Tuesday, April 29, 2008

நபிமொழி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நபிமொழி

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நீங்கள் இறை விசுவாசம் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் வரை, நீங்கள் இறை விசுவாசிகளாக ஆக முடியாது. நீங்கள் எதைச் செய்தால் அன்பு செலுத்திக் கொள்வீர்களோ, அதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதை பரப்புங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 848)

அபூயூசுஃப் என்ற அப்துல்லா இப்னு ஸலாம்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'மனிதர்களே! ஸலாம் கூறுவதை பரப்புங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். 'ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுஙகள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 849)

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''வாகனத்தில் செல்பவர், நடந்து செல்பவருக்கும், நடப்பவர், உட்கார்ந்திருப்பவருக்கும், சிறு கூட்டம், பெரும் கூட்டத்தினருக்கும் ஸலாம் கூற வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 857)

அபூஉமாமா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''இறைத்தூதர் அவர்களே! இரண்டு மனிதர்கள் சந்தித்தால் அவ்விருவரில் எவர் ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பது? என்று கேட்கப்பட்டது. ''அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக நல்ல தகுதியானவரே (ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பார்)'' என நபி(ஸல்) பதில் கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 858)

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''மகனே! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும் அபிவிருத்தியாக இருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 861)

''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

No comments: