Wednesday, March 26, 2008

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….3

12. யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வா யாக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!.
13. யா அல்லாஹ்! (சகல) காரியங்களிலும் நிலைத்திருப்பதையும், நேர்வழியில் உறுதியையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். இன்னும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திடவும் உன்னை அழகிய முறையில் வணங்கிடவும் நான் உன்னிடம் கேட்கின்றேன். தூய்மையான உள்ளத்தையும் உண்மை உரைக்கும் நாவையும் நான் உன்னிடம் கேட்கிறேன். உனக்குத் தெரிந்த நலவுகளைக் கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த (எல்லாப்) பாவங்களிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நீயே மறைவானவற்றை யெல்லாம் மிகவும் நன்கறிந்தவன்!
14. யா அல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! என் ஆத்மாவின் கெடுதிகளிலிருந்து என்னைக் காத்தருள்வாயாக! நற்காரியங்களைச் செய்யவும் வெறுக்கத்தக்க காரியங்களை விட்டு ஏழைகளை நேசிக்கும் தன்மையையும் தந்து என் பாவங்களை மன்னித்து எனக்கு அருள்புரியும்படி நான் உன்னிடம் கேட்கின்றேன். உன் அடியார்களை குழப்பத்தில் ஆழ்த்த நீ விரும்பினால், குழப்பத்தில் ஆழ்த்தப்படாத நிலையிலேயே என்னை உன்னளவில் மரணிக்கச் செய்து விடுவாயாக!
15. யா அல்லாஹ்! உன்னுடைய நேசத்தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் உன் நேசத்தின் பக்கம் என்னைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய எல்லா அமல்களின் நேசத்தைபும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! சிறந்த கேள்வியையும் சிறந்த பிரார்த்தனையையும் சிறந்த வெற்றியையும் சிறந்த நன்மையையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். என்னை நீ உறுதிப்படுத்துவாயாக! என்னுடைய தரா சு-வை (நன்மையால்) அதிக எடையுள்ளதாக ஆக்கியருள்வாயாக! என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக! என் அந்தஸ்த்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையையும் இன்னும் (ஏனைய) வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வாயாக! என் பாவங்களை மன்னித்தருள்வாயாக! சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நான் உன்னிடம் கேட்கின்றேன்.
16. நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நன்மைகளின் ஆரம்ப, முடிவு, அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நான் உன்னிடம் கேட்கின்றேன்.
17. யா அல்லாஹ்! என்னுடைய அந்தஸ்தை உயர்த்துவதையும் என் பாவத்தை மன்னிப்பதையும் நீ என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதையும் என் அபத்தை (கற்பை) பத்தினித் தனமாக்குவதையும் நீ என்னுடைய பாவங்களை மன்னிப்பதையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

No comments: