலப்படக் குற்றங்கள் அதிகம் நடைபெறுவது சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில்தானாம். சென்னை மாநகராட்சி இது தொடர்பாக என்ன செய்து கொண்டிருக்கிறது?‘‘சென்னையைப் பொறுத்தவரை பத்து மண்டலங்களிலும் கண்காணிப்பும் ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வட சென்னை பகுதிகளில்தான் கலப்படம் அதிகம் என்றாலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தரமான பொருட்களைப் பார்த்து வாங்குவது, எல்லா இடத்திலும் பாதுகாப்பானது. உணவுப் பொருட்களின் தயாரிப்புத் தேதிகளைப் பார்த்து வாங்குவது போன்ற விழிப்புணர்வுப் பிரசாரங்களை தொடர்ந்து செய்து வருகிறோம். தவிர, கலப்படக்காரர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் செய்கிறோம்.அண்மைக்காலமாக கலப்படக் குற்றங்கள் குறைந்துவருவதுதான் உண்மை.2005_ல் நாங்கள் சோதனை யிட்ட 1169 இடங்களில் குற்றம் செய்தவர்கள் 34 பேர். 2007ல் 1083 இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் 27 பேர்மீதுதான் தவறு இருந்தது...’’ என்று சென்னை மாநகராட்சியின் கூடுதல் நல அதிகாரியான டாக்டர் தங்கராஜன் புள்ளி விவரங்களைத் தருகிறார். குற்றங்கள் குறைவாகத் தெரிவதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத பல புதுப்புது யுக்திகளைக் கலப்படக்காரர்கள் கையாள்வதும் காரணம் எனலாம்.எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ஏறிவிட்ட விலைவாசியினால் எந்தப் பொருளிலும் பத்து முதல் இருபது சதவிகிதம் கலப்படம் செய்தாலே பல லட்சங்கள் பார்த்துவிடக்கூடிய வாய்ப்பு, கலப்படத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது’ என்பது பொதுமக்களின் அபிப்பிராயம். இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் அரசு மெத்தனம் காட்டினால் ஏழைகளின் ரசமும் விஷமாகும் என்பது தவிர்க்க முடியாதது!NANDRI TO : KUMUDAM.-----------------------------------------------