Monday, April 28, 2008

கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்கள் மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது!.







27.04.2008 ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கடலூர் மாவட்டம் புவனகிரியில் ராகவேந்தரா திருமண மண்டபம் மற்றும் அதன் சுற்று வளாகத்தில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்கள் மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது. மாநாட்டிற்கு ஐ.டி.ஜே கடலூர் மாவட்ட தலைவர் ஏ.கலிமுல்லாஹ் தலைமை வகித்தார்,ஐ.டி.ஜே கடலூர் மாவட்ட பேச்சாளர் மவ்லவி.ராஜ்முஹம்மது மன்பஈ மாநாட்டு அறிமுக உரையாற்றினார். கள்ளகுறிச்சி அல்ஹசனாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியை மும்தாஜ் ஆலிமா இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். இஸ்லாமிய பெண்கள் கல்வியில் பின்தங்குவது ஏன்? ஏன்ற தலைப்பில் மவ்லவி.எம்.என்.அப்துல்காதிர் நூரி அவர்கள் உரையாற்றினார். ஆலிமா ரம்ஜான் அவர்கள் சினிமா சீரியலால் ஏற்படும் பாதிப்பு என்ற பொருளில் உரையாற்றினார். வேண்டாமே வரதட்சனை என்ற தலைப்பில் ஆலிமா சுமையா உரையாற்றினார். தற்போது உலகலாவிய அளவில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைக்கு தீர்வு என்ன? என்ற பொருளில் மவ்லவி சதகதுல்லாஹ் உம்ரி அவர்கள் உரையாற்றினார்.புவனகிரி கப்ருஸ்தான் பிரச்சினை சம்மந்தமாக ஒற்றை தீர்மாணத்தை மாவட்ட வணிகரணி செயலாளர் தமீமுல் அன்சாரி அவர்கள் வாசித்தார்.இறுதியாக மவ்லவி முப்தி உமர் சரீப் காஸிமி அவர்கள் பெண்களுக்கு இஸ்லாம் தறும் சுதந்திரம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் முஹம்மது ரபி நன்றியுரை கூற மாநாடு இனிதே முடிவுற்றது.மாநாட்டில் ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட பெண்களும் நாநூறுக்கு மேற்;பட்ட ஆண்களும் கலந்துக்கொண்டனர். அனைவருக்கும் காலையில் குளிர்பானம், மதிய உணவு, மாலையில் தேனீர் வழங்கப்பட்டது. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!