Thursday, March 27, 2008

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….4

18. யா அல்லாஹ்! என் பார்வையிலும், என் கேள்விப்புலனிலும், என் உடலமைப்பிலும், என் குணத்திலும், என் குடும்பத்திலும், என் உயிர்வாழ்விலும், என்னுடைய அமல்களிலும் நீ அருள்புரியும்படி நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். என்னுடைய நற்காரியங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக! சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.
19. யா அல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே! உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக! உள்ளங்களை திருப்பக்கூடிய அல்லாஹ்வே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக!.
20. யா அல்லாஹ்! (உன் அருட்கொடைகளை) எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக! எங்களுக்குக் குறைத்துவிடாதே! எங்களை கண்ணியப்படுத்துவாயாக! இழிவு படுத்திவிடாதோ! (உனது அருட்கொடைகளை) எங்களுக்குத் தந்தருள்வாயாக! உன் அருளிலிருந்து எங்களை நிராசையற்றவர்களாக ஆக்கிவிடாதே! யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக!
21. யா அல்லாஹ்! உனக்கு மாறு செய்வதை விட்டும் எங்களை தடுக்கக்கூடிய (உன்னைப்பற்றிய) அச்சத்தையும், உன்னுடைய சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும் வழிபாட்டையும், உலகச் சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் உறுதியையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எங்களுடைய செவிப்புலன்களையும், பார்வைகளையும் (உடல்) சக்திகளையும் நீ எங்களை வாழ வைக்கும் காலமெல்லாம் (குறைவின்றி) இயங்கச் செய்வாயாக! அதனை எங்கள் வாரிசுகளுக்கும் (சந்ததிகளுக்கும்) ஆக்குவாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள்மீது விரோதம் கொண்டவர்களுக்குப் பாதகமாக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக! இவ்வுலகையே எங்கள் நோக்கமாகவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! எங்களுடைய மார்க்த்தில் எங்களுக்கு சோதனைகளை ஏற்படுத்திவிடாதே! எங்களின் பாவங்களினால் எங்கள்மீது இரக்கம் காட்டாத, உன்னை பயப்படாதவனை எங்கள் மீது பொறுப்பாளியாக ஆக்கிவிடாதே!
22. யா அல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும், உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து நல்லறங்களின் பிரதிபலன்களையும் அனைத்து பாவங்களைவிட்டும் பாதுகாப்பையும் சுவர்க்கத்தைப் பெற்று வெற்றி பெற, நரகை விட்டும் ஈடேற்றம் பெற (அருள் புரியுமாறும்) நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.

No comments: