Thursday, February 28, 2008

குர்ஆனில் கருவளர்ச்சி! -1-

கருவளர்ச்சியில் காணப்படும் படிநிலைகளில் கரு எவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்து மனித உருவைப் பெறுகிறது என்பதற்கு குர்ஆனில் ஆதாரமில்லை என முன்வைக்கப்படும் வாதத்தையும். விலங்கிலிருந்து மனிதன் தொன்றினான் என்ற கருவியல் சான்றிதழையும் குர்அன் முற்றாகமறுத்து நாத்திக வாதத்திற்கு சாவு மணி அடிக்கிறது அல்குர்ஆன்.
நாத்திகச் சிந்தனையில் வெளிப்படும் ஐயத்தைப் போக்கி விலங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை எனும் தன்னுடைய கூற்றை நிறுவிக் காட்ட கருவியல் குறித்த தன்னுடைய ஆழ்ந்த ஞானத்தை கீழ்க்காணும் வசனங்களில் ஓங்கி ஒலிக்கிறது திருமறைக் குர்ஆன்!.
அருள்மறை குர்ஆன் கூறுகிறது:
'பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம், பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டம் ஆக்கினோம், பின்னர் அத்தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம், பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம், பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன:; (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.'(அத்தியாயம் 23 ஸுரத்துல் முஃமினூன் - 12 முதல் 14 வரையிலான வசனங்கள்.)
கருவியலில் காணப்படும் படிநிலைகள் என்னவென்றும், அந்தப் படிநிலைகளில் கரு எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்றும் திருமறைக்குத் தெரியவில்லை என்பதால் அதன் கூற்றைப் பொருட்படுத்த வேண்டிய தில்லை என இதற்கு மேலும் யாரேனும் எண்ணம் கொள்ளலாமா? அப்படி யாரேனும் எண்ணிக் கொண்டால் அவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்று நம்மால்தான் ஏற்க இயலுமா? என்ன கூறுகிறது இந்த வசனங்கள்?.
நூற்றுக் கணக்காண வருடங்கள் பற்பல விஞ்ஞானிகளின் இடைவிடாத உழைப்பால் ஆய்வுக் கூடங்களில் கருவுற்று நுண்ணோக்கியால் பிரசவம் பார்த்து நவீனஅறிவியல் உலகால் மட்டுமே ஈன்றெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிநவீன கருவியல் கண்டுபிடிப்பையல்லவா இம்மாமறைக் குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி நிற்கிறது! இதற்கீடாகவா மற்றொரு அற்புதம் இப்பேரண்டத்தில் காணப்போகிறது. (வரும்....)