4 டாக்டர்களுக்கு பி. சி. ராய் விருது
நமது சிறப்பு நிருபர்
சென்னை, மே 4: சென்னையைச் சேர்ந்த இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் உள்பட நான்கு டாக்டர்களுக்கு மருத்துவ உயரிய விருதான டாக்டர் பி.சி.ராய் விருது கிடைத்துள்ளது.
இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக மனநல மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஆர். பொன்னுதுரை, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவர் டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப் ஆகியோர் டாக்டர் பி. சி. ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) இவர்களைத் தேர்வு செய்து ள்ளது.
டாக்டர் மீர் முஸ்தபா உசேன்டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப்
டாக்டர் என். ரங்கபாஷ்யம் டாக்டர் ஆர். பொன்னுதுரை டாக்டர் ஆர். பொன்னுதுரை
டாக்டர் ஆர். ரங்கபாஷ்யம்:
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். பத்ம விபூஷண் விருது பெற்றவர். ஏராளமான இரைப்பை - குடல் மருத்துவ - அறுவைச் சிகிச்சை நிபுணர்களை உருவாக்கிய பேராசிரியர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
டாக்டர் மீர் முஸ்தபா உசேன்: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக உள்ளார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பராமரிப்புத் துறையின் துறைத் தலைவராக ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். "சிறந்த மருத்துவ ஆசிரியர்' என்ற பிரிவில் இவரது பெயர், பி. சி. ராய் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் ஆர். பொன்னுதுரை: சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஆர். பொன்னுதுரைக்கு, துறை சார்ந்த மருத்துவ முதுநிலை படிப்புப் பிரிவுகளை ஏற்படுத்தியதற்காக பி. சி. ராய் விருது வழங்கப்படுகிறது. மன நல மருத்துவத் துறையில் 35 ஆண்டுக்கால அனுபவம் பெற்றவர். சென்னை அயனாவரத்தில் உள்ள மனநல மருத்துவமனையின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மன நல மருத்துவத் துறையின் தலைவராகப் பணியாற்றியபோது, எம்.டி. மனநலப் படிப்பை உருவாக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப்: திருச்சியைச் சேர்ந்த பொது மருத்துவ நிபுணரான இவர், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவராக உள்ளார். மருத்துவ சமூக சேவைக்காக அவருக்கு பி.சி. ராய் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தென் மாநிலப் பிரிவின் தலைவராக இருந்தபோது, கிராம மருத்துவ சேவைத் திட்டத்தை வெற்றிகரமாக இவர் செயல்படுத்தினார்.
Sunday, May 4, 2008
Wednesday, April 30, 2008
புனித ஹஜ் பயணம் 2008 : விண்ணப்பம் வழங்கல்
தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2008 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ்-2008 ஆம் ஆண்டிற்கான ஹஜ் விண்ணப்பங்கள்மற்றும் அச்சடிக்கப்பட்ட வழிமுறைகளை, சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ளதமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து விண்ணப்பம் ஒன்றுக்கு சேவைக்கட்டணம் ரூ.100/- வீதம் சென்னையில் மாற்றக்கூடிய வகையில் 'தமிழ்நாடு மாநில ஹஜ் குழு'பெயரில் கேட்பு வரைவோலை/பணக்கொடுப்பாணை கொடுத்து 1-5-2008 முதல் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் கோரும் கோரிக்கைகளை,
விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ற்கான வரைவோலையுடன் (டிமாண்ட் டிராப்ட்) சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வழிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ஆறு விண்ணப்பங்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் நபரொன்றுக்கு, அந்நியச் செலாவணி முன்பணம் மற்றும் பலவகைக் கட்டணங்களுக்காகரூ.10,700/-(ரூபாய் பத்தாயிரத்து எழுநூறு மட்டும்)-ஐ பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.30361856116-ல் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும். பூர்த்தி செடீநுயப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய கடைசி நாள் 31-5-2008 ஆகும்.
3. புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள், கோரிக்கை மனுவுடன் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ஐ வரைவோலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தி, நேரடியாகவோ அல்லதுதபால் மூலமாகவோ விரைந்து அனுப்பி விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும்,அவற்றை கடைசி தேதிக்கு முன்னர் சமர்ப்பித்து விண்ணப்பங்கள் உறுதி செலுத்துவதில் ஏற்படும்சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
http://www.tn.gov.in/pressrelease/pr300408/pr300408_322.pdf
ஹஜ்-2008 ஆம் ஆண்டிற்கான ஹஜ் விண்ணப்பங்கள்மற்றும் அச்சடிக்கப்பட்ட வழிமுறைகளை, சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ளதமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து விண்ணப்பம் ஒன்றுக்கு சேவைக்கட்டணம் ரூ.100/- வீதம் சென்னையில் மாற்றக்கூடிய வகையில் 'தமிழ்நாடு மாநில ஹஜ் குழு'பெயரில் கேட்பு வரைவோலை/பணக்கொடுப்பாணை கொடுத்து 1-5-2008 முதல் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் கோரும் கோரிக்கைகளை,
விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ற்கான வரைவோலையுடன் (டிமாண்ட் டிராப்ட்) சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வழிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ஆறு விண்ணப்பங்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் நபரொன்றுக்கு, அந்நியச் செலாவணி முன்பணம் மற்றும் பலவகைக் கட்டணங்களுக்காகரூ.10,700/-(ரூபாய் பத்தாயிரத்து எழுநூறு மட்டும்)-ஐ பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.30361856116-ல் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும். பூர்த்தி செடீநுயப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய கடைசி நாள் 31-5-2008 ஆகும்.
3. புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள், கோரிக்கை மனுவுடன் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ஐ வரைவோலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தி, நேரடியாகவோ அல்லதுதபால் மூலமாகவோ விரைந்து அனுப்பி விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும்,அவற்றை கடைசி தேதிக்கு முன்னர் சமர்ப்பித்து விண்ணப்பங்கள் உறுதி செலுத்துவதில் ஏற்படும்சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
http://www.tn.gov.in/pressrelease/pr300408/pr300408_322.pdf
Tuesday, April 29, 2008
நபிமொழி
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
நபிமொழி
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நீங்கள் இறை விசுவாசம் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் வரை, நீங்கள் இறை விசுவாசிகளாக ஆக முடியாது. நீங்கள் எதைச் செய்தால் அன்பு செலுத்திக் கொள்வீர்களோ, அதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதை பரப்புங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 848)
அபூயூசுஃப் என்ற அப்துல்லா இப்னு ஸலாம்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'மனிதர்களே! ஸலாம் கூறுவதை பரப்புங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். 'ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுஙகள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 849)
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''வாகனத்தில் செல்பவர், நடந்து செல்பவருக்கும், நடப்பவர், உட்கார்ந்திருப்பவருக்கும், சிறு கூட்டம், பெரும் கூட்டத்தினருக்கும் ஸலாம் கூற வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 857)
அபூஉமாமா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''இறைத்தூதர் அவர்களே! இரண்டு மனிதர்கள் சந்தித்தால் அவ்விருவரில் எவர் ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பது? என்று கேட்கப்பட்டது. ''அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக நல்ல தகுதியானவரே (ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பார்)'' என நபி(ஸல்) பதில் கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 858)
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''மகனே! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும் அபிவிருத்தியாக இருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 861)
''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
நபிமொழி
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நீங்கள் இறை விசுவாசம் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் வரை, நீங்கள் இறை விசுவாசிகளாக ஆக முடியாது. நீங்கள் எதைச் செய்தால் அன்பு செலுத்திக் கொள்வீர்களோ, அதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதை பரப்புங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 848)
அபூயூசுஃப் என்ற அப்துல்லா இப்னு ஸலாம்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'மனிதர்களே! ஸலாம் கூறுவதை பரப்புங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். 'ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுஙகள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 849)
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''வாகனத்தில் செல்பவர், நடந்து செல்பவருக்கும், நடப்பவர், உட்கார்ந்திருப்பவருக்கும், சிறு கூட்டம், பெரும் கூட்டத்தினருக்கும் ஸலாம் கூற வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 857)
அபூஉமாமா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''இறைத்தூதர் அவர்களே! இரண்டு மனிதர்கள் சந்தித்தால் அவ்விருவரில் எவர் ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பது? என்று கேட்கப்பட்டது. ''அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக நல்ல தகுதியானவரே (ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பார்)'' என நபி(ஸல்) பதில் கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 858)
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''மகனே! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும் அபிவிருத்தியாக இருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 861)
''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''
Monday, April 28, 2008
கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்கள் மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது!.



27.04.2008 ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கடலூர் மாவட்டம் புவனகிரியில் ராகவேந்தரா திருமண மண்டபம் மற்றும் அதன் சுற்று வளாகத்தில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்கள் மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது. மாநாட்டிற்கு ஐ.டி.ஜே கடலூர் மாவட்ட தலைவர் ஏ.கலிமுல்லாஹ் தலைமை வகித்தார்,ஐ.டி.ஜே கடலூர் மாவட்ட பேச்சாளர் மவ்லவி.ராஜ்முஹம்மது மன்பஈ மாநாட்டு அறிமுக உரையாற்றினார். கள்ளகுறிச்சி அல்ஹசனாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியை மும்தாஜ் ஆலிமா இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். இஸ்லாமிய பெண்கள் கல்வியில் பின்தங்குவது ஏன்? ஏன்ற தலைப்பில் மவ்லவி.எம்.என்.அப்துல்காதிர் நூரி அவர்கள் உரையாற்றினார். ஆலிமா ரம்ஜான் அவர்கள் சினிமா சீரியலால் ஏற்படும் பாதிப்பு என்ற பொருளில் உரையாற்றினார். வேண்டாமே வரதட்சனை என்ற தலைப்பில் ஆலிமா சுமையா உரையாற்றினார். தற்போது உலகலாவிய அளவில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைக்கு தீர்வு என்ன? என்ற பொருளில் மவ்லவி சதகதுல்லாஹ் உம்ரி அவர்கள் உரையாற்றினார்.புவனகிரி கப்ருஸ்தான் பிரச்சினை சம்மந்தமாக ஒற்றை தீர்மாணத்தை மாவட்ட வணிகரணி செயலாளர் தமீமுல் அன்சாரி அவர்கள் வாசித்தார்.இறுதியாக மவ்லவி முப்தி உமர் சரீப் காஸிமி அவர்கள் பெண்களுக்கு இஸ்லாம் தறும் சுதந்திரம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் முஹம்மது ரபி நன்றியுரை கூற மாநாடு இனிதே முடிவுற்றது.மாநாட்டில் ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட பெண்களும் நாநூறுக்கு மேற்;பட்ட ஆண்களும் கலந்துக்கொண்டனர். அனைவருக்கும் காலையில் குளிர்பானம், மதிய உணவு, மாலையில் தேனீர் வழங்கப்பட்டது. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
Thursday, April 24, 2008
தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள்
بسم الله الرحمن الرحيم
புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரித்தானது. அல்லாஹ்வின் அருளும்இ சாந்தியும்இ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும்இ அவர்களின் குடும்பத்தினர்கள்இ தோழர்கள்இ தோழியர்கள்இ அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!முதலாவது அம்சம்:-
இறையச்சத்தை ஏற்படுத்திஇ அதனை வலுப்படுத்தக் கூடியவைகள்.
1-தொழுகைக்காக தயாராகுதலும்இ அதற்கான ஆயத்தங்கள் செய்வதும்.
இது பல அம்சங்களைக் கொண்டதாகும். அவைகளில்:- முஅத்தின் கூறும் பாங்கைப் போன்று பதில் பாங்கு கூறுதல்இ அதானுக்கும்இ இகாமத்திற்கு இடையில் பிரார்த்தித்தல்இ பிஸ்மில்லாஹ் கூறி உழூவை ஆரம்பம் செய்தல்இ அதன் பின்னர் திக்ர்இ பிரார்த்தனைகள் செய்தல்இ மிஸ்வாக் செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுதல்இ தூய்மையான அழகிய ஆடைகள் அணிந்துஇ அடக்கத் தோடும்இ பணிவோடும் பள்ளிக்குச் சென்று தொழுகையை எதிர் பார்த்திருத்தல்இ தொழுகையின் (ஸஃப்-ஐ) வரிசையை சரி செய்வதுடன் அதில் நெருக்கமாக நிற்றல் போன்ற காரியங்கள் உள்ளடங்கி இருக்கும்.
2-தொழுகையில் அமைதி பேணுதல்.
நபி (ஸல்) அவர்கள் தனது எலும்புகளின் இடுக்குகள் அதனதன் இடத்தில் மீண்டு நிலை பெறுகின்ற வரை தொழுகையில் அமைதி பேணுபவர்களாக இருந்தார்கள்.
3-தொழுகையில் மரணத்தை நினைவு கூறுதல்.
(உனது தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவீராக! ஏனெனில் ஒரு மனிதன் தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவதால் அவனது தொழுகையை அழகாக தொழுவதற்கு வாய்ப்புக்கிட்டும். மேலும் இதன் பின்னரும் தொழுகை கிடைத்திடாது என எண்ணித் தொழும் மனிதனின் தொழுகை போன்று தொழுவாயாக! என ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
4-ஓதப்படும் திருமறை வசனங்களையும்இ திக்ருகளையும் சிந்தனைக்கு எடுத்துஇ அவைகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்துதல்.
இதில் உள்ளம் கனிந்துஇ தாக்கம் ஏற்பட்டுஇ கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட வேண்டுமானால் ஓதப்படும் வசனங்கள்இ திக்ருகள் ஆகியவற்றின் கருத்துக்களின் ஆழத்தை அறிந்த ஒருவருக்கே இது சாத்தியமாகும். இது பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற போது: (இன்னும் அவர்களுடைய இரட்சகனின் வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் குருடர்களையும்இ செவிடர்களையும் போல் அதில் விழமாட்டார்கள். சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்-26:73) எனக் குறிப்பிடுகின்றது.
'தஸ்பீஹ் உடைய வசனங்கள் இடம் பெறுகின்ற போது தஸ்பீஹ் செய்வது கொண்டும்இ (இஸ்திஆதா) பாதுகாப்பு வசனங்கள் வருகின்ற போது பாதுகாவல் தேடுவது கொண்டும் செயல்படுவதுடன்இ வசனங்களுடன் மனம் விரிந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது சிந்திப்பதற்கு துணையாக அமையும். மேலும் ஃபாதிஹா அத்தியாயம் ஒதப்பட்டதும் அதற்குப் பதிலளித்து ஆமீன் கூறுவதால் மகத்தான கூலியும் கிடைக்கின்றது. (இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள் ஏனெனில் மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர். எவர் ஆமீன் கூறுவது மலக்குகளின் ஆமீனுடன் நேர்படுகின்றதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). அதே போன்று இமாம் 'ஸமி அல்லா ஹு லிமன் ஹமிதா' எனக் கூறினால் அதற்குப் பதிலளித்து ' றப்பனா லகல் ஹம்து' எனக் கூறுவது மகத்தான கூலியைப் பெற்றுத்தரும்.
5-ஓதலை தனித்தனி வசனமாக ஓதுதல்.
இது வசனத்தை விளங்கவதற்கும்இ சிந்திப்பதற்கும் பிரதான காரணியாகவும்இ நபியின் சுன்னத்தாகவும் விழங்குகின்றது. நபி (ஸல்) அவர்களின் ஓதல் அமைப்பு ஒவ்வொரு எழுத்தையும் தெளிவாக்கிக் காட்டக்கூடியதாக இருந்தது.
6-அல் குர்ஆனை அதன் முறையைப் பேணியும்இ அழகிய ஓசை நயத்துடனும் ஓதுதல். அல்லாஹ் அல்குர்ஆனில்: 'மேலும் குர்ஆனை (தெளிவாக வும்)இ அதன் முறையைப் பேணியும் ஓதவீராக எனக் குறிப்பிடுகின்றான். 'உங்களது ஓசை நயத்தைக் கொண்டு அல் குர்ஆனை அலங்கரியுங்கள். ஏனெனில் அழகிய ஓசை நயம் குர்ஆனுக்கு இன்னும் அழகை அதிகரிக்கின்றது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹாகிம்).
7-அல்லாஹ் தொழுகையில் பதில் தருகின்றான் என்பதை அறிந்து தொழுதல். அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகை என்ற ''ஃபாத்திஹா' அத்தியாயத்தை எனக்கும் எனது அடியானுக்கும் இடையில் இரு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளேன்இ எனது அடியான் வேண்டுவதெல்லாம் அவனுக்கு (என்னால்) வழங்கப்படும்இ அடியான் 'அல்ஹம்து லில்லாஹ் றப்பில் ஆலமீன்' எனக் கூறினால் அல்லாஹ் எனது அடியான் என்னை புகழ்ந்துள்ளான் எனக் கூறுகின்றான்இ (அடியான்) 'அர்ரஹ் மானிர் ரஹீம்' எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் 'எனது அடியான் என்னை துதித்துள்ளான்' எனக் கூறுகின்றான்இ (அடியான்) 'மாலிகி யவ்மித்தீன்' எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் 'எனது அடியான் என்னை மேன்மைப்படுத்தி விட்டான்' என பெருமிதம் கொள்கின்றான்இ 'அடியான் இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்' எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் 'இது எனக்கும் எனது அடியானுக்கும் இடையிலுள்ளதா (சமாச்சாரமா)கும்இ எனது அடியான் வேண்டுவதை எல்லாம் அவனுக்கு உண்டு. (நான்வழங்குவேன்) (அடியான்) ' இஹ்தி நஸ்ஸிராதல் முஸ்தகீம் ஸிரா தல்லதீன் அன்அம்த அலைஹிம் கைரில் மஃக்லூபி அலைஹிம் வலல்லால்லீன்'; எனக் கூறினால் இது எனது அடியானுடன் தொடர்புடயதாகும்இ எனது வேண்டுவதை அவனுக்குண்டு) வழங்குவேன். என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறிக் காட்டினார்கள்.
8-தொழுகையில் (சுத்ரா)தடுப்பை வைத்துஇ அதன் பக்கமாக நெருங்கித் தொழுதல். இவ்வாறு தொழுவதால் உள்ளச்சத்துடனும்இ பார்வையை சிதறிவிடாமலும்இ அதனைக் கடக்க எத்தணிப் போரை தடுத்தும்இ நிம்மதியாக தொழுவதற்குத் துணையாகவும் அமைவதுடன்இ தொழுகையை ஊடறுத்துச் சென்று அதனை பாழடித்திடும் ஷைத்தான்களின் நடவடிக்கைகளிகலிருந்தும் தற்காத்துக் கொள்ள உதவும். (உங்களில் தொழும் ஒருவர் ஷைத்தான் அவரது தொழுகையை முறித்திடாதவாறு (சுத்ரா) தடுப்பிற்கு நெக்கமாக நின்று தொழுது கொள்ளட்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூதாவுத்).
9-வலது கையை இடது கையின் மீது ஆக்கி நெஞ்சின் மீது வைத்து தக்பீர் கட்டுதல்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தயாரானால் அவர்களது வலது கையை இடது கையின் மீதாக்கிஇ நெஞ்சின் மீது வைப்பார்கள. இந்த அமைப்பு பணிந்து யாசிப்பவன் நிலை போன்றதாகும். மேலும் அது வீண் சேட்டைகளிலிருந்து தடுப்பதுடன்இ இறை அச்சத் திற்கு மிகவும் நெருக்கமாகவும் அமைகின்றது.
10-பார்வையை சுஜூத் செய்யும் இடத்தின் பக்கமாக நோக்குதல்.
நபி (ஸல்) அவர்கள் தொழுவார்களாயின் தனது தலையை தாழ்த்தி தனது பார்வையை பூமியின் பக்கமாக செலுத்துபவர்களாக இருந்தார் கள். 'தஷஹ்ஹுத்' ஓதுவதற்காக அமர்ந்தால் தனது பார்வையை ஆட்காட்டி விரலின் பக்கம் நோக்கியவர்களாக ஆக்கிஇ அதனை (விரலை) அசைப்பவர்களாக இருந்தார்கள். என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
11-ஆட்காட்டி விரலை அசைத்தல்.
இது இரும்பால் அடிப்பதை விட ஷைத்தானுக்கு மிகவும் கடிமான ஒரு கடிமானதாகும் என(முஸ்னத் அஹ்மத்) எனும் கிரந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அடியான் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதும்இ வணக்கத்தில் மனத்தூய்மையும் பொதிந்துள்ளது. இது ஷைத்தான் மிகவும் வெறுக்கின்ற ஒரு காரியமாகும்.
12- தொழுகையில் அத்தியாயங்கள்இ வசனங்கள்இ திக்ர்(இறை நினைவு)கள்இ பிரார்த்தனைகள் ஆகியவற்றை பலதரப்படுத்தி ஓதுதல்.
இந்நிலை தொழுகையாளிக்கு புதிய பல கருத்துக்கள்இ திக்ருகள் ஆகியவற்றை உணர்த்தும். இந்த நடைமுறை சுன்னாவாகவும்இ உள்ளச்சத்தில் பூரண நிலையை தேடித்தரக் கூடியதாகவும் இருக்கின்றது.
13-சுஜூதின் வசனங்கள் குறிக்கிடும் போது சுஜுத் செய்தல்.
இன்னும் அழுதவர்களாக முகம் குப்புற விழுவார்கள் இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும். என 18:109 வனத்திலும்இ அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்கள் மீது ஓதிக் காட்டப்பட்டால் அவர்கள் அழுதவர்களாகவும்இ சுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள். என்று 19:58 வசனத்திலும் அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான். 'ஆதமின் மகன் சுஜ்தா வசனத்தை ஓதி சுஜுதும் செய்தால் ஷைத்தான் ஒரு ஓரமாக ஒதுங்கிஇ அழுது கொண்டுஇ எனக் கேற்பட்ட கேடே! சுஜூது செய்யுமாறு பணிக்கப் பட்ட ஆதமின் மகன் அதனை நிறை வேற்றினான். ஆகவே அவனுக்கு சுவனம் உண்டு. நானும்; சுஜுது செய்யும்படி ஏவப்பட்டிருந்தேன். ஆனால் (அதனை நிறை வேற்றாது) மறுத்தேன். ஆகையால் எனக்கு நரகம் உண்டு எனக் கூறிஇ கூறி கதறுவான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
14-அல்லாஹ்விடம் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாவல் கோரல்.
ஷைத்தான் எமது விரோதியாவான். தொழுகையாளி ஒருவரின் உள்ளச்சம் போகும் வரை அவனது தொழுகையை குழப்பிஇ அவனில் ஊசலாட்டங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது அவனது விரோத செயற்பாடுகளில் உள்ளதாகும். இதனால்தான் அடியான் அல்லாஹ்விடம் நெருங்கிச் செல்லும் போதெல்லாம் அவனை வழிப்பறிக் கொள்ளைக்காரன் போன்று தடுத்து நிறுத்துகின்றான். இறை விசுவாசி இவைகளுக்கு முன்னால் உறுதியாக இருப்பதும்இ சகிப்புடனும் இருந்து அதிலிருந்து விடுதலை பெறத் தேவையான திக்ருகள்இ தொழுகைகள் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடித்து (அரண் அமைப்பதால்) அவன் அதிலிருந்து விலகிவிடுகின்றான். ஏனெனில் 'ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாகும் என அல்லாஹ் அல்குர்ஆனில் 3:76-ல் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.
15-முன்னோர்களின் தொழுகையிலுள்ள உயிரோட்டத்தை சிந்தித்தல்.
அலி (ரலி) அவர்கள் தொழுகை நேரம் வந்து விட்டால் நடுக்கம் பிடித்துஇ அவர்களின் முகம் சிவந்து விடும். அது பற்றி அவர்களிடம் வினவப்பட்ட போது 'அல்லாஹ்வின் மீதாணையாக! வானங்கள்இ பூமிஇ மலைகள் ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்ட இந்தப் பொறுப்பை அவைகள் ஏற்காதுஇ ஒதுங்கிக் கொண்டன. ஆனால் நான் அதனை சுமந்து கொண்ட நேரம் வந்து விட்டது. எனக் கூறுவார்கள். எனவும்இ அறிவிக்கப்படுகிறன்றது. ஸயீத் அத்தன்னூகி என்ற அறிஞர் தொழ ஆரம்பித்தால் அதை முடிக்கின்ற வரை அவரது கன்னங்களிலிருந்து கண்ணீர் கசிந்த வண்ணமாகவே இருக்கும் எனக் கூறுகின்றனர்.
16- தொழுகையில் இறையச்சத்துடன் இருப்பது பற்றிய சிறப்பம்சத்தை உணர்தல்.
கடமையான தொழுகை சமூகம் தரும் எந்த முஸ்லிமும் அதன் உழூவையும்இ அதன் ருகூவையும்இ அதன் உள்ளச்சத்தையும் அழகு படுத்திக் கொள்வாரானால் அவரது பெரும்பாவமில்லாத எந்தப்பாவத்திற்கும் அது பரிகாரமாக அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்).
17-தொழுகை பிரார்த்தனை செய்ய வேண்டிய இடங்களில் -குறிப்பாக- சுஜூதின் நிலையில் அதிகம் ஈடுபாடு காட்டுதல்.
உங்கள் இரட்சகனை பணிவாகவும்இ இரகசியமாகவும் பிரார்த்தியுங்கள். (7:55). அடியான் தனது இரட்சகனுக்கு சுஜூதின் நிலையில் மிகவும் நெருக்கமாக இருக்கின்றான். ஆகவே அதில் பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள். (முஸ்லிம்).
18-தொழுகைக்குப்பின் ஓத வேண்டிய அவ்ராதுகளை ஓதுதல்.
இது இதயத்தில் இறை அச்சத்தின் தாக்கத்தை உண்டு பண்ணுவதோடுஇ தொழுகையில் பெறப்படும் பரகத் (அபிவிருத்தி) களை இஸ்திரப்படுத்தியும் வைக்கின்றது.
இரண்டாவது அம்சம் :-
இறையச்சத்தை திசை திருப்பிஇ அதன் தூய்மையை கெடுக்கின்ற சகல விதமான தடைகளையும்இ அம்சங்களையும் தவிர்த்தல்.
19-தொழுமிடத்தில் தொழுகையாளியை பராக்காக்குகின்றவைகளை அகற்றுதல்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் -அன்னை- ஆயிஷா (ரலி) அவர்களிடம் பல வர்ணங்கள் தீட்டப்பட்ட ஆடை ஒன்றிருந்தது. அதனைக் கொண்டு அவர்கள் தனது வீட்டின் ஒரு பகுதியை திரையிட்டுக் கொள்பவர்களாக இருந்தார்கள். இதனை அவதானித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எம்மை விட்டும் இந்த வருணத்திரையை அகற்றி விடும்! அதன் உருவங்கள் எனது தொழுகையில் என் கவனத்தை திசை திருப்பிக் கொண்டே இருந்ததது' எனக் கூறினார்கள். (புகாரி).
20-தொழுபவரின் தொழுகையை பாராமுகமாக்கும் வர்ணங்கள்இ எழுத்துக்கள்இ அல்லது உருவங்கள் ஆகியவைகளை தாங்கிய ஆடையுடன் தொழாதிருத்தல்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் நாட்சதுர வரி இடப்பட்ட ஒரு ஆடை இருந்தது. அதன் வர்ணங்களில் (தொழு கையில்) ஒரு போது அவர்கள் பார்வை பட்டுவிட்டது. அவர்களின் தொழுகை முடிந்ததும் 'இதனை அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா என்பரிடம் கொடுத்துவிட்டுஇ அதற்குப் பதிலாக எந்தவிதமான வரிகளும்இ வர்ணங்களும் அற்ற ஒரு ஆடையை மாற்றி கொண்டு வாருங்கள். ஏனெனில் அது எனது தொழுகையில் எனது கவனத்தை திசை திருப்பி விட்டது. எனக் நபி (ஸல்) அவர்கள் அன்னையாரிடம் கூறினார்கள். (முஸ்லிம்).
21- மனம் விரும்பும் உணவுப் பதார்த்தங்கள் தயார் நிலையில் இருக்கும் போது தொழாதிருத்தல்.
இது தொழுகையில் உள்ளச்சத்திற்கு ஊறு விளைவிக்கும் காரணத்தால் 'உணவு தயார் நிலையில் இருக்கின்ற போது தொழுகை இல்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்).
22- மலஇ ஜலங்களை அடக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தொழாதிருத்தல்.
மல ஜலங்களை அடக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் தொழுகையில் ஈடுபடுவதால் அவரது தொழுகயில் ஏற்படும் அச்சத்தை அது குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள்: மல ஜலங்களை அடக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தொழுகை கிடையாது எனக் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்). இவ்வாறு அடக்கிக் கொள்வது சந்தேகமின்றி இறையச்சத்தைப் போக்கிவிடும். இந்த சட்டம் வாயுக்களை அடக்கிக் கொள்வதற்கும் பொருந்தும்.
23- சிறு தூக்கம் மேலாடும் நிலையில் தொழாதிருத்தல்.
தொழுகையில் உங்களில் ஒருவரை சிறு தூக்கம் மிகைத்தால் அவர் என்னதான் பேசுகின்றார் என்பதை உணர்வுபூர்மாக அறிகின்றவரை உறங்கட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிகார்கள்.(புகாரி)
24- பேசிக் கொண்டிருப்பவருக்கும்இ தூங்குபவருக்கும் பின்னால் இருந்து தொழாதிருத்தல்.
'தூங்கபவருக்கும்இ பேசிக் கொண்டிருப்பவருக்கும் பின்னால் தொழ வேண்டாம்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்) பேசிக் கொண்டிருப்பவன் தனது பேச்சினால் கவனம் செலுத்திஇ அதனால் தொழுகையாளியை அவனது தொழுகையிலிருந்து திசை திருருப்பவான். இன்னும் தொழுகையாளியின் கவனத்தை திசை திருப்புகின்ற ஏதாவது ஒன்று உறக்கத்திலிருப்பவனிடமிருந்து வெளியாகும் சாத்தியம் தென்படும் என்பதை கவனித்தில் கொண்டே இவ்வாறு தடை செய்திருக்க முடியும். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)
25- சிறு கற்களை அகற்றுவதில் கவனத்தை செலுத்தாதிருத்தல்.
(சுஜுதின் போது) கற்களை அகற்றிக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம்: 'நீ அப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் இருப்பின் ஒரு தடவை செய்யலாம்'. என நபிகள் நாயகம் (ஸல்) சுட்டிக்காட்டினார்கள். (புகாரி) தொழுகையில் பேணப்பட வேண்டிய இறையச்சத்தைப் பாதுகாத்தல்இ தொழுகையில் அதிகப்படியான சேட்டைகளை செய்யாதிருத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தடுத்திருக்க முடியும். ஒருவர் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற அவசியம் ஏற்படின் அவர் தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன்னர்இ சுஜூத் செய்யும் இடத்தை விட்டும் கற்களை அகற்றி விட்டுஇ தொழுகையில் ஈடுபடுவதே மிகவும் சிறிந்த வழி முறையாகும்.
26- ஓதலால் பிறரை குழப்பத்தில் ஆழ்த்தாதிருத்தல்.
கவனியுங்கள்! நீங்கள் ஒவ்வொரு வரும் அவரது இரட்சகனுடன்தான் உரையாடுகின்றனர். எனவே உங்களில் ஒருவரை மற்றவர் இம்சிக்காமலும்இ ஒருவர் மற்றவரை விட ஓதலில் (அல்லது தொழுகையில்) சப்தத்தை உயர்த்தாமலும் இருக்கட்டும். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).
27- தொழுகையில் திரும்பிப்பார்ப்பதை விட்டு விடுதல்.
ஒரு அடியான் தொழுகையில் திரும்பிப் பார்க்காத வரை அல்லாஹ் அவனின் பக்கம் முன்னோக்கியவனாக இருக்கின்றான்இ அவன் எப்பொழுது திரும்பிப்பார்க்கின்றானோ அப்போது அவனை விட்டும் அல்லாஹ் திரும்பிக் கொள்கின்றான். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் அல்கிபாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்: ஒரு மனிதன் தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி வினவப்பட்டபோது 'அது ஒரு அடியானின் தொழுகையில் இருந்து ஷைத்தான் இராஞ்சிச் செல்லும் ஒரு இராஞ்சலாகும்' எனப் பதிலளித்தார்கள். (புகாரி).
28- பார்வையை வானின் பக்கம் உயர்த்தாதிருத்தல்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி மிக வண்மையாக கண்டித்திருப்பதுடன்இ அந்தச் செயலை: 'உங்களில் ஒருவர் தொழுகையில் இருந்தால் அவரது பார்வையை உயர்த்த வேண்டாம்' (அஹ்மத்). என்றும் 'தொழுகையில் தமது பார்வைகளை உயர்த்தும் ஒரு கூட்டத்தினர் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்! இல்லையேல் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுவிடும்' என்றும் தனது சொல்லால் எச்சரித்தும் இருக்கின்றார்கள். (புகாரி).
29- தொழுகையாளி தொழுகையில் தனக்கு முன்னால் துப்பாதிருத்தல்.
ஏனெனில் அது தொழுகையில் பேணப்பட வேண்டிய உள்ளச்சத்தையும்இ அல்லாஹ்வுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு முறையையும் சிதைத்து விடுகின்றது. 'உங்களில் ஒருவர் தொழுகையில் இருந்து கொண்டிருந்தால் அவருக்கு முன்னால் துப்புவதைத் தவிர்த்துக்; கொள்ளவும். ஏனெனில் அவர் தொழுகின்ற போது அவருக்கு முன்னால் அல்லாஹ் இருக்கின்றான். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
30- கொட்டாவியை முடிந்த அளவு அடக்கிக் கொள்ளுதல்.
'உங்களில் ஒருவர் தொழுகையில் இருக்கின்ற போது கொட்டாவி வந்தால் அவர் அதனை முடியுமான அளவு அடக்கிக் கொள்ளவும். ஏனெனில் (அதனூடாக) ஷைத்தான் நுழைகின்றான்'. என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
31- தொழுகையில் இடுப்பில் கை கட்டுவதை தவிர்த்தல்.
'தொழுகையில் இடுப்பில் கையை குத்தி நிற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
32- தொழுகையில் ஆடையை பூமியில் அழுந்தும் படி அணிதல்.
தொழுகையில் ஒருவர் ஆடையை பூமியில் அழுந்தும் படியாக விட்டு விடுவதையும்இ தனது வாயை மூடிக்கொள்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.(அபூதாவுத்)
33- மிகங்களுக்கு ஒப்பாகுவதை விட்டொழித்தல். காகம் போல் கொத்துதல்இ மிருகங்கள் போன்று அகட்டிப் படுக்கைஇ ஒட்டகம் போன்று ஒரு தளம் அமைத்துக் கொள்ளுவதல் ஆகிய மூன்று காரியங்களையும் தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். குறிப்பு:- இது சஊதி அரேபியாவின் பிரபல அழைப்பாளர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய அஷ்ஷேக்: முஹம்மத் பின் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் அவர்களின் 'தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் 33 வழி காரணிகள்' எனும் விரிவான நூலிலிருந்து அல்வத்தன் வெளியீட்டகத்தார் சுருக்கித் தந்த மடக்கையின் மொழி பெயர்ப்பாகும். விரிவை வேண்டுவோர் ஆசிரியரின் மூல நூலைப் பார்வையிடவும்). வெளியீடு:-அல் வதன் வெளியீட்டகம்அரபு மூலம்: அஷ்ஷைக்: முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்.தமிழில்: எம்.ஜே.எம். ரிஸ்வான் நன்றி:-அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்தபால் பெட்டி இலக்கம்: 1580அல்ஜுபைல் 31951இ சவூதி அரேபியா.தொலைபேசி 362 5500
Wednesday, April 23, 2008
மக்கா நேரத்தை உலக மைய நேரமாக்கக் கோரிக்கை
புனித மக்காபுவியின் உண்மையான மையமாக முஸ்லிம்களின் புனித நகரான, சவுதி அரேபியாவின் மக்கா நகரம் திகழ்வதாகக் கூறுகின்ற, சில முஸ்லிம் விஞ்ஞானிகளும், மதகுருமாரும், கிரீன்விச்சை மையமாகக் கொண்ட உலக நேரத்துக்குப் பதிலாக, மக்கா நேரம் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
கட்டாரில் நடந்த மாநாடு ஒன்றில் வாதிட்ட புவியியல் நிபுணர் ஒருவர், ஏனைய அனைத்து தீர்க்க ரேகைகளைப் போலல்லாது, மக்கா வட காந்தப் புலத்துடன் பொருந்திவருகிறது என்று கூறினார்கள்.
பிரிட்டிஷ்காரர்கள் உலகின் காலனித்துவ சக்தியாகத் திகழ்ந்த போதே, கிரீன்விச்சை மையமாகக் கொண்ட ஜி எம் டி நேரம் அறிமுகப்படுத்தத்கப்பட்டது என்று கூறிய அவர், அத்துடன் மாற்றங்கள் நடப்பதற்கான காலம் இதுவென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்து முஸ்லிம்களும் தாம் தொழுகின்ற போது மக்கா இருக்கும் திசையை நோக்கியே தொழுவார்கள்.
கட்டாரில் நடந்த மாநாடு ஒன்றில் வாதிட்ட புவியியல் நிபுணர் ஒருவர், ஏனைய அனைத்து தீர்க்க ரேகைகளைப் போலல்லாது, மக்கா வட காந்தப் புலத்துடன் பொருந்திவருகிறது என்று கூறினார்கள்.
பிரிட்டிஷ்காரர்கள் உலகின் காலனித்துவ சக்தியாகத் திகழ்ந்த போதே, கிரீன்விச்சை மையமாகக் கொண்ட ஜி எம் டி நேரம் அறிமுகப்படுத்தத்கப்பட்டது என்று கூறிய அவர், அத்துடன் மாற்றங்கள் நடப்பதற்கான காலம் இதுவென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்து முஸ்லிம்களும் தாம் தொழுகின்ற போது மக்கா இருக்கும் திசையை நோக்கியே தொழுவார்கள்.
Thursday, April 17, 2008
ஹஜ்2008! 1,57,000 பேருக்கு அனுமதி! கூடுதலாய் 15,000 பேருக்கு வாய்ப்பு!! அமைச்சர் இ.அஹமத் அறிவிப்பு!
ஜெத்தா-ஏப்ரல்16, இவ்வாண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் சௌதி ஹஜ் அமைச்சர் டாக்டர்.ஃபுவாத் அல்ஃபார்சியுடன் கையெழுத்தான பின் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமத் அவர்கள் இன்று செய்தியாளரைச் சந்தித்து விளக்கினார்இவ்வாண்டு 1,57,000 யாத்திரிகர்கள் ஹஜ் செய்வதற்காக சௌதிஅரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், கூடுதலாக 15,000 யாத்திரிகர்களுக்காக அனுமதி கோரியிருப்பதாகவும் அதற்கு அநேகமாக ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்திருக்கும் 1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்திரிகர் வருவர் என்றும் மீதிஇடங்கள் தனியார் முகவர் மூலம் வருபவர்க்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மெக்காவின் புனிதப்பள்ளி விரிவாக்கப் பணியின் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்திரிகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்கள் இவ்வாண்டு மூன்று வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. புனிதப்பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் 'பச்சை' வகைப் பகுதி என்றும், 1 முதல் 6கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் 'வெள்ளை' வகைப் பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி 'அசிசியா' பகுதி என்றும் குறிப்பிடப்படும்.
இதில் பச்சைவகைப் பகுதிக்கு யாத்திரிகரிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளைவகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்கும். கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகள் முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது சௌதிக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும், சார்தூதர் டாக்டர்.அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)