Tuesday, July 22, 2008

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் ITJ சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சிஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் ITJ சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி ITJ நகர செயலாளர் P.M.அப்துல்ஹமீது தலைமையில் S.M.J. அப்பார்ட்மண்ட் வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைகழகம் பேராசிரியர் DR. S. அஜ்மல் கான் அவர்கள் கலந்துக்கொண்டு இலவச நோட்டு புத்தகம் வழங்கினார். மற்றும் ஆலீமா ஹமீதுன்னிசா அவர்கள் சமூக தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் A.கலீமுல்லாஹ், நகரத்தலைவர் I . ஹபீப் முஹம்மது மற்றும் கிளை நிர்வாகிகள், பொது அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர். இறுதியாக அப்துல் அலீம் நன்றியுறையாற்றினார்.

Friday, July 4, 2008

ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி?

ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி?

'போரா? இராக்கிலா? சேச்சே! அதெல்லாம் எப்போதோ முடிஞ்சுபோச்சு! இராக் மக்கள் முந்தாநாளே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டாங்களே!' என மைக் செட் வைத்து அலறிக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா. சி.என்.என்., பி.பி.சி., என்று எதைத் திருகினாலும் பாந்தமான பாக்தாத் நகரத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. குழந்தைகளும் பெண்களும் சமர்த்தாகச் சாலையில் நடந்து போய்க்கொண்டு இருக்க, அமெரிக்க வீரர்கள் அவர்களைப் பார்த்து அன்புடன் டாடா காட்டுகிறார்கள்.
நிஜம்தானா இதெல்லாம்? இராக் அமைதிப்பூங்காவாகி விட்டதா? அதுதான் இல்லை. லாலிபாப் சுவைக்கும் குழந்தைகூட இந்தப் பிம்பத்தை நம்பாது என்பது தான் நிஜம். இந்த விநாடி வரை இராக் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. தினம் தினம் கார்கள் வெடிக்கின்றன. சாலை ஓரங்களில், புதர்களுக்கு இடையில் இராக்கியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அல் கொய்தா ஆட்களைத் தேடுகிறோம் என்கிற சாக்கில், கண்ணில் பட்டவரைஎல்லாம் கைது செய்கிறார்கள் அமெரிக்க வீரர்கள். வெளியில் வர இயலாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள் இராக் கியப் பெண்கள்.சமீபத்தில், அமெரிக்க மக்களிடம் சர்வே ஒன்று எடுத்தார்கள். 'இராக் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' இதுதான் கேள்வி. இராக் மோசமான நிலைமையில் இருக் கிறது என்றார்கள் 62 சதவிகிதம் பேர். 61 சதவிகிதம் பேர், இனி பழைய இராக்கைப் பார்க்க முடியாது என்று சத்தியம் செய்தார்கள். ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்த பிறகு, கட்டக் கடைசியாக அமெரிக்க மக்களுக்கும் இராக் பற்றிய உண்மை தெரிய ஆரம்பித்திருக்கிறது.உதாரணம், சமீபத்தில் வெளியாகி அமெரிக்கா முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் புத்தகம். தலைப்பு - 'The Prosecution of George W. Bush for Murder'. எழுதியிருப்பவர் வின்சென்ட் புல்யோஸி. பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்தவர். வீட்டுக்குள் சிப்பிக் காளான் வளர்ப்பது எப்படி என்பது போல், ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி என்று இந்தப் புத்தகத்தில் படிப்படியாகக் கற்றுத் தந்திருக்கிறார் இவர்.'அமெரிக்காவுக்கு சதாம் ஹூசேனால் பாதிப்பு ஏற்படும் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து, இராக் மீது படைகளை ஏவினார் புஷ். ஆனால், அது பொய் என்பது நிரூபணமாகிவிட்டது. சதாம் பயங்கர தசாவதார ஆயுதங்கள் வைத்திருந்தார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இன்றைய தேதி வரை ஒரு துண்டு ஷேவிங் பிளேடைக்கூட அமெரிக்கா, இராக் மண்ணில் கண்டு பிடிக்கவில்லை. இப்படிப் பொய் யான காரணங்களைக் காட்டி ஒரு தேசத்தின் அதிபரை, ஒரு லட்சம் இராக்கியர்களை, 4,000 அமெரிக்க வீரர்களைக் கொன்றிருக்கிறார் புஷ். ஆகவே, புஷ் மீது வழக்குப் பதிவு செய்யலாம். அவரை வேலையில் இருந்து தூக்கலாம். அது எப்படி' என்பதை மேலதிக விவரங்களுடன் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.பாரக் ஒபாமாவையும் ஜான் மெக்கெய்னையும் பிரித்துக் காட்டும் ஒரே விஷயம் இராக்தான். 'இராக்கில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவேன்' என்று பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், ஒபாமாவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. 'இன்னும் நூறு ஆண்டுகள் தேவைப்பட்டாலும் படைகளை அங்கேயே வைத்திருப்பேன்; இறுதி வெற்றி கிடைக்கும் வரை ஓய மாட்டேன்' என்று கொக்கரித்த மெக்கெயினைக் கிட்டத்தட்ட நிராகரித்துவிட்டார்கள் அமெரிக்கர்கள். தற்சமயம் அவர் கள் எதிர்பார்ப்பது ஒரு மாற்றத்தை! சாதாரண மாற்றம் அல்ல; அதிரடி மந்திர மாற்றம். ஒபாமா வர வேண்டும். அமெரிக்க வீரர்களை இராக்கில் இருந்து திரும்பப் பெற வேண்டும். சர்வதேச அளவில் சரிந்து கிடக்கும் அமெரிக்காவின் மதிப்பை மீட்டெடுக்கவேண்டும்.ஆனால், ஒபாமா என்னும் மீட்பர் வந்தால்கூட இராக் பிரச்னை தீராது என்பதுதான் நிஜம். இராக் யுத்தத்தை ஒரே ஒரு ரிமோட் கன்ட்ரோல் விசையால் நிறுத்திவிட முடியாது. படைகளைச் சிறிது சிறிதாக வாபஸ் பெறுவதற்குக் குறைந்தது 16 மாதங்கள் தேவைப்படும் என்று ஒபாமாவே ஒப்புக்கொள்கிறார். அப்போதும்கூட முற்ற முழுக்க எல்லோரும் வெளியேறிவிடப்போவது இல்லை.உலகில் வேறெங்கேயும்விட இராக்கில் அபரிமிதமான எண்ணெய் வளம் உண்டு. 115 பில்லியன் பேரல் எண்ணெய் கண்டறியப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். முட்டி போட்டு அமர்ந்து தோண்ட வேண்டியதுதான் பாக்கி! ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் பேரல் உறிவதாகவே வைத்துக்கொண்டாலும், நூறு நாட்களுக்குக் குறைவில்லாமல் உறிஞ்சிக்கொள்ள முடியும்.'நான் வந்து உறிஞ்சிக்கொள்ளட்டுமா?' என்று கேட்டு, இது வரை 35 சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்திருப்பதாக இராக் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இராக் அர சாங்கம் என்றால், பாக்தாத் தலையாட்டிப் பொம்மை என்று அர்த்தம். அரை நாள் விடுப்பு வேண்டும் என்றாலும், அமெரிக்காவுக்குப் போன் போட்டுக் கேட்கக்கூடியவர் இராக் பிரதமர் நூரி அல் மாலிகி. அப்படியிருக்க, எண்ணெய் தோண்டும் கான்ட்ராக்டை யாருக்குக் கொடுப்பது என்பதை அவரின் நாடாளுமன்றமா முடிவு செய்யப்போகிறது? அப்படியே முடிவு செய்தாலும், அமெரிக்கா பல் குத்திக்கொண்டு வேடிக்கை பார்க்குமா?பிரச்னையின் மையப்புள்ளியே இதுதான். எண்ணெய்! இராக்கை ஆக்கிரமித்தது இதற்குத்தான். சதாமை ஒழித்துக் கட்டியதும் இதற்குத்தான். இந்த நிமிடம் வரை அமெரிக்க வீரர்கள் அங்கே நடத்திக்கொண்டு இருக்கும் அக்கிரமங்கள் அனைத்துக்கும் காரணம் இதுதான். மெக்கெய்ன் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். போரை நிறுத்திக்கொள்வேன் என்று மட்டும் சொல்லித் தப்பிக்க நினைக்கிறார் ஒபாமா.யார் வந்தாலும், யார் போனாலும் இராக்கில் அமெரிக்கப் படைகள் இருந்தே தீரும். அமெரிக்கத் தூதரகத்தைக் காக்கிறோம், அமைதியை நிலைநாட்டுகிறோம், இராக் அரசாங்கத்துக்குப் பாது காப்பு தருகிறோம் என்று ஏதாவது ஒரு விளக்கெண்ணெய் காரணம் இருக்கவே இருக்கு! ஒருவரும் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடி யாது. ஆனால், போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆன பின்பும், இன்னும் ஒரு சொட்டு எண்ணெ யைக்கூட அமெரிக்காவால் உறிஞ்சி எடுக்க முடியவில்லை. காரணம், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பு கள்.பார்த்துக்கொண்டே இருங்கள்... அடுத்தடுத்த மாதங்களில் இராக் குக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகப் போகின்றன. ரகசியமாகவும் வெளிப்படையாகவும்! தேசப் பாதுகாப்பு தொடர்பாக, வர்த்தகம் தொடர்பாக, சட்டம்-ஒழுங்கு தொடர்பாக, எண்ணெய்க் கிணறுகள் தொடர்பாக, வெங்காயம், வெள்ளைப்பூண்டு தொடர்பாக. என்றென்றைக்கும் இராக், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும்படி செய்யப்போகும் ஒப்பந்தங்கள் இவை. பேனா மூடியைத் திறந்து வைத்துக்கொண்டு எப்போ எப்போ எனக் காத்திருக்கிறார் புஷ். இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானால், அப்புறம் எந்த மீட்பராலும் இராக்கைக் காப்பாற்ற முடியாது.'எல்லாமே உங்கள் நன்மைக்காகத்தான்! உங்கள் எண்ணெயை வைத்தே உங்கள் தேசத்தை மினுமினுக்கச் செய்கிறேன். உங்கள் தேசத்தில் மக்கள் ஆட்சி மலரச் செய்கிறேன்' என்று சத்தியம் செய்கிறார் புஷ். 'எண்ணெய், நெய் எல்லாம் கிடக்கட்டும்; குறைந்தபட்சம் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?' என்கிறார்கள் இராக்கியர்கள்.குடி நீர் இல்லை. மின்சாரம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே! போர் இல்லை, போர் இல்லை என்று அமெரிக்கா அலறிக்கொண்டு இருப்பது குண்டு வெடிக்கும் சத்தத்தில் யார் காதிலும் விழவில்லை. உயிரைக் கையில் பிடித்தபடி நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இராக்கியர்கள். 2007&ம் ஆண்டில் மட்டும் 67 மில்லியன் மக்கள் இராக்கில் இருந்து அகதிகளாக வெளியேறிஇருக்கிறார்கள். உலகம் முழுவதும் அவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள்.உடைந்துபோன அவர்களுடைய வீடுகளைக் கட்டிக்கொடுக்கப்போவது யார்? தலையாட்டி இராக் அரசாங்கமா? புஷ்ஷா? வரவிருக்கும் மீட்பர் ஒபாமாவா? நன்றி: ஆனந்த விகடன்.

Tuesday, June 3, 2008

சிறுபான்மையினர்க்கு இட ஒதுக்கீடுமுதல்வர் கலைஞர் ஆணை

சென்னை, மே 31- கிறித்தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தினருக்கு தலா 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் விரை வில் களையப்படும் என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அறிவித்திருந் தார்கள்.அதனடிப்படையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத் தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தால் பணியிடங்கள் நிரப்பப் படுவதில் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய சிறு பான்மையின ருக்கான தலா 3.5 விழுக்காடு பிரதிநிதித்துவம் உடனடியாகக் கிடைக்க ஏதுவாக முதல்வர் கலைஞர் அவர்கள் ஆணை பிறப்பித்து உள்ளார்கள்.இதுகுறித்து நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ள தாவது:கிறித்தவ மற்றும் இசுலா மிய சிறுபான்மை சமுதாயத் தினருக்கு தலா 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்து 15-9-2007 அன்று தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அதனைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல் கள் விரைவில் களையப்படும் என்று முதல் அமைச்சர் கலை ஞர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.அதனடிப்படையில் முதல மைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் நேற்று நடை பெற்ற கூட்டத்தில் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, பொதுப் பணித் துறை அமைச்சர் துரை முரு கன், மாநில நிர்வாக சீர்திருத்தக் குழுத் தலைவர் நீதியரசர் ஏ.கே.ராஜன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தின் தலைவர் ஆ.மு. காசி விஸ்வநாதன், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர் டி.எஸ். சிறீதர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறைச் செயலாளர் என்.வாசு தேவன், சட்டத் துறைச் செய லாளர் தீனதயாளன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது தொகுதி நான்கு போட்டித் தேர்வின் மூலம் நடத்தப்பட்ட தட்டச்சர் மற்றும் சுருக் கெழுத்து தட்டச்சர் போன்ற பணியிடங்கள் மற்றும் இதரப் பணியிடங்களை நிரப்புவதில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு தலா 3.5 விழுக்காடு பிரதிநிதித்துவம் கிடைக்க ஏதுவாக ஆணை பிறப்பித்துள்ளார்கள். இந்த ஆணை உடனடியாக நடை முறைக்கு வருகிறது.
- இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thursday, May 29, 2008

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத இலவச பயிற்சி!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அ‌ளி‌த்து வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள், சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என அனை‌த்து‌ம் இலவசமாக வழங்கப்படுகின்றன. கட‌ந்த ஆ‌ண்டு இ‌ந்த அமை‌ப்‌பி‌ல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும் துணை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர், காவ‌ல்துறை துணை சூப்பிரண்டு போன்ற குரூப்-1 பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த மே மாதம் இந்த மையத்தின் சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல்வாரத்தில் தொடங்கப்படுகிறது. 2009-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்காக புதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மையம் சார்பில் இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 8 மாதம் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, நாகர்கோவில், வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும். நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு ஜூலை மாதமும், பயிற்சியின் தொடக்கம் ஆகஸ்டு மாதமும் நடைபெறும். நுழைவுத்தேர்வு 2 தாள்கள் கொண்டதாக இருக்கும். முதல்தாளில் தேர்ந்தெடுத்து குறிக்கும் வினாக்களும், 2-வது தாளில் கட்டுரை வடிவிலான வினாக்களும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினா கொடுக்கப்படும்.இதில் பொதுஅறிவு, இந்திய வரலாறு, புவியியல், அரசியல், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், பொது ஆங்கிலம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.இதற்கான விண்ணப்பங்களை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம், 28, ஒன்றாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-600035 என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது இ‌ந்த அற‌க்க‌ட்டளை‌யி‌ன் இணையதள முகவரியிலோ பிரதியெடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 4-ந்தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல், பட்டச்சான்றிதழ் நகல், சுய முகவரி எழுதப்பட்ட 3 தபால் உறைகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த தகவலை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.source: http://tamil.webdunia.com/newsworld/career/opportunities/0805/29/1080529023_1.htm

Monday, May 26, 2008

துருக்கியில் இஸ்லாமிய பழக்கவழக்கங்களுக்கு தடை!

துருக்கியில், 40 வருடங்களுக்குப் பிறகு, ஒரு தனிக்கட்சி மக்களவை தேர்த­ல் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சி செலுத்தி வருகிறது. இதுவரை ஐரோப்பிய ஆபாச நாகரீகத்தில் மூழ்கிக் கிடந்த துருக்கி மக்களை அதி­ருந்து விடுபட செய்து, இஸ்லாமிய பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கும் ஓர் அரசாங்கமாக இருந்து வருகிறது. ஐரோப்பா கண்டத்தில் ஒரு சில நாடுகளில் தான் முஸ்­ம்கள் அதிகமாக வாழ்கின்றனர். இதில் ஒன்று துருக்கி; மொத்தம் ஏழுகோடி மக்களில், மிகுதியானோர் முஸ்­ம்கள். இந்நாட்டின் அதிபர், பிரதமர், உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி, அரசாங்க மூத்த வக்கீல் என எல்லா முக்கிய பதவிகளிலும் முஸ்­ம்கள் இருக்கின்றனர். எனினும் ''மதச்சார்பற்ற கொள்கை'' என்ற பெயரில், இஸ்லாமிய பழக்க வழக்கத்திற்கு அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதிக்க முயல்கின்றது.துருக்கியர் :துருக்கியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை ஆராய்வதற்கு முன்னதாக, துருக்கியில் உள்ள முஸ்­ம்களுக்கும் தமிழ்நாட்டில் வாழும் முஸ்­ம்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை காணலாம். இந்த இரு நாட்டு மக்களையும் இணைப்பது இஸ்லாமிய மார்க்கம். மற்றப்படி மொழி, உணவு, உடை பழக்கவழக்கங்களில் மிகுதமாக வேற்றுமையை காணலாம். இருப்பினும் தமிழ்நாட்டில் உள்ள முஸ்­ம்களை இங்குள்ள இந்துக்கள் விளங்காமல் துருக்கியர் என்று சில காலங்களுக்கு முன்பு வரை அழைத்து வந்தனர். 70லி80 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் வாழ்ந்த முஸ்­ம்கள், சரக்குகளை அளக்கும் மரக்கால் போன்ற வடிவில், மெருன் கலரில், குஞ்சம் வைத்த தொப்பியை அணிந்து வந்தனர். அதே தொப்பியை துருக்கியி­ருந்து. மேலும் இறக்குமதி செய்து தமிழ்நாட்டில் உள்ள சில முஸ்­ம்கள் அணிந்து வந்தனர். இதனாலேயே தமிழ் மண்ணில் பிறந்து, இங்கேயே வளர்ந்து வந்த முஸ்­ம்களை சிலர் துருக்கியர் என்று அழைத்தனர். இப்போது இந்த தொப்பி துருக்கியிலு மில்லை தமிழ்நாட்டில் இந்தப் பெயரும் மறைந்து வருகிறது.ஐரோப்பிய யூனியன் :ஐரோப்பிய நாட்டில் உள்ள பதினைந்து நாடுகள் சேர்ந்து ஐரோப்பிய யூனியன் என்ற அமைப்பினை ஏற் படுத்தி உள்ளது. இந்த நாடுகளுக்கு பொதுவான நாணயமாக 'யூரோ' உள்ளது. இந்த நாடுகளுக்கு இடையே வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இந்த நாடுகள் எல்லாம் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளாக மாறி வருகின்றன. இந்த யூனியனில் துருக்கியை சேர்த்துக் கொள்ள தயங்குகின்றனர். ஐரோப்பிய யூனியனில் துருக்கி சேர்ந்தால் அதன் பொருளாதார வளர்ச்சியும் வேகம் அடையும். எனவே ஐரோப்பிய நாகரீகத்தை பின்பற்ற வேண்டும் என்று துருக்கியிலுள்ள வசதி படைத்த முஸ்­ம் கள் நினைக்கின்றனர். ஐரோப்பிய யூனியனில் சேர வேண்டும், அதே சமயம் இஸ்லாமிய பழக்க வழக்கங்களை விட்டு விடக்கூடாது என்ற கொள்கை உடைய அரசியல் கட்சிதான் இன்று துருக்கியில் ஆட்சியில் அமர்ந்து இருக்கும் ''நீதியும் பொருளாதார வளர்ச்சியும்'' என்ற கட்சி.
இன்று துருக்கியில் ஏற்பட் டுள்ள அரசியல் நெருக்கடியை தெரிந்து கொள்வதற்கு முன், மதச்சார்பற்ற கொள்கை, மதவிரோத கொள்கை இரண்டிற்கும் உள்ள வேற்றுமையை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு, குங்குமம் வைப்பதை இந்து மத பழக்கமாக கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள முஸ்­ம் பெண்கள் தலை, முகத்தை மறைத்துக் கொள்ள ஸ்கார்ப் அணிவதை அல்லது உடல் முழுவதும் மறைக்க பர்தா அணிவதை பழக்கமாக கொண்டுள்ளனர்.
இதில் அரசாங்கம் தலையிடாமல் இருந்தால் அது மதச்சார்பற்ற கொள் கைக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ள லாம். இந்துப் பெண்கள் பொட்டு இடுவதையும், முஸ்­ம் பெண்கள் பர்தா அணிவதையும் தடுத்தால் மத விரோத கொள்கையாக எடுத்துக் கொள்ளலாம். இன்று துருக்கியில் உள்ள அரசியல் சட்டம் மதச்சார்பற்ற கொள்கை என்று கருதி, மதவிரோத கொள்கையை சட்டமாக கொண்டு உள்ளது.
துருக்கி நாட்டின் அரசியல் சட்டம், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவி கள் தலையில் 'ஸ்கார்ப்' அணிவதை தடைசெய்து உள்ளது. ரிசப்தய்யூப் எர்டோகன் என்பவரை பிரதமராக கொண்டு இன்று துருக்கியில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், ஸ்கார்ப் அணியும் பழக்கத்தை தடை செய்யும் சட்டத்தை நீக்க முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து அரசாங்க வக்கீல் துருக்கி நாட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கினை எடுத்துக் கொண்ட துருக்கி உச்சநீதி மன்றம் பிரதமரையும், அவருடைய கட்சியையும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யும் வழக்கினை விசாரிக்க ஏற்றுக் கொண்டுள்ளது.
துருக்கி நாட்டின் பிரதமர் எர்டோகனுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் செல்வாக்கு உள்ளது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசாங்கத்தை நீதிமன்றம் மூலம் கலைக்க எதிர்க்கட்சி கள் முயற்சிக்கின்றன என்று எர்டோகன் குற்றம் சாட்டி உள்ளார். சென்ற வருடம் பிரதமர் எர்டோகன், குல் என்பவரை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக தேர்ந் தெடுக்க முயற்சித்தவுடன், துருக்கி ராணுவம், அரசாங்கத்தை கைப்பற்ற நினைத்தது, உடனே எர்டோகன் மக்கள வைக்கு முன்னதாக தேர்தல் நடத்த உத்தரவிட்டார். கடந்த நாற்பது ஆண்டு களில் கண்டிராத அளவிற்கு, மகத்தான வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலும் நடந்து, குல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஒரு வருடமாக ஐரோப்பிய நாகரீகத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் வசதி படைத்த முஸ்­ம்கள், துருக்கியில் உள்ள உயர் அதிகாரிகள் ஒரு பக்கமாக வும், இஸ்லாமிய மார்க்க பழக்கவழக்கங் களை பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை கொண்ட, தற்போது பிரதமராக இருக்கும் எர்டோகன் கட்சியான ''நீதியும் வளர்ச்சியும்'' மறுபக்கமும் செயல்பட்டு வருகின்றன. துருக்கி மக்கள் எர்டோகன் கட்சிக்கு மகத்தான ஆதரவு அளித்து வருவது, உலக முஸ்­ம்களை மகிழ்ச்சி யில் ஆழத்தி உள்ளது.
பொருளாதார வளர்ச்சி :
கடந்த மூன்று ஆண்டுகளில் துருக்கியின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 2007லில் ஆறு சதவீதமாக இருந்தது. வெளிநாட்டு முதலீடு 2007லில், 100 பில்­யன் டாலராக இருந்தது. கோல்டுமென் சாக்ஸ் முதலீடு வங்கி துருக்கி நாட்டிற்கு பதினோறாவது இடத்தை அளித்து உள்ளது. 2002ல் துருக்கியில் 5500 வெளிநாட்டு நிறுவனங் கள் இருந்தன. இன்று துருக்கியில் 17000 வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. துணிமணிகள், சிராமிக்ஸ், கிளாஸ், கப்பல் கட்டுதல், இரும்பு உற்பத்தி, ஆபரண நகைகள் கட்டுமான தொழில்களில் உலகில் முதல் பத்து நாடுகளின் வரிசை யில் துருக்கி இருக்கிறது. துருக்கியில் 40,000 ஏற்றுமதியாளர்கள் இருக்கிறார் கள். உலக வங்கியின் 2008 வருடாந்திர அறிக்கையில், துருக்கி நாட்டிற்கு 57வது இடத்தை அளித்துள்ளது. துருக்கியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மத்திய ஆசியாவில் பல நாடுகளில் முதலீடு செய்துள்ளன.
நிலையான ஆட்சி :
துருக்கியில் சென்ற ஆண்டு பொதுத் தேர்தலும் அதிபர் தேர்தலும் நடந்தன. பல ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் தனிக் கட்சி ஆட்சியை பிடித்து நிலையான அரசாங்கம் அமைந்துள்ளது. இந்த நிலையான ஆட்சியின் மூலம் பிரதமர் எர்டோகன் துருக்கி மக்களின் பொருளாதாரம் சமூக வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முன் வந்துள்ளார். தொலை தொடர்புத்துறை, கல்வித்துறை, நீதித்துறை முத­யவற்றை நவீனப்படுத்த முன்னு ரிமை கொடுக்கின்றார். துருக்கியில் உள்ள தொழிலாளர்கள் திறன் மிக்கவர்கள். தொழில் நுட்ப கலைஞர்களை பெருக்குவதற்கான வழிவகைகளை இப்போது உள்ள அரசாங்கம் செய்து வருகிறது. பொருளாதாரத்தில் நிலையான தன்மையை ஏற்படுத்தி வேகமான வளர்ச்சியை அடைய முற்படுகின்றது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் துருக்கியின் தனி நபர் வருமானம் பத்தாயிரம் டாலராக அடைவதற்கு குறியீடு அமைத்துள்ளது. இதைப்போல் துருக்கியின் ஏற்றுமதி 200 மில்­யன் டாலராக அடைவதற்கு குறியீடு நிர்ணயித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் :
ஐரோப்பிய யூனியனில் துருக்கி சேர்ந்து கொண்டால். துருக்கி நாட்டிற்கு பொருளாதார பயன்கள் கிடைக்கும். துருக்கியி­ருந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு வியாபாரம் தங்குதடையின்றி நடைபெறும். இதன் மூலம் வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் தொடர்பு ஏற்படுட்டு தங்களுடைய பொருளாதார வளர்ச்சியையும் மேம் படுத்த உதவும். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளும் துருக்கியின் முக்கியத்துவத்தை உணர்கின்றன. முழு உறுப்பினர் ஆவதற்கு பத்து பதினைந்து ஆண்டுகள் கூட ஆகலாம். துருக்கி ஐரோப்பியா யூனியனில் உறுப்பினராகிவிட்டால் பலரின் நீண்டநாள் கனவு நிஜமாகி விடும். இதில் உறுப்பினர் ஆவதற்கு துருக்கி மக்களின் வாழ்க்கை தரம் ஐரோப்பிய மக்களின் வாழ்க்கை தரத்திற்கு ஈடாக இருக்க வேண்டும். இதனால் துருக்கி அரசாங்கம் பல பொருளாதார சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. அதே சமயம் துருக்கி மக்கள் இஸ்லாமிய கொள்கைகளை விட்டுவிடுவதற்கு தயாராக இல்லை என்பதை பல காலகட்டங்களில் காட்டி இருக்கின்றனர். உதாரணமாக போஸ்னியா, மான்டி நெக்ரோ, ஈராக், சோமா­யா, ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் முஸ்­ம்களுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம், முஸ்­ம்களுக்கு ஆதரவாக துருக்கி அரசாங்கமும் அதன் மக்களும் குரல் கொடுத் திருக்கின்றனர். இது போன்ற நேரங்களில் ஐரோப்பாவில் உள்ள நாடுகள் கிருஸ்தவ மக்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள். முஸ்­ம்களுக்கு பல நாடுகளில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம், இந்த நாடுகள் தலையிடாமல் அல்லது எதிராக நடந்து கொண்டதை இங்கே குறிப்பிடலாம்.
துருக்கி - இந்திய வியாபாரம் :
சென்ற மாதம் துருக்கி வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் குர்சத் தர்மன் இந்தியாவிற்கு வந்திருந்தார். இந்தியாவிற்கும் துருக்கி நாட்டிற்கும் வியாபாரம் பெருகுவதற்கும் பல வாய்ப்புகள் உள்ளதை எடுத்துக் கூறினார். இரு நாடுகளும் பல வருடங்களாக நட்புடன் இருந்து வருகிறது. இரு நாட்டு வியாபார நிறுவனங்களும் பல துறைகளில் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு பொருளாதார வளர்ச்சியை பெருக்குவதற்கான வழிவகைகளை எடுத்துக் கூறினார். இந்தியாவிற்கும், துருக்கிக்கும் வியாபார உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பு இல்லாமல் பரஸ்பர பாதுகாப்பு வியாபாரம், முதலீடுகள் மேம்படுவதற்கான வழிவகைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் மத்தியில் இந்திய துருக்கி நாடுகளுக்கான பொருளாதார கமிஷன் சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையே வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெற வழிவகைகள் வகுக்க இருக்கிறது.
ஏற்றுமதி இறக்குமதி :
துருக்கியின் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியா முக்கியமான பங்கு வகிக்கின்றது. 2007லில் துருக்கியில் இருந்து 347 மில்­யன் டாலர்கள் மதிப்புள்ள பொருள் களை இந்தியாவிற்கு துருக்கி ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவி­ருந்து 2.30 பில்­யன் டாலர்கள் மதிப்புள்ள பொருள்கள் துருக்கிக்கு ஏற்றுமதியாகி உள்ளன. ஆசியா பசிபிக் மண்டலத்தில் துருக்கி இந்தியாவுடனான வர்த்தகம் நான்காவது இடத்தில் உள்ளது. இரும்பு, எஃகு, தாது பொருள்களும், வாகன உதிரி பாகங்களும், நிலக்கரியும், துருக்கியி­ருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி யாகின்றன. பருத்தி, பருத்தி நூல், பா­யஸ்டர், பெட்ரோ ­யம் என பல ரசாயன பொருள்களும் இந்தியாவி ­ருந்து துருக்கிக்கு ஏற்றுமதியாகின்றன. இந்தியாவும் துருக்கியும் கூட்டு சேர்ந்து பல தொழிற்சாலைகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.
துருக்கியில் உள்ள கட்டுமான தொழில் ஒப்பந்தக்காரர் கள் 70 வெளிநாடுகளுக்கு சென்று 4,200 திட்டங்களில் ஈடுபட்டு அதனுடைய மதிப்பு 100 பில்­யன் டாலராக உள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அடுத்தப்படி யாக துருக்கியின் ஒப்பந்தக் காரர்கள் கட்டுமானத் தொழி­ல் உலகின் மூன்றாவது இடத்தில் இருக்கின்ற னர். துருக்கியில் உள்ள ஒப்பந்தக்காரரர்கள் இந்தியாவில் உள்ள கப்பல் துறைமுகங்கள், விமானத்தளங்கள், தொலைத்தொடர்பு துறைகள் என 500 பில்­யன் டாலர் மதிப்புள்ள திட்டங்களில் ஈடுபட இருக்கின்றனர். 2007லில் இந்தியாவி­ருந்து 45,000 சுற்றுலா பயணிகள் துருக்கிக்கு சென்று வந்துள்ளனர்.

Thursday, May 15, 2008

உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை!

உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும்.உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது.ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும். அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 23 சதவீதம் பேர் மிகமிக குண்டான தோற்றம் (Obesity) கொண்டவர்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.கனடாவைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அதிக எடை கொண்டவர்களே. இங்கு 6 பேரில் ஒருவர் குண்டானவர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து டயட், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதெல்லாம் ஏட்டளவிற்குத்தான் என்பது தெளிவாகிறது.ஆனால் நடைமுறைக்கேற்றவாறு அன்றாடம் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியைக் கடைபிடித்தால், பாதுகாப்பான முறையிலும், நிரந்தரமாகவும் உடல் எடையைக் குறைக்க முடியும்.அதற்கான சில டிப்ஸ். படித்து விட்டு பயனுள்ள தகவல் என்று மட்டும் கூறாமல், பயன்படுத்தி பலன் அடையுங்கள்.பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.இதற்கு நீங்கள் சாப்பிடும் அளவு கலோரி சக்தியை விட உடலில் அதிக கலோரிகள் எரிந்து செயலாற்றச் செய்தல் வேண்டும். சாப்பிடும் அளவைக் காட்டிலும் அதிக அளவு சக்தியை உடல் பயன்படுத்திக் கொள்ளுமானால், உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்க ஏதுவாகும். குறைவாக சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் நீங்கள் எந்தவகை உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதும் மிக முக்கியம்.சாப்பிடும் உணவானது உங்களின் உடல் எடை குறைப்புத் திட்டத்திற்கு மையமாக அமைய வேண்டியது அவசியம். எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளினால் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.மாமிசத்தில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது. அதுவே பழ வகைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. என்றாலும் குறுகிய கால உடல் எடை குறைப்புக்கு பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வnறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் அதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோயிலிருந்து தப்பிக்கிறீர்கள்.பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை. எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. சில வகை உணவுகள் உங்களின் சக்தி தேவைக்கேற்ப இருப்பதுடன் உடனடியாக அதிக கொழுப்பை தருபவையாக அமைந்து விடலாம்.கேக், கொழுப்பு நிறைந்த மாமிசம், பால், கிரீம், சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்வார்கள். இது தவறான அணுகுமுறை.உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன்றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள். உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.
சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்லிம் ஆகுங்கள்!

Wednesday, May 7, 2008

குவாண்டனமோ சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அல்ஜஸீரா கேமராமேன்!

அமெரிக்கப் படையினரால் குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டு, சொல்லவொண்ணாக் கொடுமைகளைச் சந்தித்த அல்ஜஸீரா செய்தியாளர் ஸாமி அல்-ஹாஜ், கடந்த வெள்ளியன்று (02-05-2008) விடுதலை செய்யப்பட்டுள்ளார். தன் மகன் பிறந்த போது கைதான ஸாமி, உருக்குலைந்த உருவத்துடன் நடைப் பிணமாகச் சொந்த நாட்டிற்குத் திரும்பி, தன் ஏழு வயது மகனை இப்போதுதான் சந்திக்கிறார்.


கடந்த டிசம்பர் 2001இல் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செய்தி சேகரிப்பிற்காக ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பில் இருந்த கேமராமேன் ஸாமி, அல் காயிதா அமைப்பினைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்டதாகக் காரணம் கூறி கைது செய்யப்பட்டார். சர்வதேசப் பத்திரிக்கைகளுக்கான சட்டப்பூர்வமான விசா விதிமுறைகளுடன் ஆப்கானிஸ்தான் எல்லையில் செய்தியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஸாமி கைது செய்யப்பட்ட சில வாரங்களில் அமெரிக்கப் படையினரால் கியூபாவின் குவாண்டனமோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
அல்ஹஜ் கைது செய்யப்பட்ட மாத்திரத்திலேயே எவ்வித குற்றப்பத்திரிக்கையும் பதிவு செய்யப்படாமலே பயங்கரவாதிகள் பட்டியலில் ஸாமி சேர்க்கப்பட்டார் என்பதும் சிறையில் அடைக்கப்பட்ட நாட்களில் இதுவரை 130 முறைகள் விசாரணை என்ற பெயரில் அவர் கொடுமைக்குள்ளாக்கப் பட்டார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
ஸாமிக்காக வழக்குத் தொடுத்துள்ள ஜக்கரி கேட்ஜ் நெல்சன் என்ற வழக்கறிஞர் "இவ்விடுதலைக்கானக் காரணம் அநீதியை எதிர்த்து, கடந்த ஒன்றரை வருடங்களாக ஸாமி அல்-ஹாஜ் சிறைச்சாலைக்குள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டமே!" என்று கூறியுள்ளார். உணவு உண்ண மறுத்து, சாத்வீக முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்த ஸாமிக்குக் கட்டாயப்படுத்தி கடந்த 16 மாதங்களாக மூக்கின் துளை வழியாக குழாய் மூலம் கட்டாயப்படுத்தி உணவு உட்செலுத்தப்பட்டுள்ளது. கடுமையான மன-உடல்ரீதியிலான கொடுமைகளால் அவரது சிறுநீரகமும் கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சிறுநீரகக் குறைபாடுகளால் புற்றுநோய் தாக்கியிருப்பதாகவும் இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இக்கொடுமைகளால் 39 வயதே நிரம்பியுள்ள ஸாமி 80 வயது முதியவரின் உடல் தோற்றத்தைப் பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விடுதலை பெற்றுத் திரும்பிய நிமிடத்திலிருந்து மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் ஸாமி.இந்நிலையில் சூடான் தலைநகர் கர்த்தூமில் உள்ள ஸாமி அல்-ஹாஜின் இல்லத்திற்கு வருகை தந்துள்ள அல்ஜஸீராவின் பொது இயக்குனர் வாதாஹ் கன்ஃபார், அமெரிக்காவின் இச்செயல் பற்றி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செயல்பாடுகளை அமெரிக்காவிற்கு ரகசியமாக அறிவித்துத் தரும் உளவாளியாக விலைபேசக் கடுமையாக முயன்றும் அதற்கு உடன்படாத காரணத்தாலேயே ஸாமி அல்-ஹாஜ் குவாண்டனமோவுக்கு அனுப்பி, துன்புறுத்தப்பட்டுள்ளதாக இவர் மேலும் கூறியுள்ளார்.
ஸாமி கைது செய்யப்பட்டு குவாண்டனமோவில் அடைக்கப்பட்ட நாள் முதல் அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளைப் பல கட்டப் போராட்டங்களாக அல்ஜஸீரா முன்னின்று நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
நேர்மையான மற்றும் துல்லியமான செய்திகளினால் உலகப் புகழ்பெற்றுள்ள செய்தி நிறுவனமான அல்ஜஸீராவிற்கே இந்நிலை எனில் சாமான்யர்களின் கதி என்ன என்பதுதான் சர்வதேச அளவில் மக்களின் மனதில் எழுந்துள்ள கேள்வியாகும். பத்திரிகை சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் மேற்கத்திய உலகம் இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பது மனித நேயம் மிதிபடுவதையே மெய்ப்பிக்கிறது.
நன்றி: சத்தியமார்க்கம்.காம்