Tuesday, February 12, 2008


ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்பில் அவசரப்படக்கூடாது: தென்ஆப்பிரிக்கா!


பிரிட்டோரியா: ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பொருளாதாரத் தடை ஏற்படுத்துவதற்கான சில வன்சக்திகளின் முயற்சிகளுக்கு எதிராக தென்ஆப்ரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது. ''ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்தான சர்வதேச அணு ஆயுதக் கழகத்தின் விரிவான புதிய அறிக்கை வெளிவர இருக்கையில், இவ்விஷயத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய தேவை என்ன?'' என ஐநா பாதுகாப்புச் சபை உறுப்பினரான தென்ஆப்பிரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.
ஈரானுக்கு எதிராக மூன்றாம் கட்டப் பொருளாதாரத் தடைக்குத் தயாராகும் தீர்மானம் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுக்கிடையில் சென்ற நாட்களில் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களுக்குப் பயணத்தடை, அவர்டம் நிறுவனங்களின் சொத்து முடக்கல், ஈரானின் பொருளாதார நிறுவனங்களைக் கண்காணித்தல் போன்ற ஆலோசனைகள் தீர்மானத்தில் இருக்கின்றன. "பிப்ரவரி 20 அன்று சர்வதேச அணு ஆயுதக் கழகத்தின் அறிக்கை வெளிவரும். ஒரு நாட்டிற்கு எதிராக ஒரு நடவடிக்கை எடுக்கும் பொழுது அதற்குத் தேவையான தெளிவான ஆதாரங்கள் கைவசம் உள்ளது என உறுதி படுத்தப்பட வேண்டும். நிரபராதிகளான ஒரு சமூகத்தை நாம் தண்டித்து விட்டால் அதன் பின்விளைவு எப்படி இருக்கும்?'' என தென்ஆப்பிரிக்காவின் ஐநா பாதுகாப்புச் சபை பிரதிநிதி துமிசானி குமாலோ கேள்வி எழுப்பினார். கூடுதல் தகவல்கள்: 1. ஈரான் அடுத்த மூன்று வருடங்களில் அணு ஆயுதம் தயார் செய்யும் என மொசாத் கூறியுள்ளது. இது அமெரிக்காவின் CIA கூறிய 2015க்குள் ஈரானால் அணு ஆயுதம் தயார் செய்ய இயலாது என்ற அறிக்கைக்கு நேர் மாறானதாகும். சிரியா மற்றும் ஹிஸ்புல்லாவிற்கு அதிக வீரியமுள்ள ராக்கட்டுகள் கொடுப்பதற்கு ஈரான் தயாராகி வருவதாகவும் மொசாதின் டைரக்டர் மீர் பாகன் இஸ்ரேலிய வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அளித்துள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2. ஈரான் வெற்றிகரமாகப் பரிசோதித்த ராக்கட் ஐரோப்பாவிற்கு அபாயத்தை விளைவிக்கும் என பெண்டகன் பிரமுகர் ஜெஃப் மோரல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானிடமிருந்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே போலந்தும் செக் குடியரசும் ராக்கட் எதிர்ப்பு தளங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என அவர் தெரிவித்தார். முன்னர் போலந்தும் செக் குடியரசும் உருவாக்க இருக்கும் ஏவுகணை எதிர்ப்புத் தளத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாரான அமெரிக்காவிற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஐரோப்பாவில் உள்ள தங்களின் நட்பு நாடுகளையும் அமெரிக்கவையும் ஈரானிடமிருந்துப் பாதுகாத்துக் கொள்ளவே ஐரோப்பாவில் ஏவுகணை எதிர்ப்புக் களம் உருவாக்க அமெரிக்கா முயல்கிறது என அதற்கு அவர் நியாயம் கற்பித்தார்.

காதலர் தினம்-VALENTINE’S DAY

காதலர் தினம்-VALENTINE’S DAY-عيد الحب
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....

காதலர் தினம்
தமிழாக்கம் - சகோ.அபு இஸாரா
சமீப காலமாக பொதுமக்ள் மத்தியில் பரவிவரும் காதலர் தினம் பற்றி அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் கீழ்க்கண்டவாறு வினவப்பட்டது:இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக...சமீப காலமாக காதலர் தினம் கொண்டாடி மகிழ்வது பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது. காலணி முதல் தலையணி வரை முற்றிலும் சிகப்பு நிறத்தால் ஆன ஆடைகளை அணிந்து, இந்நிகழ்ச்சியை ஒரு பண்டிகையாக கொண்டாடும் கிருத்துவர்கள், தங்களுக்கிடையே சிகப்பு நிற மலர் கொத்துக்களையும் பறிமாறிக் கொள்கின்றனர். இது போன்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் கொண்டாடுவது, அல்லது இது போன்ற நிகழச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது பற்றி முஸ்லிம்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை...!அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் அளித்த விளக்கம்:உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...காதலர் தினம் என்ற நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கோ அல்லது அதுபோண்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கோ கீழக்கண்ட காரணங்களால் இஸ்லாத்தில் ஒருபோதும் அனுமதியில்லை.
1. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒரு (பித்அத்) புதினமாகும். 2. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காத தவறான வழிகளில் ஒருவாகும் காதல் மற்றும் தீய பழக்கங்க ஊக்குவிக்கின்றது.3.இதுபோன்ற நிகழச்சிகள் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மனதில் தவறான எண்ணங்களை உருவாக்குவதோடு, நபிவழிக்கு முற்றிலும் முரணாணதாகும்.காதலர் தினம் போன்ற நாட்களில் உணவோ, உடையோ அல்லது குடிபானங்களோ எதுவாக இருந்தாலும் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு மாற்றமாக இருக்குமாயின் அதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் விலகி இருப்பதே உண்மையான முஃமினுக்கு உகந்ததாகும்.நெறிமுறையின்றி எல்லாவற்றையும் பின்பற்றுவோம் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், நெறியுடன் வாழும் முறைகளை மற்றுமே பின்பற்றுவோம் என்ற கொள்கையை உறுதியோடு செயல்படுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தை சார்ந்தவராக இருப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பெருமிதம் கொள்ள வேண்டும். தெரிந்தோ அல்லது தெறியாமலோ இருக்கின்ற இதுபோன்ற (பித்அத்) புதினமான காரியங்களில் ஈடுபடுவதில் இருந்தும் நம்மை காப்பாற்றி, நேர்வழி காட்ட போதுமானவன் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனே.