Saturday, January 26, 2008

எது புதுமை

எது புதுமை
பரபரப்பான இந்த உலக சூழ்நலை மனிதன் நாகரீகத்தின் அதி உச்சியில் இருப்பதாக நினைத்து அதற்கு ஏற்றார்போல் தன்னை வெளிநாடுகளை பாருங்கள் எவ்வளவு சுத்தமாக சுகாதாரமாக இருக்கிறது நமது நாட்டையும் பாருங்கள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று கூறுபவர்கள் அதுப்போல் நாமும் நம்நாட்டிலேயும் ஆக்க வேணடும் இருக்க வேண்டும் என்று அதை செயலாக்க முனைவதில்லை. கோட்டு சூட்டுடன் கண்ணில் பெரிய மனிதர் தோரனையுடன் மோட்டார் சைக்கிளில் ஏரி செல்லும்போது அந்த கம்பீரம் எல்லாம் சரிதான் ஆனால் வாகன பயணத்தின் போது சாலையில் வேறு யாரும் வருவார்கள் என்று அறிந்தும் எச்சிலை துப்பும்போது பின்னால் வருபவர்கள் மீது அது பட்டு அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமே என்ற சிறு விசயங்களில் கூட இன்னும் மனிதன் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியாத நிலை.
இன்னும், இன்று உலகில் தகவல் தொடர்பு மற்றும் இதர துறையில் அசாதரன வளர்ச்சி இந்த வளர்ச்சியைக்கொண்டு மனிதன் தன் நிலையை உயர்த்திக்கொள்ள பல வழிகள் இருந்தும் அதை விட்டு விட்டு செல்போனில் படம் எடுக்க முடியும் என்ற நுட்பத்தைக்கொண்டு அந்நிய பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே படம் எடுத்து வக்கிர ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் இழிவான வேலையை தான் நாகரீகம் என்ற பெயரில் பலரும் செய்து வருகிறார்கள். மேலும், உலகை கை விரல் நுனியில் வைத்து இருக்கும் நுட்பமாகிய இன்டர்நெட் வசதியை வைத்து இன்றியமையாத பல தகவல்களை சேகரிப்பதை விட்டு விட்டு செக்ஸ் தளத்தில் மணிக்கணக்கில் செலவிட்டு மனதளவிலும் உடலளவிலும் வீனாய் போபவர்கள் தான் இன்று அதிகமாக இருக்கிறார்கள். இன்னும், தனக்கு பிடிக்காதவர்கள் மீது வேண்டுமென்றே அவதூறுகளை சுமத்தி அதை பரப்பி அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னாமாக்கும் பழிவாங்கும் விசயங்களும் இந்த வழியில் தான் நடந்தேறுகிறது.
இதற்கெல்லாம் மூல காரணம், என்னதான் மனிதன் நாகரீகத்தின், விஞ்சானத்தின் உச்சத்தை அடைந்து விட்டாலும் மனிதன் இன்னும் மனங்களில் மேன்மை அடையவில்லை. இன்னும் மனிதனின் மனச்சிந்தனை பழிவாங்குவதிலும், வக்கிர எண்ணங்களிலும் அலை மோதிக்கொண்டிருந்தால் மனிதாபிமான மற்றும் புதுமையான சிந்தனை மலர வாய்ப்பேது?. இவற்றையும் மீறி நல்ல மனங்களையும் நற்சிந்தனைகளையும் சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்துபவர்களை குழம்பில் கருவேப்பிலையாகத்தான் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது.கருவேப்பிலைகளின் எண்ணிக்கை கூடினால் தான் எண்ணங்களில் புதுமை வரும். மேலும், எப்போது ஒரு விசயம் தவறு என்று மனதிற்கு படுகிறதோ அப்போதே அதிலிருந்து நாம் விடுபட்டாக வேண்டும். இச்சிந்தனை நம் மனதுக்குள் வந்து விட்டாலே நமக்குள் நல்ல ஒரு மாற்றம் ஏற்படும் இன்சாஅல்லாஹ்.

No comments: